Monday, September 01, 2008

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....!



கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்

பாடியவர்: டி.எம்.எஸ்

26 comments:

cheena (சீனா) September 01, 2008 11:49 AM  

அழகான தமிழில் அருமையான உச்சரிப்பில் டிஎமெஸ் பாடியது - கேட்பதற்கே சுகமாக இருந்தது. நல்ல பதிவு - நல்வாழ்த்துகள்

குமரன் (Kumaran) September 01, 2008 3:20 PM  

எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அமுதம் இந்தப் பாடல்.

Kavinaya September 01, 2008 5:02 PM  

எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நன்றி சிபி.

R.Chellapandian February 19, 2018 11:49 AM  

பக்தியைத் தூண்டி பரவசப்படுத்தும் இனிமையான பாடல்.

R.Chellapandian February 19, 2018 11:50 AM  

பக்திப்பரவசமான பாடல்ல்.

Unknown November 16, 2018 8:21 PM  

1964-65ல் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தினசரி காலை நேரத்தில் என்னை பாடச்சொன்ன பாடல் இது.

Unknown November 29, 2018 3:16 AM  

👌👌✌👌

Aazhi Veeramani May 13, 2019 8:32 PM  

இவ்வளவு அழகான சொற்களை பயன்படுத்தி பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் இல்லையே

Aazhi Veeramani May 13, 2019 8:32 PM  

இவ்வளவு அழகான சொற்களை பயன்படுத்தி பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் இல்லையே

Muppal September 05, 2019 4:30 PM  

பாடல் ஆசிரியர் பெயர் கவிஞர் வாலி... இது கவிஞர் வாலியின் முதல் பாடல்

SATHIYAMOORTHY December 28, 2019 1:43 AM  

THIS MURUGAN SONG REALY VERYSUPER ONE VERY NICE VERY EXCELLAT

Unknown July 02, 2020 10:52 AM  

வாலி அவர்கள்

SUTHARSANAM K August 02, 2020 10:01 AM  

அருமையான தமிழாலும்....வளமான குரலாலும் அழகன் முருகனை டி எம் எஸ் பாடியுள்ளது அனைவரையும் கவர்வதாக உள்ளது

kasampattysuresh September 18, 2020 9:20 PM  

இசை?

Alagu Radhakrishnan February 07, 2021 8:34 PM  

கவிஞர் வாலி ... நான் ஸ்ரீரங்கத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை. ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும். காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது. ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன். சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன். அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது. கனவிலே முருகன் வந்து என்னைப் பற்றி பாடு என்றான். அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். அம்மா, முருகா என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் அனைவரும் எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா என்று கேட்டார்கள். நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள் என்று சமாளித்து விட்டேன். வீட்டில் சொல்ல முடியாது. அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன். அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு, பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள். ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று. . கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..
அகிலாண்டேஸ்வரி அம்மன் குங்குமத்தை தினமும் நெற்றில் வைத்துக் கொள்வார். வாலி கடைசிவரை முருகா, முருகா என்று அடிக்கடி சொல்லுவார்,
இவரை திரை உலகில் அடையாளம் காண வைத்து. ..

Alagu Radhakrishnan February 07, 2021 8:43 PM  

கவிஞர் வாலி ... எனக்கு TMS அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன். நண்பர்கள் சொன்ன வரிகள் என்னை உறுத்தியது. அதன் வரியில் முருகன் மேல் பாடல் புனைந்து TMS க்கு போஸ்ட் கார்டு லே எழுதி அனுப்பிவிட்டேன். அகிலாண்டேஸ்வரி தாயே நீயும் உன் மகனும் தான் இனி எனக்கு துணை என்று வேண்டிக்கொண்டேன். . TMS இருக்கும் பிஸியில் என் கார்டுயை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன். ஆனால் என் தாயின் அருள், முருகனின் கருணை TMS என் கார்டை பார்த்து, அவரே அதற்க்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார். பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது, என் முருகன் பாடலை நீ எழுதி கொடுத்தாய், மிகவும் நன்றாக இருந்தது, நானே இசை அமைத்து பாடி உள்ளேன், வரும் திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு, மெட்ராஸ் க்கு வா, உனக்கு நான் சன்மானம் தரணும், இது போன்று பாடல்கள் நிறைய நீ எழுது என்று போட்டு இருந்தார். எனக்கு நம்ப முடியவில்லை, சந்தோசத்தில் தாயே, முருகா என்று வீட்டிலேயே உரக்க கூவிவிட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், கோபம், என்னது என்று கோபமாக கேட்டார்கள். நான் பதில் பேசவில்லை, கடிதத்தை கொடுத்தேன். அனைவரும் வாங்கி படித்தார்கள். அவர்களுக்கும் சந்தோசம் தான். முகத்தில் தெரிந்தது, ஆனால் வெளியில் காட்டி கொள்ளாது இருந்துவிட்டார்கள். அப்பா மட்டும் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பதில் சொல்லவில்லை. ஆனால் எனக்கு உற்ச்சாகம் அளித்தார், அப்போதும் அவர் ரெங்கநாதனை பற்றி ஒரு பாட்டு எழுதி TMS பாடணும் என்றார். எனக்கு உள்ளூர சிரிப்பு, இதுவரை சாப்பாடு போடாத ரெங்கநாதனை பற்றி நான் என்ன எழுதணும் என்று நினைத்தேன். அப்பா மெட்ராசுக்கு செல்ல உத்தரவு கொடுத்துவிட்டார். நண்பர்கள் தான் அதிக அளவு சந்தோஷப்பட்டார். மெட்ராஸ் சென்றேன், TMS சை பார்த்தேன், பாடலுக்குண்டான அன்பளிப்பாக சின்ன தொகையை கொடுத்து என்னை நீ ஏன் சீனிமாவுக்கு பாடல் எழுத கூடாது என்று கேட்டார். நான் என்ன வர மாட்டேன் என்றா சொன்னேன்? கூப்பிடுங்கள் உடனே உங்கள் பின்னால் ஓடி வருகிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். . ஒருநாள் அவர் என்னை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவனை சரியாக பயன்படுத்து, நன்றா எழுதுகிறான் என்று சொல்லி வைத்தார். என் மனதில் தோன்றியது காசி விஸ்வநாதர் தான். அம்மையும் அப்பனும் எனக்கு கருணை புரிந்து விட்டார்கள் என்றே நினைத்தேன். ஆம் விஸ்வநாதன் உதவியால் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நான், சாப்பாட்டில் கை வைக்க நேரமில்லாமல் எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தேன். என்று வாலி தனது ஆரம்ப வாழ்க்கையில் நடந்த ரகசியத்தை கம்பன் விழாவில் போட்டு உடைத்தார். . வாலி கடைசிவரை முருகா, முருகா என்று அடிக்கடி சொல்லுவார், அகிலாண்டேஸ்வரி அம்மன் குங்குமத்தை தினமும் நெற்றில் வைத்துக் கொள்வார். இரவு படுக்கும் போது விபூதியை தனது நெஞ்சிலும், கை, மற்றும் நெற்றியிலும் பூசிக்கொள்வாராம். . TMS & MSV இருவரிடமும் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருந்தார். .

Unknown May 08, 2021 10:27 PM  

வாழ்க தமிழ் கடவுள் புகழ் கான்பதெல்லாம் கணினியில் கந்தனின் காந்த நிலையே..ஆம் காந்தபுலமே எல்லா நிகழ்விற்க்கும் மூலம் அந்த காலபுலத்தில் ஊடுறுவும் தூய காந்த ஆற்றலை கந்தனின் அருளால் பெற்று விட்டால் நாம் அவனின் கருனையால் அனைவருக்கும் உதவமுடியும் ஆம் நினைத்ததை சாசிக்க முடியும் அவன் தூயுனையால. ஓம் முருகா ஓம் முருகா சரணம்.. நன்றி.

Unknown June 07, 2021 11:40 AM  

கார்டில் எழுதி அனுப்பினார் வாலி

விஜய் March 14, 2022 2:57 AM  

கவிஞர் வாலி

Anonymous October 31, 2022 12:43 AM  

அருமை அருமை மிகவும் நன்றி

Anonymous March 08, 2023 7:24 AM  

Great job singing

Anonymous April 06, 2023 6:15 PM  

இந்த பாடல் உருவாக காரணம்
வாலியின் சகோதரிக்கு திடீரென உடல் நிலை சரியில்லை, திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை செய்தும் பலனில்லை, மருத்துவர்கள் இவரது வயிற்றில் உள்ள நீரை இரண்டு முறைக்கு மேல் எடுத்தால் இறந்து விடுவார் என கூறினர், செய்வதறியாது நின்ற வாலிக்கு அவர் நண்பர் அருகில் ஒரு மருத்துவர் உள்ளர் அவரிடம் சென்று பார்போம் என யோசனை கூறினார்
வாலியும் அரை மனதோடு சென்றார்
மருத்துவர் ஒரே ஊசியில் அந்த நோயை போக்கி,
சகோதரி குணமடைந்தாள்
அப்போது மருத்துவம் பார்த்த மருத்துவர் பெயர் சுப்ரமணியம்
கவிஞர் அப்போது முருக பெருமான் தான் காப்பாற்றியதாக எண்ணி இந்த பாடலை எழுதினார்

Anonymous May 02, 2023 9:04 PM  

Ullam uruguthayya....✍️🙏

Anonymous May 19, 2023 11:14 AM  

" கவிஞர் வாலி "

Anonymous August 08, 2023 11:19 AM  

Super

Anonymous March 15, 2024 8:10 AM  

எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த பாடலை TMS ஐயா அருமையான குரல் வளம் 🙏🕉️🦚 ஓம் சரவணபவ போற்றி ஓம் 🦚🕉️🙏

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP