மாசி மகம்: முருகா என்றதும் உருகாதா மனம்?
மாசி மகம் என்பது பொதுவாக ஒரு நீராடல் விழா! இந்த ஆண்டு, இன்று!(Feb 21, 2008).
இந்த நீராடல் விழா பழந்தமிழ் வழக்கமாக இருக்கலாம் என்று இராம.கி ஐயாவும் தன் நட்சத்திரப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் கண்ணுற்றால் கூட, இது சைவ-வைணவ ஒற்றுமை விழாவாகவே எடுக்கப்படுகிறது!
மாசி மகம் அன்று செய்யப்படும் நீராடலுக்கு (தீர்த்தவாரி),
சைவ-வைணவ ஆலயங்களில் இருந்து ஊருலா மூர்த்திகள் (உற்சவர்கள்),
குளம்/நதி/கடல் கரைகளுக்கு தத்தம் வாகனங்களில் கொண்டு வரப்படுவது வழக்கம்!
அனைத்து ஆலய பக்தர்களும் பேதமில்லாமல், அடுத்தடுத்து நின்று கொண்டு செய்யும் தீர்த்தவாரிக் காட்சி, கண் கொள்ளாக் காட்சி தான்!
சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதும் இன்றும் குடந்தை (கும்பகோணத்தில்) காணலாம்!
பின்னர் இருவரும் சேர்ந்து மாலை-பரிவட்டங்களைத் தமிழவேள் முருகப் பெருமானுக்கு அளிப்பர்!
இப்படிச் சீராட்டிச் சீராட்டி, மக நீராட்டி நீராட்டிச் சமய ஒற்றுமை வளர்க்கும் திருவிழா இந்த மக நீராடல்!
* திருச்செந்தூர் மாசித் திருவிழா மிகவும் புகழ் பெற்ற ஒன்று!
* கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குத்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர், என்று பெருமாளும் ஈசனும் ஒன்று கூடி எழுந்தருளும் வழக்கம் உண்டு!
* சென்னை மெரீனாக் கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளுவது இன்றும் வழக்கம்!
* சைவம்-வைணவம் தாண்டி, முகம்மதிய அன்பர்களும் சில தலங்களில் கலந்து கொள்கிறார்கள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது!
* எங்கள் கிராமம் வாழைப்பந்தலில், செய்யாற்றங்கரையில் எழுந்தருளும் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு, ஊர் மாதா கோவிலில் இருந்து பட்டும், பன்னீரும், ரோஜா மாலைகளும் தரப்படும்!
மாசி மகம் அன்று எல்லாருக்கும் பொதுவில் நீராடும் வாய்ப்பு கிடைக்கிறதா என்ன? அதுவும் இங்கே அமெரிக்கக் கடுங்குளிரில்? :-)
ஆனால் முருகா என்று வாய் விட்டு அழைக்கும் போது, மனம் கரைகிறது அல்லவா! கண்கள் பனிக்கிறது அல்லவா! அப்படிக் கரைந்து நீராடுவதாக எண்ணிக் கொள்ள வேண்டியது தான்!
மனத்து ஈரமும், கண் ஈரமும் வரவழைக்கும் ஒரு எளிமை இனிமையான பாட்டை, மாசி மகத்தன்று, முருகனருள் வலைப்பூவில் கேட்டு மகிழ்வோம்!
T.N. ராமையா தாஸ் எழுதிய ஒரு சில பாடல்களில் இது மிகவும் புகழ் பெற்ற பாடல்-அதிசயத் திருடன் என்ற படத்துக்காக! இன்னொன்று மாயா பஜார் - கல்யாண சமையல் சாதம்! :-)
முருகா என்றதும் உருகாதா மனம்...மோகன குஞ்சரி மணவாளா
பாடலை இங்கு கேட்கலாம், TMS அவர்களின் குழையும் குரலில்! யூட்யூப் அசைபடம் கீழே!
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
(உருகாதா)
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
(உருகாதா)
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
(உருகாதா)
ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
தினமும் பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
(உருகாதா)
வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: டி.எம்.எஸ்
இசை: K. பிரசாத் ராவ்
படம்: அதிசயத் திருடன்
27 comments:
உருகாதா மனம் உருகாதா.. உருகாதா மனம் உருகாதா....
நல்ல பதிவு ரவி.
நல்ல தகவல்கள். நன்றி கே.ஆர்.எஸ். நானே மாசி ஆர்ம்பத்தில் மாக ஸ்நானம் பற்றி எழுத எண்ணியிருந்தேன். ஆனா ஆணி அதிகமாயிடுச்சு.
நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்றினை பதிவிட்டிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி.
மாக ஸ்நானம் மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. தை அமாவாசையிலிருந்து மாசி அமாவாசை வரையில் இது செய்யப்பட வேண்டும். தீர்த்தக் கரைகளில் அல்லது கிணறு போன்றவற்றிலும் செய்யலாம். இன்று நமது இல்ல குழாய்களிலேயே :). விடியலில் எழுந்து சூர்ய உத்யத்திற்கு முன்பாக செய்ய வேண்டுமாம்.
//ஆனால் முருகா என்று வாய் விட்டு அழைக்கும் போது, மனம் கரைகிறது அல்லவா! கண்கள் பனிக்கிறது அல்லவா! அப்படிக் கரைந்து நீராடுவதாக எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!//
சத்தியமான வார்த்தை..
அப்பனின் அருள் இதைப் படிக்கின்ற அனைத்து பக்த கோடிகளுக்கும் கிடைக்கப் பெறட்டும்..
அருமையான இந்த பாடலை பல வருடங்களுக்கு பிறகு கேட்ட பின் பரவசமாக இருந்தது. நன்றி.
கண்ணுண்டு காண
கருத்துண்டு நோக்க
கசிந்துருகிப் பாட பண்ணுண்டு
செவியுண்டு கேட்க
முருகனின் கனிவுள்ளமுண்டு
ரவியின் பதிவினேலே
என்னிடம் கேட்டுவிட்டு என்னால் இயலாது என்று சொன்னவுடன் நீங்கள் சிறப்பு இடுகை போட்டுவிட்டீர்கள் போலும் இரவிசங்கர். :-)
அருமையான பாடல் இது. பல முறை கேட்டும் பாடியும் மகிழ்ந்த/மகிழும் பாடல். ஒவ்வொரு வரியும் அருமை.
மனைவியர் இருவரையும் சொல்கிறார்; மாமனையும் சொல்கிறார்; தாய் தந்தையரையும் சொல்கிறார். எல்லாரையும் ஒரே பாட்டில் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் எழுதியவர். பாடியவரும் அதற்கேற்ப அருமையாகப் பாடியிருக்கிறார் - முருகன் பாடல் என்றால் கேட்க வேண்டுமா என்ன? வழி வழியாகப் பெருமாளைப் பணியும் குடும்பத்தில் பிறந்திருந்தும் நெற்றி நிறைய திருநீறு அணிந்து முருகா முருகா என்று உருகுபவர் ஆயிற்றே அந்த குரலரசன் அழகரசன்.
பெருமாளைப் பணியும் குடும்பத்தில் பிறந்திருந்தும் நெற்றி நிறைய திருநீறு அணிந்து முருகா முருகா என்று உருகுபவர் ஆயிற்றே அந்த குரலரசன் //
அழகரசன்...சௌந்தரராஜன்.மதுரைக்காரர்.கூடலழகர். இந்த முருகாப் பாட்டு வந்த புதிதில் முழங்காத இடம் இல்லை. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.
ரவி ,
உங்க பதிவில் வரும் செய்திகளும்,பதிலாக வரும் பின்னூட்டங்களும் உருகத்தான் வைக்கின்றன. மிக மிக நன்றி.
நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த பாடல். யாரிடமும் வரிகளும் இல்லை..... தினமும் பூஜையின் போது முதல் ரெண்டு வரி மட்டும் பாடுவேன்... இப்ப இது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க நன்றி!
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
தினமும் பூஜையின் போது முதல் ரெண்டு வரி மட்டும் பாடுவேன்... இப்ப இது கிடைச்சதுல ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க நன்றி!//
கெபி அக்கா
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு!
இப்படியும் ஒரு நன்மையா, இது போன்ற வலைப்பூக்களால்? கண்ணனருள் கனியட்டும்! முருகனருள் முன்னிற்க!
ஆமாம், இது ஒரு சிறந்த பூஜைப் பாட்டு தான்! அதுவும் சேர்ந்து பாடும் நல்ல குழுப்பாட்டூ!
//இலவசக்கொத்தனார் said...
உருகாதா மனம் உருகாதா.. உருகாதா மனம் உருகாதா....
நல்ல பதிவு ரவி//
முருகனைப் போட்டாக்கா முன் வந்து நிப்பாரே எங்கள் கொத்ஸ்! நன்றிங்கண்ணோவ்!
//மதுரையம்பதி said...
நல்ல தகவல்கள். நன்றி கே.ஆர்.எஸ். நானே மாசி ஆர்ம்பத்தில் மாக ஸ்நானம் பற்றி எழுத எண்ணியிருந்தேன்//
ஆகா ஒரு நல்ல பதிவு வெளிவருவதை நானே இப்படித் தடுத்து விட்டேனா? என்ன கொடுமை செய்தேன்! என்ன கொடுமை செய்தேன்!
//ஆனா ஆணி அதிகமாயிடுச்சு//
இங்கும் அதே கதை தான் அண்ணா! :-)
//மாக ஸ்நானம் மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது//
லேட்டானாலும் லேட்டஸ்டாப் போட்டுருங்க அண்ணா! வொய் வெயிட்டிங்?
//மதுரையம்பதி said...
நல்ல தகவல்கள். நன்றி கே.ஆர்.எஸ். நானே மாசி ஆர்ம்பத்தில் மாக ஸ்நானம் பற்றி எழுத எண்ணியிருந்தேன்//
ஆகா ஒரு நல்ல பதிவு வெளிவருவதை நானே இப்படித் தடுத்து விட்டேனா? என்ன கொடுமை செய்தேன்! என்ன கொடுமை செய்தேன்!
//ஆனா ஆணி அதிகமாயிடுச்சு//
இங்கும் அதே கதை தான் அண்ணா! :-)
//மாக ஸ்நானம் மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது//
லேட்டானாலும் லேட்டஸ்டாப் போட்டுருங்க அண்ணா! வொய் வெயிட்டிங்?
//உண்மைத்தமிழன் said...
சத்தியமான வார்த்தை..//
வாங்க அண்ணாச்சி! நலமா? ரொம்ப நாள் ஆச்சு அடியேன் பதிவில் பார்த்து!
//அப்பனின் அருள் இதைப் படிக்கின்ற அனைத்து பக்த கோடிகளுக்கும் கிடைக்கப் பெறட்டும்..//
அப்படியே ஆக வேணுமாய் நானும் வேண்டுகிறேன்! முமு!
//Expatguru said...
அருமையான இந்த பாடலை பல வருடங்களுக்கு பிறகு கேட்ட பின் பரவசமாக இருந்தது. நன்றி//
நன்றி Expatguru! old is gold அல்லவா? :-)
//தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணுண்டு காண
கருத்துண்டு நோக்க
கசிந்துருகிப் பாட பண்ணுண்டு
செவியுண்டு கேட்க
முருகனின் கனிவுள்ளமுண்டு
ரவியின் பதிவினேலே//
திராச ஐயா
கவி மழை பொழியறீங்க! சூப்பர்!
நீருண்டு, பொழிகின்ற காருண்டு -ன்னு உண்டு உண்டு-ன்னு வரும் வள்ளலார் பாட்டு போல இருக்கு உங்கள் கவிதை!
//குமரன் (Kumaran) said...
என்னிடம் கேட்டுவிட்டு என்னால் இயலாது என்று சொன்னவுடன் நீங்கள் சிறப்பு இடுகை போட்டுவிட்டீர்கள் போலும் இரவிசங்கர். :-) //
முதலில் பெரியவர்களைப் பணிந்து கேட்கணும்! அவங்க குறிப்பறிந்து அதுக்கப்பறம் சிறிய குட்டிப் பிள்ளைகள் நடக்கணும்! குட்டிப் பிள்ளை இலக்கணத்தின் படி நடந்து கொண்டேன் குமரன் :-))
//எல்லாரையும் ஒரே பாட்டில் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் எழுதியவர்//
ஆமாம் குமரன்! ராமையா தாஸ் கொஞ்சம் பாட்டே எழுதி இருந்தாலும் அத்தனையும் முத்தான பாடல்கள்!
//வழி வழியாகப் பெருமாளைப் பணியும் குடும்பத்தில் பிறந்திருந்தும் நெற்றி நிறைய திருநீறு அணிந்து முருகா முருகா என்று உருகுபவர் ஆயிற்றே அந்த குரலரசன் அழகரசன்//
ஓ..
டி.எம்.எஸ் குல தெய்வம் பெருமாளா?
பாருங்க இந்த நாடகத்தை!
எங்க குல தெய்வம் முருகப் பெருமான்! நான் கண்ணா-ன்னு கூவிக்கிட்டு இருக்கேன்! :-)
KRS,
இப்பதான் முத முறையா கேக்கறேன். அருமையான வரிகள்.
[என்னளவில்:)] டி.எம்.எஸ் பாடினாலும் - பிடிக்கக்கூடிய அளவில் மிகச்சிறப்பான , அவ்வகையில் மட்டுமின்றி மிக அரிதான பாடலை எடுத்து இட்டதற்கு நன்றிகள் பல!
//இராமநாதன் said...
KRS,
இப்பதான் முத முறையா கேக்கறேன். அருமையான வரிகள்.//
வாங்க இராம்ஸ் அண்ணா.
மொத முறையாக் கேக்கறீங்களா? ஆகா...மார்கழி மாசம் விடியற்காலையில் எங்க வீட்டருகில் இதை ரேடியோவில் அலற விடுவாங்க ஐயப்ப பக்தர்கள்!
//[என்னளவில்:)] டி.எம்.எஸ் பாடினாலும் - //
:-)
பாட்டு முன்பே தெரிஞ்சாலும் இந்த யூட்யூப் வீடியோ நேற்று தான் தென்பட்டது. (மகத்தில் பிறந்த மகராசி-ன்னு சும்மாவா சொல்லறாங்க) பட்டுன்னு பதிவா இட்டுட்டேன்!
முருகா... முருகா...
பதிவும் பாட்டும் அருமை...
//ச்சின்னப் பையன் said...
முருகா... முருகா...
பதிவும் பாட்டும் அருமை//
நன்றீ சின்னப் பையரே! :-)
ரவி,
தலைப்பில் முருகன் என்றிருந்ததால் என்ன விசயம் எண்டு ஒருக்கால் எட்டிப் பாப்போமெண்டு வந்தேன்.
நல்ல பதிவு. தெரிந்திராத கன விசயங்களைத் தெரிந்து தெளிந்து கொண்டேன்.
மிக்க நன்றிகள்.
கேட்டேன். உருகினேன்.
நன்றி.
--மோகன குஞ்சரி மணவாளா--
இது தெய்வானை மணவாளன் என்று பொருள் படுமோ.
//வெற்றி said...
ரவி,
தலைப்பில் முருகன் என்றிருந்ததால் என்ன விசயம் எண்டு ஒருக்கால் எட்டிப் பாப்போமெண்டு வந்தேன்//
அடடா!
இல்லீன்னா என் பதிவுக்கு எல்லாம் வரமாட்டீங்களா வெற்றி? :-(
//என்ன விசயம் எண்டு ஒருக்கால்//
இது போல கொஞ்சும் ஈழத் தமிழை நாங்கெல்லாம் அப்பறம் எப்படிக் கேக்கறதாம்? :-)
//அரை பிளேடு said...
கேட்டேன். உருகினேன்.//
வாங்க தல!
//--மோகன குஞ்சரி மணவாளா--
இது தெய்வானை மணவாளன் என்று பொருள் படுமோ//
ஆமா! தெய்வானை அம்மையைத் தான் குறிக்கிறார்.
குஞ்சரம்=பெண் யானை
அதுனால குஞ்சரி!
தேவ குஞ்சரி பாகா நமோ நம-ன்னு அருணகிரி திருபுகழ் அர்ச்சனையில் பாடுவாரு! நினைவுக்கு வருதுங்களா? :-)
சரி, குஞ்சரி-ன்னு வேறு எங்க எங்கெல்லாம் வருது-ன்னு யாராச்சும் வந்து சொல்லுங்கப்பா!
Romba nalla blog.
அன்பின் கேயாரெஸ்,
அருமையான பதிவு. பாடல் அருமை.
படம் தான் இப்பொழுது தெரியவில்லை - பாடலைக் கேட்க இயலவில்லை. குமரன் கூறியது போல், முருகனைப் பற்றியும், வள்ளி, தேவயானை பற்றியும், சிவபெருமான் மற்றும் பெருமாள் பற்றியும் குறிப்பிடும் அழகான பாடல். முருகன் பாடல்களுக்கென தனி இடம் பிடித்த டிஎமெஸ்ஸின் பாடல். அருமை அருமை. நல்வாழ்த்துகள்.
(வலைச்சரம் மூலம் வந்தேன்)
Post a Comment