தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே (2)
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே
அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே ... முருகய்யா...
அங்கம் மணக்கவில்லையே (2)
சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே ... குமரய்யா ...
சீர் மணம் வேறு இல்லையே
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே ... முருகய்யா ...
முதற் பொருளாகவில்லையே
சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே ... குமரய்யா ...
மெய்ப் பொருள் வேறு இல்லையே
எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே ... முருகய்யா...
எண்ணத்தில் ஆட வில்லையே
மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே ... குமரய்யா ...
மற்றொரு தெய்வமில்லையே
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே ... முருகய்யா ...
தீஞ்சுவை யாகவில்லையே
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே ... குமரய்யா ...
இன்பம் ஏதும் இல்லையே
டி.எம்.எஸ் அவர்கள் பாடிய இப்பாடலைக் கேட்டு மகிழ
16 comments:
மீ தி பர்ஷ்ட்டு ஃபார் முருகன் & சிபி அண்ணா!
சிபி அண்ணா
வாங்க வாங்க!
இம்புட்டு நாளா முருகனைப் பாக்காம எங்கே போனீங்க? :)
TMS Solo-க்களில் சூப்பர் பாட்டு இது!
//அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே//
அருமை!
வெளிப்பூச்சுக்கள் மணக்காது என்பதை எம்புட்டு அழகாச் சொல்லிட்டாரு!
//எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆட வில்லையே//
ஏகநிஷ்டை-ன்னு சொல்லுவாங்க!
குறியைக் குறியாது என்பார் அருணகிரி! என்னடா, பாட்டில் மற்ற தெய்வங்களைத் தாழ்த்தறா மாதிரிச் சொல்லுறாங்களேன்னு எண்ணக் கூடாது!
எண்ணத்தில் தான் ஆட வில்லையேன்னு சொல்றாரு!
ஆனா இதயத்தில் ஆடும்!
தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்! :)
//தீன் சுவையாகவில்லையே//
மொத்தம் மூனு சுவையா?
ஏக்-தோ-தீன்? :))))
தீம்+சுவை=தீஞ்சுவை
//முத்தும் ரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்//
முத்திரை??
//அத்தரும் ஜவ்வாதும்//
ரெண்டும் வேற வேறயா?
அத்தர்-னா எது?
ஜவ்வாது-ன்னா எது?
தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!
வாங்க தள/தல. டி.எம்.எஸ். பாட்டுகளை நீங்கள் வந்து தான் தொடர்ந்து இடவேண்டும் என்றிருக்கிறது போல. :-)
பல முறை கேட்டு மயங்கிய இந்தப் பாடலை இன்னொரு முறையும் கேட்டு மயங்கினேன். நன்றிகள் சிபி.
அருமையான பாடலைச் சுவைக்கத் தந்தமைக்கு நன்றிகள் சிபி.
அத்தர்னா திரவமா இருக்கும்னு நினைக்கிறேன். ஜவ்வாது தூளா (powder) இருக்கும்..
ஆகா, நெடுநாள் பிறகு கேட்பதில் ஆனந்தம்.
வழங்கிய சிபியாருக்கு வந்தனங்கள்.
இந்தப் பாடலைக் கேட்டு வெகு நாட்களாகிவிட்டது..
குமரா.. தேடி எடுத்து அளித்து சிறப்பிக்கிறாயே.. முருகா..
டி.எம்.எஸ்ஸின் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத, அதே சமயம் பிசிறு தட்டாத குலாவலும், கொஞ்சலும் ஒன்று சேர்ந்து விளையாடும் இப்பாடலில்..
குமரய்யா வணங்குகிறேன்..
உன்னையன்றி யாரை வணங்குவேன்..? ஓய்வறியாது உன்னையே நினைக்கிறேன்.. என்றென்றும் உன் காலடியே சரணமென்கிறேன்..
வாருமய்யா முருகய்யா.. வாருமய்யா..
//இம்புட்டு நாளா முருகனைப் பாக்காம எங்கே போனீங்க? //
ம். அவனைப் பார்க்காம இருக்க முடியுமா என்ன? விபூதி வாசம் காட்டியே இழுத்து வந்துட்டானே!
//அத்தர்னா திரவமா இருக்கும்னு நினைக்கிறேன். ஜவ்வாது தூளா (powder) இருக்கும்..//
அத்தர் என்பது ஒரு வாசனை திரவியம்தான் கவிநயா அக்கா!
பாடலைக் கேட்டு மகிழ்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி!
super, nandri
என் இஸ்ட தெய்வமான (பாலசுப்ரமணி.. சத்யமாதாங்க) முருக கடவுள் மீதான் இந்த இனிமையான நானும் ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன் பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
ஓம் சரவணபவ
அத்தர் என்பது திரவ நறுமண பொருள்
ஜவ்வாது என்பது தூள் (Powder) நறுமண பொருள்
இவர் பாடலை கேட்டு கேட்டு நான் முருகன் பக்தனகிவிட்டென்
Post a Comment