TMS: முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு!
இந்தப் பாடல் முருகருளில் இம்புட்டு நாள் வராதது தான் வியப்பு!
அதனாலென்ன?
எப்போது எதை வெளிப்படுத்த வேணும் என்று நம்மைக் காட்டிலும் நன்மை காட்டும் முருகனுக்கு அல்லவா தெரியும்!
அந்த அருள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது மட்டுமே பேதைக்குத் தெரியும்!
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
இந்தப் பாட்டைப் படிக்கும் போதும், பாடப் பக்கம் நின்று கேட்கும் போதெல்லாம்...
அதுவும் TMS குரலில்...
இந்தச் செவ்வாயில், செவ் வாய் மணக்க, சேயோனை...இதோ...கேட்டுக்கொண்டே வாசியுங்கள்!
குரல்: TMS
வரிகள்: எம்.பி. சிவம்
இசை: டி.கே. புகழேந்தி
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)
என்றுமே கைவிடாமல் ஆளுவான்
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
என் ஐயா...என் ஐயா...
இனியும் நான் உன்னைக் கூப்பிடாது, நீ என்னைக் கூப்பிட்டுக் கொள்!
15 comments:
முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றியும் வினை தீருமே!
முதல் வரி தவறு இரவி.
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
இந்தப் பாடலைக் காரில் கேட்கும் போதெல்லாம் சேந்தன் கூவுவது 'குமரன் மெனரெஸ் பாபா' (குமரன்னு சொல்றார்ப்பா). :-) உடனே அக்கா 'குமரன் மெனத் முருகனூஸ் சேந்தன்!' (குமரன்னா முருகன் தான் சேந்தன்!). :-)
உடனே நான் 'சேந்தன் மெனதி மெல்லி முருகனூஸ்' (சேந்தன் என்றாலும் முருகன் தான்). 'ந்ஹா ந்ஹா மீ முருகன் ந்ஹா. மீ ஸ்மால் கணேஷா' (இல்லை இல்லை நான் முருகன் இல்லை. நான் குட்டி கணேஷா) என்பான் சேந்தன். உடனே அக்கா 'திஸொ மெனெத் மீ கோன்? மீ கணேஷா. பாபா சிவா. பபு முருகன்' (அப்படின்னா நான் யாரு? நான் கணேஷா, அப்பா சிவா, தம்பி முருகன்). இப்படியே போகும் உரையாடல்.
நன்றி KRS
கூடவே பாடி கொண்டே வந்த போதே கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை...
Living Legend TMS
ஆஹா.. குமரா.. அசத்தல் பாடல் இது..
டிஎம்எஸ்ஸின் குரல் கேட்போரையும், பாடுவோரையும் ஒரு சேர கண் கலங்க வைக்கும்..!
//DR.KVM said...
முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது//
:)
முருகா! முருகா!
உன்னைப் பார்த்தால் பசி தீரும்-ன்னு சொல்ல மாட்டேன்!
ஏன்-ன்னா எனக்கு உன்னைப் பார்த்தால் மட்டும் போதாது! உன் கூடவே இருக்கணும்! அதுக்கு ஏதாச்சும் வழி செய்யி டியர்! :)
//குமரன் (Kumaran) said...
முதல் வரி தவறு இரவி//
Sorry-na! பதிவில் திருத்தி விட்டேன்!
//'ந்ஹா ந்ஹா மீ முருகன் ந்ஹா. மீ ஸ்மால் கணேஷா'//
ஹா ஹா ஹா
ஸ்மால் கணேசா இவன்-ன்னா, அப்போ பிக் கணேசா யாராம்? :)
//'திஸொ மெனெத் மீ கோன்? மீ கணேஷா. பாபா சிவா. பபு முருகன்'//
அப்போ அம்மா? அவிங்கள பார்வதி-ன்னு explicit-aa சொல்ல வேணாமா? :)
சிவ குடும்ப டயலாக் நல்லா இருக்கு! :)
சிவக்கொழுந்து பொண்ணு கணேசா-ன்னு சொல்லிக்கறது ஒரு வகையில் சரியும் கூட! மவுஸ் எல்லாம் பயன்படுத்தி பதிவுல உலா வருகிறா இல்லையா? :)
//Logan said...
நன்றி KRS
கூடவே பாடி கொண்டே வந்த போதே கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை...//
என்னை நிலை மறக்கச் செய்யும் பாடல்களில் இது மிகவும் முக்கியமானது! அதுவும் அந்த ஒத்தை வரி...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு,
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
//Living Legend TMS//
ஆமாங்க லோகன்!
சீர்காழி, சுந்தராம்பாள் அம்மா போன்றோர் குரலில் எல்லாம் கம்பீரம் நல்லாத் தொனிக்கும், bcoz of that high pitch! ஆனால் TMS மட்டும் தான், கம்பீரமும் பாடுவார், அகம் கரையவும் செய்வார்!
//Tamilulakam said...
ஆஹா.. குமரா.. அசத்தல் பாடல் இது..
டிஎம்எஸ்ஸின் குரல் கேட்போரையும், பாடுவோரையும் ஒரு சேர கண் கலங்க வைக்கும்..!//
:)
லோகன்-க்கு சொன்னதும் அதே தாங்க தமிழுலகம்!
//TMS மட்டும் தான், கம்பீரமும் பாடுவார், அகம் கரையவும் செய்வார்!//
100%
அருமையான பாடல். நிறைய நன்றிகள்
முருகா சரணம்
முருகா சரணம்...
கந்தா சரணம்..
வடிவேலா சரணம்..
Post a Comment