அழகு மயில் ஏறி...
அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் – நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் – அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!
பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் – அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!
அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் – அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் – அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!
--கவிநயா
என் மனசில் நினைச்சு எழுதிய ராகத்திலேயே சுப்பு தாத்தாவும் பாடித் தந்திருக்கார்! மிக்க நன்றி தாத்தா!
படத்துக்கு நன்றி: http://my.opera.com/Tamil/albums/showpic.dml?album=196902&picture=5521553
13 comments:
படம் அழகு! பாலனும் அழகு!
//விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன்//
விருத்தனைப் போல்நடித்து வள்ளி விருந்தும் ஆனவன்:))
//படம் அழகு! பாலனும் அழகு!//
பாடல்?
//விருத்தனைப் போல்நடித்து வள்ளி விருந்தும் ஆனவன்:))//
:)
அருமையான முருகன் அருட்பா
'pazhagu thamizh paadalile mayangi ninraan'
'kanmalargal thaam seruga kaninthu ninraan'
nice to think of kandhan's eyes[12]
in that position!
music??
இரசித்தேன்
கந்தனையும்
கவிதையும்
பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்யும் முருகப் பெருமான் திருவடி பற்றும் வாய்ப்பு அமைந்தமையில் மகிழ்கிறேன்..
அன்பன் சிவ. சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com
//அருமையான முருகன் அருட்பா//
மிக்க நன்றி கடம்பவன குயில். உங்க பேர் அழகா இருக்கு :)
//nice to think of kandhan's eyes[12]
in that position!//
ஆமா இல்லை? :)
//music??//
இப்பதான் இட்டேன். சுப்பு தாத்தாவோட குரலில். கேட்டு மகிழுங்கள் :)
மிக்க நன்றி லலிதாம்மா.
//இரசித்தேன்
கந்தனையும்
கவிதையும்//
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் திகழ்!
//பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்யும் முருகப் பெருமான் திருவடி பற்றும் வாய்ப்பு அமைந்தமையில் மகிழ்கிறேன்..//
வாருங்கள் சிவ. சி.மா.ஜா. வருகைக்கு மிக்க நன்றி.
இசையோடு வாசிக்கும் பொழுது
இன்னும் அதிக இன்பம்
நன்றி தாத்தா
//இசையோடு வாசிக்கும் பொழுது
இன்னும் அதிக இன்பம்//
ஆம் திகழ். மீண்டும் வந்து பாடலைக் கேட்டமைக்கு நன்றிகள்.
You have an amazing way of sharing ideas. And I definitely like it. kamagra
Post a Comment