Thursday, June 02, 2011

ML வசந்தகுமாரி - குமரன் வரக் கூவுவாய்!

இசைக் குயில் எம்.எல்.வி! MLV - Madras Lalithangi Vasanthakumari! இவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது!

கர்நாடக இசை, சினிமா இசை என்று பல துறைகளில் முத்திரை பதித்தவர்! ஒரு காலத்தில் (இன்றும்)  MLV-இன் திருப்பாவை ஆடியோ கேசட்டுகள் விற்றுச் சக்கை போடு போட்டன!

MLV - நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்! இன்றைய முன்னணிக் கலைஞர்களான சுதா ரகுநாதன், A.கன்னியாகுமரி போன்றவர்களின் குருவும் கூட!
கண்ணன் மேல் உள்ள புரந்தரதாசரின் கன்னடக் கீர்த்தனைகளை இசை உலகில் பரவச் செய்ததில் பெரும் பங்கு MLV-க்கே!

மணமகள் படத்தில் பாரதியாரின் "சின்னஞ் சிறு கிளியே" பாடி, குறுகிய காலத்தில் மிகப் பிரபலம் ஆனவர்!
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு படத்தில், "அய்யா சாமி" பாடலைப் பாடியதும் இவரே!  ராஜா தேசிங்கு படத்தில் இவர் பாடிய "பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே" பாட்டு தான் நாளடைவில் பரதநாட்டியப் பாட்டாக மாறி விட்டது! :)

இன்று முருகனருளில்...
MLV-இன் முருகான முருகன் பாட்டு - குயிலே, உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்....

தமிழ்க் கடவுள் என் முருகனுக்கு எதுக்குய்யா "நமஸ்காரம்"? :) ஆனாலும் பாடல் அருமை!
மிகவும் அபூர்வமான பாட்டு! எம்.எல்.வி இளமைக் காலப் பாட்டு - சர்ச்சைகளுக்கு உள்ளான மனிதன் திரைப்படத்தில் இருந்து...




குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் - நீ
(குமரன் வரக் கூவுவாய்)

மலை மாங்கனிச் சோலையிலே
மதுவாய் எனையே பிழிந்த
(குமரன் வரக் கூவுவாய்)

வருவார் வருவார் என்றே
வழி பார்த்தே விழி சோர்ந்தே
மாரன் கணைகள் அல்லால்
வீரன் வரக் காணேனே!
(குமரன் வரக் கூவுவாய்)

தருவார் மலர்க்கை என்றே
தவித்து ஏங்கி வாடுறேனே!
தருணம் மகிழ்ந்தே வந்தென்
தாகம் தனைத் தீர்ப்பாரோ?
(குமரன் வரக் கூவுவாய்)

படம்: மனிதன் (ரஜினி படம் அல்ல; பழைய படம்)
இசை: SV வெங்கட்ராமன்
வரி: ?
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: யமுனா கல்யாணி

2 comments:

துளசி கோபால் June 02, 2011 6:29 AM  

அருமையான பாட்டு. இப்பவும் நம்ம வீட்டுலே திருப்பாவைன்னா அது எம் எல் வி பாடுனதுதான்னு இருக்கார் கோபால்.

சென்னை வாசத்தில் ஒரு சமயம் எம் எல் வி. அவர்களைப்பற்றிய ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். அபூர்வ புகைப்படங்கள் எல்லாம் மாட்டுச்சு.

நேரம் இருந்தால் இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_28.html

Kannabiran, Ravi Shankar (KRS) June 02, 2011 6:40 AM  

டீச்ச்ச்ச்ச்ச்சர் dank u dank u!
என்னமா காந்தக் கண்கள் MLV அம்மாவுக்கு! dank u for those nostalgic pictures!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP