பி.சுசீலா: முருக நம்பி!
"ஓடும் நதி" -ன்னு ஒரு படம்; MSV Music;
ரவிச்சந்திரன் - சரோஜா தேவி நடிச்சது! அதிலிருந்து ஒரு முருகன் பாட்டு இந்தச் செவ்வாய்க்கிழமை:)
வயலூர் = மிக அற்புதமான முருகத் தலம்!
கோயில் சிறுசு தான்; ஆனா சூழ் வயல்கள் பெருசு!
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளும் நாயக - "வயலூரா" -ன்னு திருப்புகழ்!
அந்தத் "திருப்புகழ்" -ன்னு அமைப்பு உருவானதே இந்த வயலூரில் தான்!
பொதுவா, "நம்பி" (எ) சொல், வைணவத்தில் அதிகம்! (சைவத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உண்டு)
திரு-மாலவன் ஆசை மகளாம் வள்ளி = அவளைப் புணர்ந்த அவனும் = "நம்பி" ஆகி விட்டானோ?:))
பாடலைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்:
Yourlisten.com - odum nathi - psusheela
(முருகா அறிவோம் முருகா
வருவோம் முருகா வயலூர்
முருகா வயலூர் முருகா)
குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி - தன்னை
என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி
கடந்ததும் நடந்ததும் கந்தன் விளையாட்டு
காலங்கள் யாவிலும் நல்ல வழி காட்டு
உள்ள துன்பம் யாவும் இல்லை எனும்போது
உன்னையன்றி யாரை நம்பும் இந்த மாது?
நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா?
நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா?
சந்தனம் குங்குமம் சிந்தும் வயலூரா
ஓம் எனும் மந்திரம் சொல்லி வரும் வேலா
மஞ்சள் முகம் பார்த்து பிள்ளை மொழி கேட்டு
மன்னன் மணிக் கைகள் "அஞ்சல்" என்று காட்டு!
நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா
நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா
படம்: ஓடும் நதி
குரல்: பி.சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: MSV
1 comments:
வணக்கம்,
http://kuppuastro.blogspot.in வலைப்பூவின் மூலம் தங்களின் முருகனருள் வலைப்பூவின் இணைப்பினை இன்று பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. பாடகர், இசையமைப்பாளர் வாரியாக, இனம் பிரித்து மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தங்களுக்கு முருகனருள் என்றும் உண்டு.
எனது அருட்சிவம் ( www.siddharkal.blogspot.in ) வலைத்தளத்திலும் தங்களின் வலைத்தள முகவரியை வெளியிட அனுமதி வேண்டுகிறேன்.
Post a Comment