தீனசரண்யா.... சுப்ரமண்யா.....
கார்த்திகைத் திருநாள் இன்று/நாளை அதோடு ஷஷ்டியும் இன்றே . பருத்தி புடைவையாய் காய்த்தது என்பார்கள் பெரியோர்கள்.
கேஆர்ஸ் வேறு சொல்லிவிட்டார் நான்தான் காலண்டர் என்று. ஆமாம் காலபயத்தை அண்டவிடாத முருகனின் பக்தர்.
குமரனை கண்டவர்க்கு கனவிலும் கால பயம் ஏதைய்யா
திரு.பாபநாசன் சிவனின் பக்தியின் பெருமையையும் அவருடைய தமிழ்ப் பற்றையும் பறைசாற்றும் முருகனின் மீது மற்றோரு பாடல்.
இந்தப் பாடல் எனக்காவே எழுதியது போல நான் நினைத்துக்கொள்வேன்
நெஞ்சம் உருகி (நெக்குருகி) உன்னை பணியாத கல்நெஞ்சன் நான். இருந்தாலும் எனக்கு நீ அருளவேண்டும். ஏன் தெரியுமா. சூரனனின் கொடுமைதாங்காமல் முனிவர்களும் தேவர்களும் உன்னைத்தான் பணிந்தார்கள். நீ தட்டாமல் அவர்களுக்கு அருள் புரிந்தாய். அப்படிப்பட்ட தீன சரண்யன் நீ. அதனால்தான் கூறுகிறேன் எனக்கு வேறு திக்குஇல்லை. நீ தான் காப்பாற்றி அருளவேண்டும்
நீ யாரென்று நினைத்தாய். மூன்று கண்களை உடைய சிவனின் மூன்றாவது கண்ணாகிய அக்னியிலிருந்து ஆறு பொறிகளால் உமாதேவியின் அருளால் உண்டானவன்.ஆறுமுகன்,திருமாலின் அருமை மருமகன்,சிக்கல் சிங்கார வேலன், வள்ளி தெய்வானை மகிழும் மணவாளன்.
பாபநாசம் சிவனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். ஆகையால் பக்கத்து ஊரான சிக்கில் சிங்கார வேலன் மேல் அளவிடமுடியாத காதல் கொண்டவர் அதனால்தான் பல பாடல்களில் சிக்கலாரை சிக்கல் வரும்போதெல்லாம் வம்புக்கு இழுப்பார்.
ராகம்:- ஆபோகி தாளம்:- ஆதி
பல்லவி
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சன் எனக்கருள்வாய் -முருகா.. (நெக்குருகி)
அனுபல்லவி
திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸுப்ரம் மண்யா..... (நெக்குருகி)
சரணம்
முக்கண்ணன் உமைஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே -வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து... (நெக்குருகி)
-
மறைந்த திரு. D.K ஜெயராமன் குரலில் /<"இங்கே கேட்கலாம்">
13 comments:
ஆகா, இப்போதுதான் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
முன்பொருமுறை, இந்தப்பாடலையும் சேர்த்து ஆபோகியில் அகமுருகியதுண்டு!
திராச காலண்டருக்கு நன்றி, திராச! :-)
காலண்டரை எல்லாரும் விலை கொடுத்து வாங்குங்கப்பா!
என்ன விலை அழகே?
பின்னூட்டம் தான்! :-))
முருகா எனும் ஒரு பின்னூட்டம்
அதுவே முழுமைக்கு முன்னூட்டம்!
மனப்பயிர் வளர மண்ணூட்டம்-மால்
மருகனும் காட்டிடும் விண்ணூட்டம்!!
சிக்கல் காட்சி விழிக்கினிய காட்சி!
திராச தரும்..
சிக்கல் கானம் செவிக்கினிய கானம்!
சிக்கலைச் சிக்கில் என்றும் சொல்லுவாங்களா திராச? சிக்கில் சகோதரிகள் என்று தான் போடுறாங்க! அதான் கேட்டேன்.
நல்லாயிருக்குங்க பாட்டு. நன்றி.
பாடலுக்கு நன்றி தி.ரா.ச அவர்களே!
@ஜீவா வாங்க முருகனின் பெருமைகைளை எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது.சிவன் பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்
@KRS வாங்க அதென்ன 5 பின்னுட்டம்தான் ஆறுமுகனுக்கு ஆறு வரவேண்டாமோ?
சிக்கில்தான் சரி ஆனால் சொல் வழக்கில் சிக்கல் என்ரு சொல்வார்கள்.தில்லானா மோஹனாம்பாள் படத்தில் கேட்டிருப்பீர்களே!
கேஆர்ஸின் கண்ணூட்டம்
பதிவிற்கு வண்ணமூட்டும்
நீங்க சொன்ன வேலையை சரியா செய்து விட்டேனா ஐயா!
@@மௌளி. வாங்க. சிவராத்ரி ஸ்பெஷல் முடிஞ்சுதா?மேடம் வேறே குற்றம் குறை எல்லாம் சொல்லுவாங்க உங்களிடத்தில்.ஏதோ கொஞ்சம் கவனிங்க நம்பளையும்.
@சுப்பய்யா சார் வாங்க.கிருத்திகையன்னிக்கி முருகனருள் பதிவுக்கு தவறாம வந்து விடுகிறீர்கள்.முருகன் அருள் பெற்றவர் நீங்கள்
//@KRS வாங்க அதென்ன 5 பின்னுட்டம்தான் ஆறுமுகனுக்கு ஆறு வரவேண்டாமோ?//
ஆகா! புடிங்க!
அரகரோகரா! ஆறாம் பின்னூட்டம்!
சுப்ரமண்யம்! சுப்ரமண்யம்! சுப்ரமண்யோஹம்! :-)
Post a Comment