Monday, July 01, 2013

கலைக்கோவில் MSV: தேவியர் இருவர் முருகனுக்கு!

ஒரு இசையமைப்பாளர் -> தயாரிப்பாளர் ஆகின்றார்!
= எதற்கு?
= கம்பீரமான வீணை இசையை, படம் முழுக்க ஓட விட!




திரையிசைச் சக்கரவர்த்தி, MSV இசையமைத்து + தயாரித்த படம் = கலைக் கோவில்!
சீர்மிகு-சீரழி இசைக் கலைஞனே = கதா நாயகன்! (முத்துராமன்)

பின்னாளில்.. இதே போன்று கதையமைப்பில், பல வெற்றிப் படங்கள் வந்தன; (சிந்து பைரவி)
ஆனா அந்நாளில்?.. முதலில் வந்த படம், தோல்வியில் தான் முடிந்தது!

Box Office Hit, என்பதற்குப் பதிலாக, Box Hit Office -ன்னு சொன்னாராம், கையைச் சுட்டுக் கொண்ட MSV!
*இது MSV- க்கு வேண்டுமானால் = தோல்விப் படம்;
*ஆனால் வீணை இசைக்கு = வெற்றிப் படமே!

சிட்டிபாபு = பிரபல சம்பிரதாயக் கலைஞர்; ஆனால் புது முயற்சிகளை ஆதரிப்பவர்; அவரே படம் முழுதும் வீணை வாசிக்கிறார்;
படத்தின் கதாநாயகன் = முத்துராமன் அல்ல! வீணையே!



இந்தப் படம், மலையாளத்தில் வந்திருந்தால் வெற்றி அடைந்திருக்கும்; Art + Commercial Cinema!
ஆனால், மலையாள மண்ணில் தோன்றிய MSV, தமிழுக்கே தன் ஆத்ம அர்ப்பணிப்பை வழங்கினார்!

*படத்தின் Mega Hit பாடல் = LR Eswari பாடும், "வரவேண்டும் ஒரு பொழுது"; Full in Jazz & Exploding Instrument Medley!
*ஆனாலும், இந்த முருகன் பாடல், என் மனசுக்கு மிகவும் புடிச்ச பாட்டு; ஏஏஏஏனடி தோழி அறிவாயோ? சுசீலாம்மா "திருமாஆஆஆல்" -ன்னு இழுப்பாங்க வீணையைப் போலவே!

போட்டி: வீணைக்கும் சுசீலாம்மாவுக்கும் தான்:)

இவள்: எனக்கோர் இடம் நீ தருவாயோ?
அவன்: என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்!


படம்: கலைக் கோவில்
குரல்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன் (உதவி: பஞ்சு அருணாசலம்)

வீணை: சிட்டிபாபு
ராகம்: ஸ்ரீ ராகம் (எந்தரோ மகானுபாவுலு என்னும் அதே ராகம்)



தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ?

கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்!
(தேவியர் இருவர் முருகனுக்கு)

ஒருமுகம் அவனை உணர்ந்ததடி
இருமுகம் ஒன்றாய்க் கலந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி!
(தேவியர் இருவர் முருகனுக்கு)


என்னவன், எந்தை

என் காதல் முருகனை, என் தந்தை திருமாலுக்கு இணையாக வைத்துப் பேசும் போது, மனசு என்னமோ பண்ணும்!
புகுந்த வீட்டிலும், அன்பில் தோய், தாய்-தந்தையை நினைச்சி வாழும் ஒரு பெண்ணின் நிலைமை...

*முருகனுக்கு எத்தனையோ பேர்கள்! = வெகு கோடி நாம, சம்பு குமாரா நமோ நம!
*ஆனாலும், அந்த ஒரு பேர் = மால் மருகன்!

"திருமால் அழகன் மருகனுக்கு" 
-ன்னு சொல்லும் போது மட்டும்.. என்னமோ பண்ணுது; தொன்மையான சங்கத் தமிழ் மாயோன்-சேயோன்; உம்ம்ம்.. எனக்கு சரியாச் சொல்ல வரலீங்க.. அடைக்குது.. பதிவை முடிச்சிக்கறேன்;

மருகவா முருகவா..
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

3 comments:

திண்டுக்கல் தனபாலன் July 01, 2013 11:53 PM  

பாடலைக் கேட்டு பல நாட்கள் ஆகி விட்டது... நன்றி...

குமரன் (Kumaran) September 23, 2013 12:06 PM  

இனிமையான பாடல்!

Pattabiraman May 19, 2024 10:36 PM  

Enjoyable song is normal but enjoying the song is different. Thank you

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP