Saturday, August 09, 2008

கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு

வலையுலகின் சண்மதச் செல்வரும் வைணவ வாரியாருமாகிய திரு கே.ஆர்.எஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆகையால் நாம் அனைவரும் கூடி அவரை வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். முருகனருள் இனிதே அமைய வணங்குவோம்.

முன்பொருமுறை காவடிச் சிந்து எழுதி அதை அன்பர்களைப் பாடித்தரச் சொல்லிக் கேட்டிருந்த போது கே.ஆர்.எஸ் பாடியனுப்பியிருந்தார். அந்தப் பாடலை இப்பொழுது அவருடைய பிறந்தநாள் அன்று முருகனருள் வலைப்பூவில் ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கே.ஆர்.எஸ்.

பாடலும் வரிகளும் கீழே.

Valliyai Thottu - Kannabiran Ravishankar

வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்

அன்புடன்,
ஜிரா(எ) கோ.இராகவன்

17 comments:

வெற்றி August 09, 2008 12:41 AM  

கண்ண்பிரான் ரவிசங்கருக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

இலவசக்கொத்தனார் August 09, 2008 12:59 AM  

வாழ்த்துகள்.

Anonymous August 09, 2008 1:20 AM  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கே ஆர் எஸ், அப்படியே ஜிரா பிறந்த நாள் வரும்போது, அவரை கண்ணன் காவடிப்பாட்டு பாடவைச்சு ஒரு பதிவு கண்டிப்பா போட்டுருங்க.

M.Rishan Shareef August 09, 2008 1:34 AM  

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

ஷைலஜா August 09, 2008 2:47 AM  

அரங்கமுருகன் அருளில் ரவிசங்கர் நீண்ட நாள் வாழ்ந்துசாதனைகள் புரிய வாழ்த்துகள்!

Kavinaya August 09, 2008 3:19 AM  

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கண்ணா!

Anonymous August 09, 2008 4:33 AM  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா :D

ப்ரசன்னா August 09, 2008 5:31 AM  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் க.ர.ச

ஆயில்யன் August 09, 2008 5:58 AM  

கே.ஆர்.எஸ் அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்:)

Kannabiran, Ravi Shankar (KRS) August 09, 2008 6:21 AM  

இப்போதைக்கு அப்போதே பாடி வைத்தேன்-ன்னு ஆயிடுச்சா! ஹா ஹா ஹா! நன்றி ராகவா!

வெற்றி அண்ணா, கொத்ஸ், சின்ன அம்மிணி அக்கா, ரிசானு, ஷைலுக்கா, கவி அக்கா, துர்கா ஜிஸ்டர், ப்ரசன்னா, ஆயில்ஸ் அண்ணாச்சி - நன்றி!
பழனி பஞ்சாமிர்தம் தான் என் கிட்ட இப்போதிக்கி இருக்கு!
Double layered frozen strawberry caramel cake - ஜிரா கட் பண்ணிக் கொடுப்பாரு! மறக்காம வாங்கிக்குங்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) August 09, 2008 6:22 AM  

//சின்ன அம்மிணி said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கே ஆர் எஸ், அப்படியே ஜிரா பிறந்த நாள் வரும்போது, அவரை கண்ணன் காவடிப்பாட்டு பாடவைச்சு ஒரு பதிவு கண்டிப்பா போட்டுருங்க//

அக்காவின் ஆணை!
ஜிரா கேட்டுக்கோங்க! நோ எஸ்கேப்பு! :)

மெளலி (மதுரையம்பதி) August 09, 2008 10:00 AM  

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) August 10, 2008 11:22 AM  

dankees mouli anna! :)

கானா பிரபா August 11, 2008 7:33 AM  

ஆகா நான் அவருக்கு கண்ணன் பாட்டு போட்டேன் ;)

Kannabiran, Ravi Shankar (KRS) August 11, 2008 11:27 AM  

//கானா பிரபா said...
ஆகா நான் அவருக்கு கண்ணன் பாட்டு போட்டேன் ;)
//

சபாஷ்.....சரியான போட்டி! :))

மடல்காரன்_MadalKaran August 11, 2008 3:11 PM  

வாழ்த்துக்கள் கேஆர்எஸ்
தொடரட்டும் உங்கள் சேவை
அது என்றும் எங்களுக்கு தேவை
இன்னும் வளர்க்கும் எங்கள் ஆவலை
மாமன் கண்ணனும்
மருகன் முருகனும்
என்றும் துணை உண்டு.

அன்புடன் கி.பாலு

சிவமுருகன் August 12, 2008 9:14 AM  

கே.ஆர்.எஸ்!

என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP