சிக்கல் சிங்காரா! சீறி எழும் கடலைத் தணிப்பாய் தணிகாசலா!
சிக்கல் சிங்காரா ரூப மயில்மணி குமரா
சீறி எழும் கடலினைத் தணிப்பாய் தணிகாசலா
(சிக்கல் சிங்காரா)
கடலின் நீல நிறத்தைப் பார்த்து
சீற்ற அலைகள் தாக்குவதேனோ
பல அவுணர்கள் உயிரைக் குடிக்க
அண்ட அவலையைத் தடுப்பாயா மயூரா
(சிக்கல் சிங்காரா)
படைத்த நீயே காப்பதை மறந்தாயா முருகா
பச்சைப் புயல் வீசிப் பட்டுப் போக விடுவாயா
ஆவினன்குடி அழகா அமைதி கொள்ளச் செய்வாய்
ஆறிரு கண்களில் ஆறுதலாய் வருவாய்
(சிக்கல் சிங்காரா)
ஆழிப்பேரலை மீண்டும் வந்து தாக்காமல் இருக்க வேண்டும் என்று சித்ரம் அவர்கள் சிக்கல் சிங்கார வேலனை வேண்டி எழுதிய பாடல் இது.
3 comments:
//ஆழிப்பேரலை மீண்டும் வந்து தாக்காமல் இருக்க வேண்டும் என்று சித்ரம் அவர்கள் சிக்கல் சிங்கார வேலனை வேண்டி எழுதிய பாடல் இது//.
You have a good heart.God Bless you!
சுனாமி, வெள்ளம் , நில நடுக்கம் என்று எல்லாரும் அல்லல் படும் இந்னேரத்தில் அருமையான ஒரு பாடல்.
ஓம் முருகா
கேட்டதை தருபவன் அப்பன் முருகன்
அருமையான வரிகள்
ஓம் முருகா
Post a Comment