மகிழ வரங்களும் அருள்வாயே வயலூரா...
மதுர கவி பாடி நான் அழைத்தால்
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...
மனதில் உனை நிறுத்தி மருகோனை
மகிழ் கதிர் காமம் உடையேனே
மால் கொண்ட வீரா மணிமறா
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...
மருமல்லி பூக்களின் அலங்காரம்
மன்றத்தின் தென்றலும் தாலாட்டும்
மருகி உருகி நெகிழ்ந்து அழைத்தால்
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...
சித்ரம் என்ற பெயரில் நம் பதிவுகளில் பின்னூட்டம் இடும் சித்ரா இராமசந்திரன் இந்தப் பாடலை எழுதி முருகனருளில் இடும் படி சொல்லி அனுப்பியிருக்கிறார். அவரின் முதல் பாடல் இதோ முருகனருளில் இன்று வந்திருக்கிறது. இன்னும் தொடர்ந்து நிறைய வரும்.
5 comments:
அருமையான பாடல்!
சித்ரம் அவர்களுக்கு நன்றி!
அழகான வயலூர் முருகன் மேல் அழகான பாடல் சித்ரம்!
முருகனருளில் தொடர்ந்து எழுதுங்கள்!
//மருகி உருகி நெகிழ்ந்து அழைத்தால்
மகிழ வரங்களும் அருள்வாயே//
இது நல்லா இருக்கே!
மகிழ வரங்களும் அருள்வாயே!
யார் மகிழ?
அதைச் சொல்லாம விட்டது தான் சிறப்பு!
நாமும் மகிழ, அவனும் மகிழ,
மகிழ வரங்களும் அருள்வாயே! :)
அருமை
முதல் பாடல்...நன்றாக இருக்கிறது.:)
மேன்மேலும் பாடல்கள் எழுதும் வரம் முருகன் அருள்வார். :)
//மதுர கவி பாடி நான் அழைத்தால்
மகிழ வரங்களும் அருள்வாயே
வயலூரா...//
அருமையான துவக்கம் இன்னும் பல்வேறு பாடல்கள் வர வயலூர் முருகன் அருளட்டும்.
Post a Comment