பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.
இந்தத் திருப்புகழ் பாடலுக்கு அருமையாக பொருள் சொல்லியிருக்கிறார் எஸ்.கே. ஐயா. அருணகிரிநாதர் இயற்றிய இந்தப் பாடலை 'அருணகிரிநாதர்' திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார்.
12 comments:
முத்து' என்று அடியெடுத்துக் கொடுத்து
அருணகிரியாரைப் பாட வைத்தவன் அந்த ஆறுமுகன் அல்லவா!
அருணகியாரும் முதற்பாட்டை வெகு சிறப்பாகப் பாடினார்
உத்திரத்திற்கு உயரிய பாட்டைக் கொடுத்த உங்களுக்கு நன்றி உரித்தாகுக!
அருமையான திருப்புகழ், ரிஎம் எஸ்
அனுபவித்துப் பாடியுள்ளார்.
இப்படத்தில் 'அம்மா தெய்வம் ஆனதுமே,தெய்வம் அம்மா ஆகிடுமே!
எனும் அருணகிரியார் பிள்ளைப்பிராயம் பற்றிய பாடலும் அருமை.
டி.எம்.எஸ் குரலில் இந்தப் பாடலையும் உங்கள் இடுகையையும் சேர்த்துக் கேட்டும் படித்தும் மகிழ்ந்தேன். குமரன்.
பங்குனி உத்திரத்தில்
முத்தான பாடலை
பக்தியுடன் கேட்டேன்.
குமரன் அவர்களுக்கு என் நன்றி.!
தமிழ்க்கடவுள் பொன்னடி போற்றும் பாடல் தந்த அடியார்க்கு அடியேன் வந்தனம்!
ஆமாம் வாத்தியார் ஐயா. 'முத்தைத்தரு' என்று முதல் அடி எடுத்துக் கொடுத்தான் அந்த சுப்பையன். அதைத் தொடர்ந்து பல பாடல்கள் பாடினார் சந்தக்கவி அருணகிரிநாதர். முதல் பாடலை இங்கே அருமையாகப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.
சுப்பையன் எடுத்துக் கொடுத்த அந்தப் பாடலை சும்மா எடுத்துக் கொடுத்தேன் அடியேன். அவ்வளவு தான். :-)
இந்த அருணகிரிநாதர் படத்தை அண்மையில் தான் பார்த்தேன் யோகன் ஐயா. நீங்கள் சொன்ன பாடலைப் பார்க்கத் தவறிவிட்டேன் போலிருக்கிறது.
ரொம்ப நன்றி வல்லியம்மா.
ரொம்ப நன்றி மடல்காரரே. உங்களை வெகு நாட்களாக கண்ணன் பாட்டில் காணவில்லையே. முத்தான பாடல்களைத் தொடர்ந்து தாருங்கள். இல்லாவிட்டால் நாங்களும் திருமங்கை மன்னனைப் போல் மடலேற வேண்டியிருக்கும். :-)
தமிழ்க்கடவுள் பொன்னடி போற்றும் அடியார்க்கு அடியேன்.
மிக்க நன்றி நந்தவனத்து ஆண்டி.
எம்பெருமான் முருகவேளுக்கும்
திருநகையாள் அத்திக்கும் திருமணம் நடந்த பொன்னான பங்குனி உத்திர நன்னாளில்...
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை பாடலையே இட்டுத் தித்திக்கச் செய்த குமரனின் உத்திக்கு மெத்தவும் வாழ்த்து!
அட. அப்படி ஒரு பொருத்தமும் தானாக அமைந்துவிட்டதா இரவிசங்கர். அத்திக்கிறை என்பதன் பொருள் இந்தப் பாடலை இடும் போது மனத்தில் முன்னிற்கவில்லை; அதனால் அந்த உத்தி எல்லாம் இல்லை. :-) பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் என்பது தான் முன்னின்றது. அதனையே தலைப்பாக இட்டேன். படத்திலும் பாருங்கள் பச்சைப்புயல் எப்படி மெச்சுகிறார் என்று. :-)
Post a Comment