இன்று கிருத்திகைத் திருநாள்.முருகனுக்கு உகந்த நாள். போனமாதம் ஊரில் இல்லாததால் விட்டுப்போய் விட்டது. அவன் அருள் இல்லாமல் அவனை வணங்கமுடியுமா என்ன? தமாதம் தகாதைய்யா என்றஒரு அருமையான் தமிழ்ப்பாடல் முருகன் மீது உண்டு. இதனை இயற்றியவர் திரு.லால்குடி ஜெயராமனின் தந்தை திரு. லால்குடி கோபலய்யர் அவர்கள்.இன்று இந்த மோஹன கல்யாணி ராகப் பாடல் திருமதி. மும்பை ஜெயஸ்ரீயின் குரலில் பார்த்து கேட்டு ரசிக்கலாம்.பாடலைக்கேட்கும் /பார்க்கும் போதே முருகனுக்கு நடக்கும் அபிஷேகம், அலங்காரம்,மற்றும் தீபராதனையும் கண்டு வணங்கலாம் வாருங்கள் ராகம் : மோஹன கல்யாணி பல்லவி தாமதம் தகாதைய்யா தயாபரா துணை முருகய்யா (தாமதம்...) அனுபல்லவி தாமச குண தீனனான தமியேனை ஆள தருணமீதைய்யா ( தாமதம்.....) சரணம் மாலும் அயனும் காணா மஹாதேவன்மைந்தா மாது வள்ளி தேவமாது மகிழ் கந்தா வேலும் மயிலும் எந்நாளும் என்னைக் காக்கவே வேவேகமாகவே வரும் வரம் தாரும் (தாமதம்.....)
கேஆர்ஸ் இந்த முருகன் எங்கே இருக்கிறார் தெரியுமா? எனது நண்பர் ஒருவருடன் சென்னை யில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றேன். அவர்கூட என்னை அந்த கோவிலுக்கு முன்னால் வைத்து போட்டோகூட எடுத்தார்.இன்னமும் அந்த போட்டோ வரப்போகிறது. ஒரு வேளை 60 ஆம் கல்யாணத்துக்கு வரும் போது வருமோ என்னவோ அந்த முருகனுக்குத்தான் தெரியும்
நினைத்தேன் தி.ரா.ச. இது சென்னை கோவில் தான் என்று. ஆழ்வார் திருநகரி அருகில் இருக்கும் கோவிலா பூங்கா நகரில் இருக்கும் கோட்டமா? எங்கே இவரைப் பார்த்தேன் என்று சரியாக நினைவில்லை. கோட்டம் என்று தான் நினைக்கிறேன். சரியா?
தி.ரா.ச. அப்படியே யாருடைய அறுபதாம் வருட விழாவிற்கு அந்த நண்பர் வரப்போகிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அந்த நண்பருக்கே அறுபது வருடம் ஆகிவிட்டது என்று எண்ணிக் கொள்ளப் போகிறேன். :-)
குமரன் அந்த நண்பர் தன் தந்தையின் 60 ஆம் கல்யாணத்திற்கு சென்னை வரப்போவதாக செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது.அவர் வருவார் ஆனா வரமாட்டார்(நம்ம வீட்டுக்கு) அப்படீன்னு...
13 comments:
தூரன் பாட்டு முருகனை தூரத்தில் இருந்து அண்மைக்கு அழைத்து வந்து விட்டது!
மோகன கல்யாணியும் அருமை திராச!
முருகப் பெருமான் விபூதி அபிஷேகம் கண் குளிரக் கண்டேன்!
திருத்தணிகை உற்சவ மூர்த்தி தானே?
மிக மிக அருமையான பாடல் தி.ரா.ச. மிக்க நன்றி.
இதற்குமுன் இப்பாடலைக் கேட்டதில்லை. அறியக் கொடுத்தமைக்கு நன்றிகள் தி.ரா.ச ஐயா.
எல்லா வரிகளிலும் மோனைகள் தெரிகின்றன!
அருமையான பாடலுக்கு நன்றி ஐயா. கூடவே அபிஷேக ஆராதனையும் காணக் கொடுத்தமைக்கும்.
முருகனை தூரத்தில் இருந்து அண்மைக்கு அழைத்து வந்து விட்டது!
ஆமாம் கேஆர்ஸ் என்னையும் கிட்டே அழைத்து வந்து விட்டது.நன்றி
நன்றி குமரன்.
இதற்குமுன் இப்பாடலைக் கேட்டதில்லை. ஆமாம் ஜீவா இதுவரை புழக்கத்தில் இல்லாத ஆனால் மிக நல்ல பாடல்களை அவ்வப்போது போடலாம் என்று நினைக்கிறேன்
அபிஷேக ஆராதனையும் காணக் கொடுத்தமைக்கும்.
நன்றிகவிநயா.ஆடலுடன் பாடலையும் அபிஷேக ஆரதனையும் பார்ப்பதிலேதான் சுகம்.... சுகம்.... sukam..
கேஆர்ஸ் இந்த முருகன் எங்கே இருக்கிறார் தெரியுமா? எனது நண்பர் ஒருவருடன் சென்னை யில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றேன். அவர்கூட என்னை அந்த கோவிலுக்கு முன்னால் வைத்து போட்டோகூட எடுத்தார்.இன்னமும் அந்த போட்டோ வரப்போகிறது. ஒரு வேளை 60 ஆம் கல்யாணத்துக்கு வரும் போது வருமோ என்னவோ அந்த முருகனுக்குத்தான் தெரியும்
நினைத்தேன் தி.ரா.ச. இது சென்னை கோவில் தான் என்று. ஆழ்வார் திருநகரி அருகில் இருக்கும் கோவிலா பூங்கா நகரில் இருக்கும் கோட்டமா? எங்கே இவரைப் பார்த்தேன் என்று சரியாக நினைவில்லை. கோட்டம் என்று தான் நினைக்கிறேன். சரியா?
தி.ரா.ச. அப்படியே யாருடைய அறுபதாம் வருட விழாவிற்கு அந்த நண்பர் வரப்போகிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அந்த நண்பருக்கே அறுபது வருடம் ஆகிவிட்டது என்று எண்ணிக் கொள்ளப் போகிறேன். :-)
பூங்கா நகரில் இருக்கும் கோட்டமா.
குமரன் சரியாகச் சொல்லி விட்டீர்கள். கந்தக்கோட்டத்துள் வளர் தல ஓங்கும் கந்த வேள்தான்
குமரன் அந்த நண்பர் தன் தந்தையின் 60 ஆம் கல்யாணத்திற்கு சென்னை வரப்போவதாக செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது.அவர் வருவார் ஆனா வரமாட்டார்(நம்ம வீட்டுக்கு) அப்படீன்னு...
Post a Comment