திருப்பரங்குன்ற வேலா........
இன்று கிருத்திகைத் திருநாள். முருகனை வணங்க வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி.ஆறுபடை வீடுகளையும் விருத்தத்திலும் பாட்டிலும் கொண்ட அருமையாண பாடல்.ஹிந்தோள ராகத்தில் திருமதி. அருணா சாயிராமின் குரலில் ஒலிக்கிறது.எத்தனை கிருத்திகை வந்தாலும் எத்தனை பாடல்கள் முருகன் மீது இட்டாலும் எனக்கு அலுக்கவே இல்லை படிப்போருக்கும் கேட்பவருக்கும் அப்படித்தான் இருக்கும் எண்ணத்தில் இடுகிறேன்.அடுத்தது ஸ்கந்த ஷஷ்டியில் பார்க்கலாம்.முருகன் அருள் முன்னிற்கும்
ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
விருத்தம்
திருச்செந்தூர் சீரலை வாழ் தேவா போற்றி
திருப்பழனியிலிருக்கும் தேவா போற்றி
திருவேரகத்து சாமிநாதா போற்றி
திருத்தணி முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தேன்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மா போற்றி
செந்தமிழ் தெய்வமே போற்றி
ஆறுபடைகொண்ட திரு முருகா போற்றி போற்றி.
பல்லவி
திருப்பரங்குன்ற வேலா... சீர்மிகும்
திருஆலவாய் பரசிவனோடு அங்கயற்கண்ணி கொஞ்சி முத்தாடும் பாலா...(திரு....)
அனுபல்லவி
விருப்புடன் விண்ணோர்க்கும் கிடைத்தரும் தீந்தமிழ் திருப்புகழ்
தமிழ் திருப்புகழ் நின் திருப்புகழ் பாட திருவருள் தா பாலா(திரு....)
சரணம்
அமரர் முனிவரும் மெய்யடியவரும் வணங்கி
வாராய் குமரா குமரா என்று துதிக்க
கோயில் கொண்ட (திரு....)
-
12 comments:
காலை பஞ்சாங்கம் பார்த்தவுடன் நினைத்துக் கொண்டேன் இன்று பதிவு இருக்குமென்று. :)
பாடலை இன்னும் கேட்கவில்லை, வீட்டுக்குப் போய்தான் கேட்கணும்.
//படிப்போருக்கும் கேட்பவருக்கும் அப்படித்தான் இருக்கும் எண்ணத்தில் இடுகிறேன்//
அயில் வேலவன் திருப்பாட்டும் அலுக்குமோ?
அந்த அலுப்பை விலக்குமோ?
அன்றி மனத்தை உலுக்குமோ?
கந்தக் களிப்பை அளிக்குமோ?
//திருப்பொலிய உலகாளும் செம்மா போற்றி//
செம்மலே என்பதன் சுருக்க வடிவோ செம்மா?
சாமஜ வர கமனா-வும் ஹிந்தோளம் தானே, திராச?
//அடுத்தது ஸ்கந்த ஷஷ்டியில் பார்க்கலாம்//
ஆறு நாளும் ஏற்கனவே துண்டு போட்டு வைத்தேன் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)
மௌளி வீட்டுக்கு போய் நிச்சியம் கேளுங்கள். நல்ல பாட்டு.
ஆமாம் கேஆர்ஸ். எழில் கொஞ்சும் மாமயில் ஆடும் திருப்பரங்குன்றம் அமர்ந்தவன் அலுக்காதவன் தான்
சரிதான் கேஆர்ஸ். செம்மலே என்பதுதான் கவிதைக்காக செம்மா என்று குறுகியது.சாமாஜ வர கமனாவும் ஹிந்தோளம் ராகம்தான்.ஒருநாள் எனக்கு கைகுட்டைபோடவாவது அனுமதிஉண்டா?. ஆச்சார்ய ஹிருதயத்தில் மீண்டும் எழுதுங்கள்.
விருத்தம் நன்றாக இருக்கிறது தி.ரா.ச.
விருத்தத்தில் ஆறுபடை கொண்ட திருமுருகா என்று சொல்லிவிட்டு திருப்பரங்குன்றத்தை விட்டுவிட்டார்களே என்று நினைத்தேன். ஒருவேளை திருத்தணி முதல் மலைகள் என்று சொன்னதில் அடங்கிவிடுமோ என்றும் நினைத்தேன். ஆனால் அது குன்று தோறாடலைக் குறிக்கிறதே என்று திகைத்தேன். அப்புறம் தான் பாடல் தொடங்குவதே திருப்பரங்குன்ற வேலனை அழைத்துத் தான் என்று புரிந்தது. :-)
//ஆச்சார்ய ஹிருதயத்தில் மீண்டும் எழுதுங்கள்//
ஹா ஹா ஹா
இது ஆக்ஞையா? வேண்டுகோளா?
ஆக்ஞை என்றால் கட்டாயம் எழுதுகிறேன்!
(அண்ணனின் உத்தரவும் பெற்று! :)
ஆச்சார்ய ஹிருதயதிற்கு மூத்த அண்ணன் என்ற முறையில் ஆணையென்றே வைத்துக்கொள்ளுங்கள்
குமரன் பாட்டுடைத் த்லைவனே உங்க ஊர்காரார்தான்.திருப்திதானே
//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆச்சார்ய ஹிருதயதிற்கு மூத்த அண்ணன் என்ற முறையில் ஆணையென்றே வைத்துக்கொள்ளுங்கள்//
ஆகா...இதற்கு மேல் அடியேனால் ஒன்றும் சொல்ல முடியாது.
வலைப்பூ அழைப்பு (Invite) அனுப்பி வையுங்கள்!
மெளலி அண்ணா, உங்கள் உத்தரவையும் பெற்றதாகவே எடுத்துக் கொள்கிறேன்! :)
ஆஹா, அருமையான பாடல். 'ச்சாமிநாதா' என்ற அவர்கள் உச்சரிப்பை ரசித்தேன் :) "...கொஞ்சி முத்தாடும் பாலா" என்ற வரி மிக அழகு. கிருத்திகைக்கு தவறாமல் பதிவிடும் உங்களுக்கல்லவா நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்?
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
Post a Comment