முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?
இன்னிக்கி.... மறுபடியும் TMS பாட்டு தான்!
டேய் முருகா - TMS குரலைக் கேட்பதை விட ஒனக்கு என்ன பெருசா வேலை?
ஒனக்கு = ஒரு பேரு வச்சா போதாதா?
அதென்ன = "வெகு கோடி நாம"?
பாரு, இந்தப் பாட்டுல, ஒன்னைய எந்தப் பேரு சொல்லிக் கூப்புடறது-ன்னு இவருக்கு அத்தனை குழப்பமும் ஏக்கமும்?
= முருகாவா? முத்துக் குமராவா?
= வேலாவா? கோகோ கோலாவா?
நீயே பாட்டைக் கேட்டுட்டுச் சொல்லுடா... என் செல்லப் பொற்க்கீ:)
Avantree Jogger Waterproof headset-ல்ல, குளிச்சிக்கிட்டே கேப்போமா? வா! A song in the shower:)
இந்தப் பாடல், முருகனருள் வலைப்பூவில், எப்படி இத்தனை நாள் வராம இருந்தது? -ன்னு தான் எனக்கு வியப்பு!
ஏன்-ன்னா, பாட்டு முழுக்கவே துள்ளலா Tabla இசை; ஒரு தெம்மாங்கு போலக் கொட்டிக்கிட்டே இருக்கும்!
1) அருணகிரி, 2) நக்கீரர், 3) குமரகுருபரர்
முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன்?
உன்னை எங்கு காண்பேன்?
ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது - நீ
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா - அந்தப்
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா - உலகுக்குப்
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க - நீ
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா - நீ
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா - முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா
(உன்னை... முருகா என்றழைக்கவா?)
வரிகள்: தமிழ்நம்பி
குரல்: ஏழிசை மன்னர், TMS
இசை:
இதே பாடலை, வீணை இசையில் கேட்க: இதோ சுட்டி
பாட்டை இன்னொருகா வாசிங்க...
எப்படி அழைப்பேன்? உன்னை எங்கு காண்பேன்?
உன்னைத் தேட, எனக்குச் சக்தி இல்லடா; நானே ரொம்ப இளைச்சிப் போயிட்டேனாம்;
இன்னிக்கி oppiceல்ல ரொம்ப நாள் கழிச்சிப் பார்த்த பார்வைல எல்லாருமே சொல்லுறாங்க; இதுல, உன்னை எங்கு போயிக் காண்பேன்???
முருகா என்று அழைக்க, வா!
முத்துக் குமரா என்று அழைக்க, வா!
வந்துருடா! அழைக்க வா
எத்தனை நாள் தான் நீ இல்லாம... நானு?
முருகா என்று அழைக்க - வா - டா! please da!
3 comments:
அருமையான இனிமையான பாடல்...
என்னவொரு அன்பான கட்டளை...!
வாழ்த்துக்கள்...
//இன்னிக்கி oppiceல்ல ரொம்ப நாள் கழிச்சிப் பார்த்த பார்வைல எல்லாருமே சொல்லுறாங்க;//
நீங்க முருகனைப் பார்ப்பது இருக்கட்டும்... நாங்க உங்களை எப்ப பார்க்குறது? மயிலும் பாக்கறதில்லை, கூப்டா பேசறதில்லை :(
அருமையான பாடல். காலையில் கேட்பதற்கு மிக இனிமையான பாடல் அனைவரும் கேட்டு மகிழுங்கள் முருகன் அருள் பெறுங்கள் இப்பாடலைத் அந்த நண்பருக்கு நன்றி உரித்தாகுக
Post a Comment