கேபி சுந்தராம்பாள்: எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
சில சமயங்களில் முருகன் கொடியவன் - சேவல் கொடி-யவன்!
அவன் மனம் = இளகவே இளகாத பாறை!
ஆனால் அந்தப் பாறையிலும் = முளை விடும் செடிகள் சில உண்டு;
பசிக்கு நீர் கிடைக்காது, பாறையில்!
எதுக்க்க்க்க்கு, அப்படி, பாறையில் போய் வாழணும்?
இடம் மாற்றிப் பாருங்கள் செடியை? = வாடி வதங்கி விடும்!
அதன் உணவே = அந்தப் பாறைச் சத்து தான்! முருகச் சத்து தான்!
என்ன ஆனாலும்,
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!
வாழ்வே போனாலும்
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!
அந்த அடியவர் செடிகள், அவனைக் காட்டிலும் உயர்ந்தவை!
அதிலொரு செடி = கே.பி. சுந்தராம்பாள் (எ) KBS
அம்மாவின் வாழ்வியல் = இங்கே, http://murugan.org/tamil/sundarambal-2.tamil.htm
KBS அம்மாவைப் பூவும் பொட்டுமாய்க் காண்பதில், ஏனோ, எனக்கொரு இனம் புரியாத மகிழ்வு |
இன்றைய பாடல்
= KBS அம்மாவின் முருகத் திரை வாழ்விலே இறுதிப் பாடல்!(1969)
பின்பு, காரைக்கால் அம்மையார் (எ) தோழி புனிதாவின் கதை!
பின்பு, திருமலைத் தெய்வம் = அதுவே கடைசி!
ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை? -ன்னு மனக்கவலையோடவே பாட வைத்தனையோ எந்தையே?
இது....முருகன் திரைப்பாடலில் இறுதிப் பாடல்!
துணைவன் -ன்னு ஒரு படம் வந்துச்சி; (தேவர் எடுத்த படம், எம்.ஏ. திருமுகம் இயக்குநர்)
இதில் தான் வாரியார், மிக நீண்ட நேரம் நடிச்ச படம்!
வாரியார் படங்கள்: சிவகவி (வசனம்), தெய்வம், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி -ன்னு சில படங்கள்!
எல்லாவற்றிலும், ஆரம்பக் காட்சிகள் (அ) சிறிது நேரம் தான்; துணைவன் படத்தில் தான், பல இடங்களிலும் வந்து போவார்!
பிறக்கும் போதே உணர்வற்றுப் போன ஒரு குழந்தை (மாறன் நம்மாழ்வார் போலவோ என்னமோ?)
அதைக் கோயில் கோயிலாகச் சுற்றி எடுத்துக்கிட்டு வேண்டும் பெற்றோர்; வழித்துணைக்கு KBS அம்மாவை அழைக்கிறார்கள்;
மொத்தம் 28 முருகன் ஆலயங்கள்!
படைவீட்டின் உள் முகப்புகளையெல்லாம் இந்தப் படத்தில் காணலாம்;
முருக உள்ளங்கள் துடிதுடிக்க...
திருச்செந்தூரிலே, கொடி-யவன் உள்ளக் கதவு திறக்கிறது;
என் செல்லக் கொடியவா,
வா வா வா! - எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும்,
நம்பினோர்க்கு அருளும் முருகா...
நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை
நான் கண்டு மகிழவேண்டும்....
ஊமைக் குழந்தையாம் குமர குருபரன் நாவில்
உயர்ந்த வேல் கொண்டு எழுதி
உணர்வினில் அமுதூறும் கந்தர் கலி வெண்பாவை
உவந்து அளித்த தமிழ்க் கடவுளே!
நக்கீரன் நாவிலே ஆற்றுப்படை பாட
நல்ல தமிழ் தந்த முருகா
நாள்தோறும் உன்புகழைப் பாடிட பாடிட, அதை
நீ கேட்டு மகிழ்ந்த முருகா!
இன்று தாய் இவள் கண்ணீரும் தந்தையின் ரத்தமும்
தன் நெஞ்சம் காண விலையோ?
இங்கு தவழாத பிள்ளையைத் தவழ வைத்தால்..
நீ தந்த தமிழுக்குப் பெருமை முருகா!
வேலோடும் மயிலோடும் விரைந்தோடி வா
விளையாடும் இளம்பிள்ளை பிணி தீர்க்க வா
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
எந்தவுரு கொண்டேனும் குறை தீர்க்க வா!
விரைந்தோடி வா வா வா
பிணி தீர்க்க வா வா வா!
செந்தூரில் வா வா வா!
குறை தீர்க்க வா வா வா!
படம்: துணைவன்
குரல்: கே.பி. சுந்தராம்பாள்
வரிகள்: மருதகாசி
இசை: கே.வி. மகாதேவன்
பெண்ணுக்குப் பெற்றோர் வீடு = சொர்க்கம் என்றாலும்,
உள்ளத்தின் ஆழத்தில் அடைய விரும்புவது = கொண்டவன் வீடே! கொடி-யவன் வீடே!
என் உயிர் போக உகந்த இடம் = செந்தூர்;
செந்தூர்... வாசல் படியாய்க் கிடந்து, உன் வசந்த வாய் காண்பேனே!
எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா!
(முருகவா! வா! வா!)
2 comments:
//என்ன ஆனாலும்,
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!
வாழ்வே போனாலும்
அந்தச் செடி, பாறையை விட்டு அகலாது!//
நன்றாகச் சொன்னீர்கள்.
மிக அருமையான பாடலைத் தந்தமைக்கும் நன்றிகள் பல!
சிறப்பான பாடல்... நன்றி...
Post a Comment