Tuesday, June 25, 2013

தணிகை மலை "தர்ம துரையே" - வா வா வா!

கல்லூரி Placement-க்கு வந்த முதல் நிறுவனம்; Hurrah எனக்கு வேலை கிடைச்சாச்சி!:)

எனக்கும், உற்ற நண்பனுக்கும் - ஒரே நிறுவனத்தில் வேலை; கூடவே ஒரு பொண்ணுக்கும்;
எல்லாரும் மும்பை சலோ!:) - Dadar Express!


வழியில், அரக்கோணம் தாண்டும் போது, நான் மட்டும் "திடும்"-ன்னு எழுந்து சென்று விடுகிறேன்!
அந்தப் பொண்ணு, "ஏய் ரவி, எங்கே தனியா போற? நானும் ஒன் கூட வரேன்" -ன்னு சொல்ல...

அந்த நண்பன், "ரவி எங்கயோ சைட் அடிக்கப் போறான்; நீ எதுக்கு எப்பமே அவன் பின்னாலயே சுத்துற?" -ன்னு கொஞ்சம் எரிச்சலாக் கேக்குறான்:)
He used to be kinda possessive abt me, being a close friend:) His name ராஜி = Reverse of ஜிரா:) Life became Full Circle!

அப்படி யாரைப் பாக்கப் போனேன்? -ன்னு பொறவு தெரிஞ்சிக்கிட்டு, அந்தப் பொண்ணு விழுந்து விழுந்து சிரிக்குறா:)
Hey Ravi, Sometimes, you think like a baby -ன்னு அவ சொல்ல...
அந்த நண்பன், என்னைய ஒரு மொறை மொறைச்சது இன்னும் நினைவு இருக்கு:)

அப்படி, யாரைத் தான் பாக்கப் போனேன்?
= Train, அரக்கோணம் தாண்டிய பின்...  திருத்தணி மலை தெரியும்!
= "ஓம் முருகா" -ன்னு எழுதியுள்ள பேரெழுத்தும் நன்கு தெரியும்!!
= கதவோரம் தனியா நின்னுக்கிட்டு, அந்த லூசு முருகன் கிட்ட Hai சொல்வதில், எனக்கொரு தனி இன்பம்...



திருத்தணி மலை = 5ஆம் படை வீடு அல்ல!

"குன்று தோறாடல்" என்பதே 5ஆம் படைவீடு; அந்தப் பல குன்றுகளில், திருத்தணியும் ஒன்று!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே! என்பது திருப்புகழ்;

திருத்தணி -ன்னாலே = முருகனுக்கு, மாம்பழக் கோவம் "தணி"ஞ்ச இடம் -ன்னு புராணக் கதை உருவாக்கிட்டாங்க; உண்மை அதுவல்ல!

* கோபம் தணிஞ்ச இடமல்ல!
* காமம் "தணி"ஞ்ச இடம் = திருத்-தணி!

தண்ணீர் -> தண் -> தணி;
* அனல் = தண்ணீரில் தணியும்!
* அனல் போன்ற காமம் = வள்ளி என்னும் பெண்ணீரில் தணியும்!

சங்கத் தமிழ்த் தொன்மமான, குறிஞ்சி நிலத்துக் காதல் பறவைகள்: முருகன் - வள்ளிக்கு, திருமணம் நிகழ்ந்த இடம் = திருத்தணி!
முருகக் காதல், வள்ளியிடம் தணிந்த மலை = தணிகை மலை!

இதுவே புராணம் கலவாத தமிழ்ப் பழங்குடியியல்!

ஏனோ... இன்னிக்கி, திருத்தணியைத் "திருமணத் தலம்" என்றே பலரும் நினைச்சிப் பார்ப்பதில்லை!
அடுத்த முறை போனீங்க-ன்னா, மறக்காம ஞாபகம் வச்சிக்கோங்க: அங்கு இருப்பது மாப்பிள்ளை முருகன் - மணப் பொண்ணு வள்ளி!

திருத்தணிக்கு அருகில் தான், வள்ளி பிறந்து வாழ்ந்த = வள்ளி மலை!
எங்க வடார்க்காடு மாவட்டம் என்பதாலோ என்னவோ... I have a deep fantasy abt vaLLi malai & thaNigai malai;

இன்றைய பாடலும் திருத்தணிப் பாட்டே!
முருகனை = "தர்ம துரை" -ன்னு கூப்புடுறாங்க, பாடகி ரமணியம்மாள்; Super Star Movie is Dharma Durai:)

"துரை" என்பது தமிழ்ச் சொல் அன்று!
ஆயினும் பல துரைகள் தமிழ்நாட்டில் உண்டு:) செல்வ துரை, அண்ணாதுரை, தம்பிதுரை, தர்மதுரை, துரைக்கண்ணன், பொன்னுதுரை, ராஜதுரை etc etc etc
துரைசாமி = எங்க தாத்தா பேரு:) (அம்மா வழித் தாத்தா)

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்.. இன்னும் கூர்ந்தால், ஜெர்மானியச் சொல்
ஆங்கிலேயருக்கு முன்பே வந்த போர்த்துகீசிய, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கம்; அப்போது தமிழ்நாட்டில் நுழைந்த சொல், Durer - துரே - துரை!

கனவான்களை, நம்ம மக்களும் "துரை துரை" என்றே புதுச் சொல்லால் "செல்லமா" அழைக்க,
பின் வந்த பிரெஞ்சு எதிரிகளான ஆங்கிலேயருக்கும்,
நம்ம மக்களின் வெள்ளந்தியான "துரை" நாமகரணமே நின்று விட்டது:)

ஆனால் முருகன் எப்படி "துரை" ஆனான்?
ஆங்கிலப் புத்தாண்டு அன்று, துரைமார்களுக்கு வாழ்த்து சொல்ல வரிசை கட்டி நின்ற நம்ம ஆட்களை.. கோயிலை நோக்கித் திருப்ப..
வள்ளிமலை சுவாமிகள், திருத்தணிப் படி உற்சவத்தை, வேண்டுமென்றே Jan 1st நடத்தத் துவங்கினார்; முருகனும் "துரை" ஆனான்:)

Hey Honey, Muruga Durer, I aime ous.. I love you da:))




தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா

அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா
ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா

பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா
ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா

என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா
பாவி என்னை மறந்திடாதே - வா வா வா
--------------

வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா
வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா

என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா

திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப்
பெருந் துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
--------------

சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சல் ஆரம்ப மாயன்

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
சம்ப்ரம-ஆ னந்த மாயன்

மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால்
வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே
வந்துநீ அன்பில் ஆள்வாய்
--------------

கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே விஞ்சையூரா

கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா
கண்டலே சன்சொல்-வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று-மோ தும் ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள்
செந்தில்வாழ் தம்பிரானே!



வரிகள் & குரல்: பெங்களூர் ரமணியம்மாள்

அம்மாளின் குரல் = ஆண்மைக் குரல்; முடவனையும் துள்ளி ஆட வைக்கும்;
குரல் மட்டுமல்ல, தானே பாட்டு எழுதவும் செய்வார்கள்;

இந்தப் பாட்டு, மகாகவி பாரதியின், "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா" மெட்டில் எழுதியது; (முன் இரு பத்திகள்)
பின் இரு பத்திகள் - திருச்செந்தூர் திருப்புகழ் - தன் பாட்டில் பயன்படுத்திக்கிட்டாங்க;
அம்மாளைப் பற்றி மேலும் அறிய = இங்கே (old kathirgamam post)

திருக் கேதாரம் (எ) கேதார்நாத் -இல்,
மலை வெள்ளத்தில் திடும்-என உயிர் துறந்த உள்ளங்களுக்கு, இவ்வமயத்தில் அஞ்சலி!

முருகா, எனக்கும்...
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா;

3 comments:

திண்டுக்கல் தனபாலன் June 25, 2013 3:05 AM  

அழகு நண்பனை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் June 25, 2013 3:07 AM  

உங்கள் email முகவரி தெரியவில்லை... அதனால் இதில் எழுதுகிறேன்...

தமிழ்மணம் இணைக்க முதலில் உங்கள் தளம் .in இருந்தால் முடியாது... .com இருக்க வேண்டும்...

dindiguldhanabalan@yahoo.com தொடர்பு கொள்ளவும்... நன்றி...

Kavinaya June 25, 2013 9:15 AM  

//பாவி என்னை மறந்திடாதே - வா வா வா//

நானும் கேட்டுக்கிறேன். முருகா வாடா... ப்ளீஸ்!

பாட்டு ஜோரா இருக்கு. ஜிராஜி, திருத்தணி கதையும்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP