கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
இந்தப் பாடல் திரைப்படத்தில் வந்த பாடலாம். எழுதியவர் யாரென்று தெரியவில்லை. இசையமைத்தவரும் பாடியவர்களும் நன்கு செய்திருக்கிறார்கள். கேட்டுப் பாருங்கள்.
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை (கண்ட)
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட)
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரர் மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டிவிட்டார் (கண்ட)
திரைப்படம்: கண்ட நாள் முதல்
வெளிவந்த வருடம்: 2005
பாடியவர்கள்: பூஜா, சுபிக்ஷா
இசை: யுவன் சங்கர் ராஜா
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை (கண்ட)
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை (கண்ட)
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை
கோலக் குமரர் மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டிவிட்டார் (கண்ட)
திரைப்படம்: கண்ட நாள் முதல்
வெளிவந்த வருடம்: 2005
பாடியவர்கள்: பூஜா, சுபிக்ஷா
இசை: யுவன் சங்கர் ராஜா
19 comments:
பாடலை இயற்றியது என்.எஸ்.சிதம்பரம் அவர்கள்.
நமது மரபிசையில் இதுபோல இன்னும் பல இனிய கிருதிகளை இயற்றியிருக்கிறார். ஏற்கனவே மதுவந்தி ராகத்தில் பாடப்பட்டு புகழ் பெற்ற பாடல்தான் இது. சுதா ரகுநாதன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ போன்றோர் கச்சேரிகளில் பாடுயிருக்கிறார்கள். எனவே, இத்திரைப்படத்திற்காக இயற்றிய பாடலில்லை இது! பெரியசாமித் தூரன் போல இவரும் தமிழிசைக்கு இவரும் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார்.
இது எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. படத்தில் வரும் பாடலை பாடியவர்கள் சுபிக்க்ஷா மற்றும் பூஜா. :)
சொல்ல வந்ததை ஜீவா சொல்லிட்டார்!!
யுவனின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
உண்மையைச் சொல்லுங்கள்,
//கோலக் குமரர் மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்//
இந்த வரிதானே அந்தப் பாடலின் சிறந்த வரி?
(அது சரி, கோலமெல்லாம் போட்டுக் கொடுத்தால் எந்தக் குமரனைத் தான் பெண்களுக்குப் பிடிக்காது?
பாட்டு நல்லாருக்கு. படம் சூப்பர்! (பதிவுல இருக்க படத்தை சொன்னேன் :)
நான் அடிக்கடி பாட முயலும் பாடல்
:-).
சுதா பாடிக் கேட்டிருக்கிறேன்.
நன்றிங்க குமரன்.
திரு. என்.எஸ். சிதம்பரம் அவர்களைப் பற்றியும் இந்தப் பாடலைப் பற்றியும் சொன்னதற்கு மிக்க நன்றி ஜீவா.
நன்றி மது.
நன்றி கொத்ஸ்.
நன்றி இந்தியன்.
அந்த வரியும் சிறந்த வரி தான் இரத்னேஷ். :-)
நன்றி கவிநயா அக்கா. :-)
இந்தப் பாடலைக் கேட்ட முதல் நானும் அடிக்கடி பாட முயல்கிறேன் மௌலி. :-)
மிகவும் நல்ல பாடல். எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல். அளித்தமைக்கு நன்றி. குமரன்
உண்மை தான் தி.ரா.ச. நானும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நேற்று டி.கே.எச். கலைவாணன் அவர்கள் தமிழிசை பொழிந்தார்கள். 30 பேர் இருந்திருப்போம். அதுவே தமிழிசைக்கு பெரிய எண்ணிக்கை என்றார். முதன் முதலாய்க் கேட்பதால் சற்றே உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். மரபிசை பின்பற்ற எளிதாகவே இருந்தது.
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைகாண
அள்ளி உண்டிடலாம் வாரீர்
தனிமையில் தவம் புரியும் தலைவனவன் போன்ற பாடல்களை கேட்டேன். ஆடிக்கொண்டார் துள்ளலான நடையில் மிகவும் கவர்ந்தது. மற்ற பாடல்களை இனிதான் கேட்கணும்.
எல்லாப் பாடல்களும் இனிமை. இடையிடையே பாடல்கள் குறித்த சிறப்புத் தகவல்கள் தந்து அசத்தினார். வீட்டுக்கு வந்து தேடினால் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் எழுதிய வலைப்பூக்கள் பளிச்சிடுகின்றன.
இந்தப்பாடலை அவர் பாடா விட்டாலும் தேடலின் தொடர்ச்சியாய் கிடைத்து. இன்று மட்டும் 100 முறை கேட்டிருப்பேன். கண்ணனைப் பற்றி காதல் பாட்டுகள் பல உண்டு. அவற்றை எல்லாம் மிஞ்சுகிறது இந்த ஒரு பாடல்.
சுதா இரகுநாதனின் குரலில் கேட்க http://nadopasana.blogspot.com/2006/01/blog-post_24.html. (இன்னொரு தளத்தைப் பதியாலாம்னு:-)
தமிழிசை, இசை அறிமுகம் தொடர்பான சுட்டிகள் தந்தால் மகிழ்ச்சி. mugavairam@gmail.com. இசை குறித்த அறிமுகத் தொடர் எழுதுங்களேன். என் போன்றவர்கள் தமிழிசையை பின் தொடர ஏதுவாய் இருக்கும்.
நன்றி.
//முகவை மைந்தன் said...
நேற்று டி.கே.எச். கலைவாணன் அவர்கள் தமிழிசை பொழிந்தார்கள். 30பேர் இருந்திருப்போம். அதுவே தமிழிசைக்கு பெரிய எண்ணிக்கை என்றார்//
:)
ராம், எப்படி இருக்கீக?
டி.கே.எஸ் என்ன பாட்டெல்லாம் பாடினாரு? ஆழ்வார் பாசுரம், தேவாரத் திருமுறை, பண்ணிசை பற்றி எல்லாம் அழகாச் சொன்னாரா?
//முதன் முதலாய்க் கேட்பதால் சற்றே உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். மரபிசை பின்பற்ற எளிதாகவே இருந்தது//
ஆமாம்! ரொம்ப இலக்கணம் எல்லாம் இல்லை! எளிமை தான்!
//தமிழிசை, இசை அறிமுகம் தொடர்பான சுட்டிகள் தந்தால் மகிழ்ச்சி. mugavairam@gmail.com. இசை குறித்த அறிமுகத் தொடர் எழுதுங்களேன்//
இசை இன்பம் என்ற ஒரு வலைப்பூ..இப்போ ரொம்ப இல்லை...முன்பு நானும், ஜீவாவும், இன்னும் சில அன்பர்களும் எழுதிக் கிட்டு இருந்தோம்...அங்கே தமிழிசை பற்றிய எளிய அறிமுகம் கிடைக்கும்!
தமிழிசை வரலாறு,
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை, வேலன் வெறியாடல், கானல் வரி...
அப்படியே காரைக்கால் அம்மையார்...
பின்னாலேயே ஆழ்வார்கள்...
பா+சுரம் = கவிதை+இசை
திருச்சந்த விருத்தம், ஆண்டாள் நாட்டுப்புறத் தொனியில் கூடல் இழைப்பது, பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ்-தாலாட்டு, நம்மாழ்வாரின் மாறன் இன்கவிகள், திருமங்கை முதலில் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த வழிநடைச் சிந்து...
நாயன்மார்கள்...சம்பந்தப் பெருமானின் தமிழ்ப் பண்ணிசை, அப்பர்,சுந்தரரின் பதிகங்கள், மணிவாசகர் சாழல்,கோத்தும்பீ...
பின்னாலேயே...
அருணகிரிநாதர் சந்தக் கவிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில்..
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து
தமிழிசை மும்மூர்த்திகள் - முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர்...
அப்படியே தொட்டு...
பாபநாசம் சிவன், பெ.தூரன், பாரதி(கள்), பாரதிதாசன் என்று இன்று வரை....
யாழ், முழவு, பறை, குழல், நாதசுரம் என்ற கருவிகள்-ன்னு அப்படியே ஒரு ரவுண்டு வந்துருங்க! :)
இந்தாங்க சில சுட்டிகள்:
தமிழிசையின் ஆதி அறிஞர் காரைக்கால் அம்மையின் இசை: http://madhavipanthal.blogspot.com/2008/11/icon-poetry.html
காவடிச் சிந்தின் கதை: http://iniyathu.blogspot.com/2009/08/kavadi-chinthu.html
இசை இன்பம் வலைப்பூவில் தமிழிசை முயற்சிகள்: http://isaiinbam.blogspot.com/search/label/tamizh%20isai
தேவார இசை:
http://sivanpaattu.blogspot.com/search/label/tamizhisai
பிறமொழிப் பிரபல பாடல்களைத் தமிழிசையில் பழக முயற்சிகள்: http://madhavipanthal.blogspot.com/search/label/tamizh%20isai
கண்ணன் பாட்டில், சில தமிழிசைப் பாடல்களும், தமிழிசைக்குக் கொணர்ந்த பாடல்களும் கிடைக்கும்!
கிருஷ்ணா நீ பேகனே என்ற பிரபல பாடலைத் தமிழுக்குக் கொணர்ந்தது தான், அந்த வலைப்பூவின் 100வது பதிவு!
இன்னும் சுட்டிகள் அப்பறமாக் கொடுக்கறேன்! :)
ஆழ்வார் மொழி-ன்னு ஒரு வலைப்பூவில் பாசுரங்களை அழகாப் பதிக்கறாங்க! பார்த்து இருக்கீங்களா? :))
http://aazhvarmozhi.blogspot.com/
அங்கே பா+சுரத்தில் பா மட்டும் கொடுக்கறாங்க; சுரமும் சேர்த்து கொடுக்கலாம்! :))
நல்ல ரசனை..!!
Post a Comment