011 : மண்ணுக்கும் விண்ணுக்கும்....!
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2)
குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ
குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2)
என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2)
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ
-மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
5 comments:
சஷ்டி நாளில் அவனது விஸ்வரூபத்தைப் போற்றி ஒரு பாடல்!
மிகப் பொருத்தம்!
எனது திருப்புகழ் பதிவில், ஒரு கேள்விப் பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் வாயிலாக கந்தன் கதை போட்டிருக்கிறேன்.
படித்துப் பயனுறவும்.
முருகனருள் முன்னிற்கும்.
http://aaththigam.blogspot.com/2006/10/13.html
எஸ்.கே அவர்களே!
//மிகப் பொருத்தம்!//
பாடலின் முதல் வரிக்குப் பொருத்தமாக படம் அமைந்ததை இப்போதுதான் கவனித்தேன்!
தேடிப்பிடித்து பாட்டுக்குத் தக்க படம் போட்டிருக்கின்றீர்களா சிபி :-)
மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடலுக்கு இசையமைத்ததும் டீ.எம்.சௌந்தரராஜன் அவர்கள்தான்.
சிபி. பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல் இது. பாடலின் ஒலிவடிவத்தையும் பதிவில் இணைத்துவிட்டேன். டி.எம்.எஸ். பெயரில் அழுத்தினால பாடலைக் கேட்கலாம். :-)
//பாடலின் ஒலிவடிவத்தையும் பதிவில் இணைத்துவிட்டேன்//
மிக்க நன்றி குமரன்.
Post a Comment