மனசை மயில் வாகனமாய் மாற்றுவது எப்படி?
முருகனருள் வலைப்பூ அன்பர்களே...
அழகனின் அழகிய பாடல்களின் தொடர்ச்சியாக...
இன்னிக்கு ஒரு எளிமையான, இனிமையான பாட்டு!
நாலே வரி தான்!
ஆனா மனசு பூரா ஓடிக்கிட்டு இருக்கு! :)
பொங்கி வரும் வீணை இசையோடு, பார்க்கறீங்களா?
இதோ: கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி இங்கே!
மனமே முருகனின் மயில் வாகனம் - என்
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என்
குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
குரல்: ராதா ஜெயலட்சுமி
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: MSV
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை
ராகம்: இந்தளப் பண்/ஹிந்தோள ராகம்
MSV இந்தளப் பண்ணில் கையே வைக்காம, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் பண்ணாம, அப்படியே ராகத்தைக் கொடுத்துட்டாரு போல!
அருமையாப் பாடி இருக்காங்க ராதா ஜெயலட்சுமி! செளகார் ஜானகி வீணை வாசிக்கறது தெரியுது!
பாடும் நடிகை யாரு-ன்னு தெரியலை! அழகா நளினமா இருக்காங்க!
மனம் எப்படி முருகனின் வாகனம் ஆகும்?
மனத்தின் வேகம் போல, வேற ஒன்னும் இல்லை! Rocket-இல் செயற்கைக் கோள் விட்டாக் கூட, நிலவில் போய் இறங்க கொஞ்சம் நாளாவும்! ஆனால் மனம் அடுத்த நொடியில் போய், நிலவில் சேவல் கொடி பதிக்கும்! :)
ஆனா மனம் அது மட்டும் தான் செய்யுமா? வேற பலான பலான விடயம் கூடச் செய்யும்! அமலா, பாவனா, இலியானா வீட்டுக்கு எல்லாம் கூடப் போய் வரும்! :)
அப்படி அலை பாயுற மனசு! ஆனா அதை மயில் வாகனமா ஆக்கிட்டா?
மயில் மேல வேற யாராச்சும் ஒருத்தரு ஏறுவாங்களா?
அவன் ஒருத்தன் மட்டும் தானே ஏறுவான்! அவனுக்கே நான்! அவனுக்கே நான்!
அவன் ஒருத்தன் மட்டும் தானே ஏறுவான்! அவனுக்கே நான்! அவனுக்கே நான்!
மற்றாரும் பற்றில்லேன்!
நானே அவனோட மயில்!
சூரனை மயிலாய் மாற்றியது எல்லாம் அப்புறம் தான்!
அதற்கும் முன்பே முருகனுக்கு மயில் வாகனம் உண்டு!
நானே அவனோட ஆசை மயில்!
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் = இதுக்கு என்னா சொல்றது!
வெட்கமா இருக்கு! பேசாம கீழே இருக்குற படத்தைப் பார்த்துக்கிடுங்க :)
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்!
* என் மேனி, வெளியிலும் அவனுக்குத் தான் = மயிலாக
* என் மேனி, உள்ளேயும் அவனுக்குத் தான் = ஆ+லயமாக = அவன் லயமாக!
சூரனை மயிலாய் மாற்றியது எல்லாம் அப்புறம் தான்!
அதற்கும் முன்பே முருகனுக்கு மயில் வாகனம் உண்டு!
நானே அவனோட ஆசை மயில்!
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் = இதுக்கு என்னா சொல்றது!
வெட்கமா இருக்கு! பேசாம கீழே இருக்குற படத்தைப் பார்த்துக்கிடுங்க :)
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்!
* என் மேனி, வெளியிலும் அவனுக்குத் தான் = மயிலாக
* என் மேனி, உள்ளேயும் அவனுக்குத் தான் = ஆ+லயமாக = அவன் லயமாக!
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்!
முருகனோடு, உள்ளேயும், வெளியேயும், அவனுடனேயே இருப்பேன்!
அகலகில்லேன்! அகலகில்லேன்!
என் குரலே செந்தூரின் கோவில் மணி!
என் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
முருகனருள் வலைப்பூவில் ஒலிக்கும் இனி!
முருகனோடு, உள்ளேயும், வெளியேயும், அவனுடனேயே இருப்பேன்!
அகலகில்லேன்! அகலகில்லேன்!
என் குரலே செந்தூரின் கோவில் மணி!
என் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
முருகனருள் வலைப்பூவில் ஒலிக்கும் இனி!
11 comments:
>>அகலகில்லேன்! அகலகில்லேன்!<<
உடையவருக்கு நன்றிகள் :-)
இனிபிரியா இணைபிரியா இனியவன் இவனல்லவோ!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
>>அகலகில்லேன்! அகலகில்லேன்!<<
உடையவருக்கு நன்றிகள் :-)//
நம்மாழ்வாருக்கு நன்றி-ன்னு சொல்லுங்க ஜீவா! அகலகில்லேன்-ன்னு பாடினது அவரு தான்! :)
என் தோழிக்கு கண்ணனை அகலகில்லேன்!
எனக்கு முருகனை அகலகில்லேன்! :)
//இனிபிரியா இணைபிரியா இனியவன் இவனல்லவோ!//
நீங்களும் கவி-க்கா மாதிரியே, இசைப்பாட்டாப் பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்களா? :)
நான் உடையவர்ன்னு சொன்னது உங்களைத்தான்!
குகனை குகையில் உடையவரெல்லாம் உடையவர்தான்!
நீங்க நம்மாழ்வாருக்கு நன்றியை சொல்லிடுங்க!
நகையாகவும், சுவையாகவும் உள்ளது. உண்மயில் அற்புதமான பதிவு
Just landed on your blogs from Thamizmanam. Excellent collection of songs, stories, facts, and details on Murugan. Great work Ravi. Wish you all the very best. Vaalgha Valamudan.
ஆஹா, அழகான பாடல். பக்கத்தில் ஓடும் ஓவியத்திற்கும், சிக்கல் சிங்காரவேலனுக்கும் அழகு சேர்க்குது :) நன்றி கண்ணா.
//ஜீவா (Jeeva Venkataraman) said...
நான் உடையவர்ன்னு சொன்னது உங்களைத்தான்!//
:)
//குகனை குகையில் உடையவரெல்லாம் உடையவர்தான்!//
மனக் குகையில் மனக் குகன்! - கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு!
என்னை "உடையவன்" எழில் முருகத் திரு நம்பி!
//நீங்க நம்மாழ்வாருக்கு நன்றியை சொல்லிடுங்க//
Sure! :)
//Sabarinathan TA said...
நகையாகவும், சுவையாகவும் உள்ளது. உண்மயில் அற்புதமான பதிவு//
நன்றி சபரிநாதன்!
முருகனருள் முந்தைய பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்!
//Anbusivam said...
Excellent collection of songs, stories, facts, and details on Murugan. Great work Ravi//
நன்றி அன்புசிவம்!
அடியார்களின் தேடலுக்கு ஏற்றாற் போல் எளிதில் கிடைக்கத் தான் இந்த முயற்சி!
முருகனருள் என்பது குழு வலைப்பூ! உங்கள் வாழ்த்தும் ஆசியும் எனக்கு மட்டுமில்லை! இந்த மொத்தக் குழுவிற்குத் தான்!
//கவிநயா said...
பக்கத்தில் ஓடும் ஓவியத்திற்கும், சிக்கல் சிங்காரவேலனுக்கும் அழகு சேர்க்குது :) நன்றி கண்ணா//
ஆகா! அது எப்பவோ போட்டாச்சுக்கா! அப்பப்போ என் முருகனோட முருகனருள் பக்கம் வாங்க! :)
பாடுவாதாக நடிப்பது மணிமாலா, நம்ம வெ.ஆ.மூர்த்தியின் துணைவியார்! சிந்துபைரவியில் கூட பார்த்திருப்பீர்களே ?
- நக்கீரன்
Post a Comment