மதுரை சோமு: துணைவன்! வழித் துணைவன்!
மதுரை சோமு -ன்னாலே நினைவுக்கு வரும் பாடல்:
தெய்வம் படத்தில் - மருதமலை மாமணியே முருகய்யா தான்!
அந்தப் பாட்டின் வரிகளும், வேகமும்,
கனத்த குரலின் உருக்கமும், அப்படியே ஆளைக் கட்டிப் போடும்!
ஆனால் அதே மதுரை சோமு, தேவர் பிலிம்ஸின், சஷ்டி விரதம் என்கிற இன்னொரு படத்திலும் பாடி இருக்காரு! அதான் இன்றைய பாடல்!
அடிப்படையில் மதுரை. சோமசுந்தரம் (எ) சோமு = கர்நாடக இசைக் கலைஞர்;
வேறு சில முருகன் பாடல்களும் பிரபலம் தான்!ஆனால் அவை கச்சேரிப் பாடல்கள்; சினிமாப் பாடல்கள் அல்ல! - என்ன கவி பாடினாலும், நினைக்காத நேரமில்லை முருகா - போன்ற பாடல்கள்!
வாங்க, நாம சினிமாப் பாட்டுக்குப் போவோம்!
சிவகுமார் - பூர்ணிமா ஜெயராம் நடித்த படம்;
இந்தப் படத்தைப் பார்த்தால், திருச்செந்தூர் ஆலயத்தின் பல உள் நிகழ்வுகளைத் தெரிஞ்சிக்கிடலாம்;
அப்படிச் செந்தூர் அலயத்துக்குள்ளேயே சுத்திச் சுத்தி வரும் காட்சிகள்!
இந்தப் பாடலில், திருச்செந்தூர்க் கோயிலின் குடமுழுக்கு விழாவையும் காட்டுவார்கள்; கண்டு களியுங்கள்!
பாடலின் காணொளிச் சுட்டி இதோ:
http://www.youtube.com/watch?v=C7ByT4Oa3qc (cannot be embedded)
கேட்டுக் கொண்டே வரிகளைத் தட்டச்சினேன்; சில இடங்களில் சிற்சில சொற்கள் புரியவில்லை; கேட்போர் திருத்தி உதவவும்; நன்றி!
(நினைத்திருந்தேன் - நானும் உன்னை நினைத்திருந்தேன்
கும்பிட்டால் காத்தருளும் குமரனுக்குக் குடமுழுக்கு!
ஈராறு வருடம் அதில் ஓர்முறை தான் பாருங்கள்
சீராரும் செந்தூரின் சந்நிதிக்கே வாருங்கள்)
துணைவன், வழித் துணைவன்,
வாழ்க்கைத் துணைவன்!
திக்கற்ற பேர்க்கெல்லாம் தக்கநலம் புரியும்
அழகன் முருகன் - எழில்
குன்று தோறும் நின்றிருக்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
தாய்க்குத் தாயான தெய்வம் அவன்
தந்தைக்குக் குருவான பிள்ளை அவன்
வாய்க்கு உணவாக, விழிக்கு ஒளியாக
நோய்க்கு மருந்தாக, நல்லருள் விருந்தாக..
உதவும் தலைவன் - அன்பர்க்கு என்றும் பூத்து
கண்ணில் நிற்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
மந்திர நீர்க்குடம் மண்டபம் அங்கு விளங்க
மங்கல வாத்தியம் தத்தள ஓசைகள் முழங்க
செந்தூர் அழகனின் சந்நிதி பூஜைகள் தொடங்க
கச்சிக் குமாரனை வக்ர கணங்கள் வணங்க
தகதக தகவென திருமுடி ஜொலிக்க
கணகண கணவென மணிகளும் ஒலிக்க
பளபள பளவென ஒளிவிளக்கு எரிய
பலப்பல வினைகளும் பொடிபட அழிய
தொழுதால் அழுதால் நிலைத்தல் தருவானே
மலைமேல் இருக்கும் மயில்மேல் வருவானே
துணைவன்
வள்ளித் துணைவன்
துணைவன், வழித் துணைவன்
வாழ்க்கைத் துணைவன்!
------------------------
குரல்: மதுரை சோமு
வரி: வாலி
இசை: சங்கர் கணேஷ்
ப்டம்: சஷ்டி விரதம்
திருச்செந்தூர் உற்சவர் - சண்முகரின் அணுக்கத் தோற்றம் *** என்னவன் திருமுகம்! |
என் துணைவா - வழித் துணைவா
என் ஐயா - எனக்கொரு துணை வா!
என் வாழ்க்கைத் துணைவா!!
2 comments:
அருமையான பாடல்....
பாடல் வரிகளுக்கு நன்றி...
வணக்கம்
பக்கதி மனம்கமழும் பதிவு ஒவ்வொரு பாடலும் அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்
உங்கள் பக்கம் வருவது முதல் முறை என்று நினைக்கிறேன் இனி என் வருகை தொடரும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment