உன்னையும் மறப்பதுண்டோ
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?
கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?
பொன் பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா
என்னுயிர் ஆன உன்னை
என்னுயிர் ஆன உன்னை
மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?
நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன்?
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?
பாடியவர்: டி.எம்.சொந்திரராஜன்
நன்றி : கோ.கணேஷ்
6 comments:
////பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?////
அருமை! அருமை! அருமை!
நன்று சிபியாரே!
நன்றி சிபியாரே!
//வடிவேல்
ஏந்திய உனை மறந்தால்
நான்
ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன்?//
சிபி அண்ணா
சாரி, ஏன் இந்தப் பாட்டைப் போட்டீங்க? தவிப்பா இருக்கு! மீள முடியலை!
அலுவலகத்தில் படிப்பதால் ஆசுவாசப்படுத்திக் கொள்ள எழுந்து வெளியே சென்று விட்டேன்!
அவன் வேணும்னா வெறும் வடிவேல் ஏந்தலாம்!
ஆனா நானோ வேல் ஏந்தும் அவனையே ஏந்தி இருக்கேனே! என்ன செய்ய? "நான் ஏந்திய உனை" மறந்தால்....?????
இன்னருளால் இனி எனக்கு ஒரு பாரம் ஏற்றாமல்
எம்பெருமான் அடைக்கலங் கொள் என்னை நீயே!
சரணகம லால யத்தை அரை நிமிட நேரமட்டில் தவ முறை மறக்க கடவேனே முருகா .//மறவாமையால் அமைத்த மன க்கோயில் உள்ளிருத்தி ..//பிறவாத ஆனந்தம் பேறு பேர வேண்டும் ..மாயோன் மருகா ..//சித்ரம்./
நல்லாருக்கு !!!!!!
இந்தப் பாடல் எந்த ராகம் ?
எனக்கும் இதே கேள்விதான்!
Post a Comment