ஜிரா பிறந்தநாள்! சுந்தராம்பாள் வேல் வேல்!
இன்று, இனியது கேட்கின் தலைமகனுக்கு இனிய பிறந்தநாள்!
எனக்கும் இன்று பிறந்தநாள் தான்! = மீண்டும் முருகனருள்/கண்ணன் பாட்டில் எழுதவொரு இனிய பிறந்தநாள்!
இரண்டுக்கும் ஒன்றாய்........முருகா என்று வாழ்த்துவோமா? :)
இவனுக்கு மூன்று முகம் :)
இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)
நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று, (May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)
ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :) Happy Birthday Ragava :)
கே.பி. சுந்தராம்பாள் - என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பெயர்!
காதல் மனம் என்றால் என்ன?
Kodumudi Balambal Sundarambal! அவருடைய "அக வாழ்வை" ஒட்டி, முன்பு இட்ட பதிவு இங்கே!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்!
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!
KBS அம்மாவின் முருகக் குரலில், பிறந்த நாள் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோமா? இதோ பாடுறாங்க பாருங்க! = ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!
பழனி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படைவீடு கொண்ட முருகா
பால் பழம் தேனோடு,
பஞ்சாமிர்தம் தந்து,
பக்தரைக் காக்கும் முருகா!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! - சக்தி
வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!
(பழனி மலைத் தங்க ரதக் காட்சிகள்...)
வடம் இட்ட பசும் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு
இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை - எங்கள்
இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!
வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!
*********************************(பழனி மலைத் தங்க ரதக் காட்சிகள்...)
வடம் இட்ட பசும் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு
இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை - எங்கள்
இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!
வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!
என் கண்ணாளா முருகா....
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது?
நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது?
யார் வந்தது? யார் வந்தது?......
படம்: துணைவன்
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: அ. மருதகாசி ?
இசை: கே.வி.மகாதேவன்
5 comments:
நண்பர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
என்ன ஒரு பொருத்தம்...... இப்பத்தான் ஆ வியில் கே பி சுந்தராம்பாள் அவர்களைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!மிக அருமையான விருந்து!
கண்ணன் . பாட்டிலும் பின்னூட்டம் கொடுத்தேன்;
ஏனோ போஸ்ட் ஆகவில்லை;மாதவியிலும் இதே போலாயிடுத்து.
பிரம்ம்ம்மாதமான விருந்துக்கு (கே பீ எஸ் )நன்றி!!
//யார் வந்தது?யார் வந்தது? யார் வந்தது?//
நானும் வந்துட்டேன்!
ஜீராவிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நல்ல பாட்டு & பதிவு!
@கவிக்கா: நன்றிக்கா
@துளசி டீச்சர்: நன்றி;ஆ.வி கட்டுரை நானும் படிச்சேன்; சுந்தராம்பாள் அம்மாவின் மனக் காதலை ரொம்ப மறைச்சிட்டாங்க:)
@லலிதாம்மா: வாழ்த்துக்கு நன்றி! Inline பின்னூட்டத்தில் ஏதோ Blogger Problem! பழைய பின்னூட்டப் பெட்டிக்கு எல்லாத்தையும் மாத்திட்டேன்! :)
@சிவா://யார் வந்தது?யார் வந்தது?// நீர் வந்தது நீர் வந்தது!:) வாழ்த்துக்கு நன்றி
Post a Comment