006: ஆடி வருவாய் குகனே
ஆடி வருவாய் குகனே ஷண்முகனே
ஓடி வருவாய் மயில் ஏறிவருவாய் (ஆடி)
பாடி வரும் பக்தர் துன்பங்கள் தீர்த்திடு
நாடி வந்து அன்பர்களை அணைத்து மகிழ்வாய் (ஆடி)
பாடிப்பாடி அகமகிழ்ந்தேன் ஆறுமுகனே
தேடித்தேடிக் காத்திருந்தேன் கார்த்திகேயனே
கோடிக்கோடி இன்பம் தரும் கதிர்காம வேலனே
கூடிக்கூடிப் பக்தர் போற்றும் சுப்ரமண்யனே (ஆடி)
மிகச் சிறிய பாடல் தான். ஆனால் கர்நாடக இசையில் கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.
பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்
இராகம்: அம்ருத வர்ஷிணி
தாளம்: ஆதி
இயற்றியவர்: புனிதாஸ்ரீ
17 comments:
ஆடிவருவான் என் குமரன்!
(ஓய்வின் பின் !)
வாங்க குமரன்!; ஜேசுதாசின் குரல்; சொன்னாலே வாய் மணக்குமெங்கள்; முருகன் புகழ்; கதிர்காம முருகனையுமெல்லா கூப்பிட்டுள்ளார்.
நன்றி
யோகன் பாரிஸ்
பாடலுக்கு நன்றி
குமரன், உங்களையும் இந்த சீறிய பணியில் இணைத்துக் காண்பதில் பெருமகிழ்ச்சி.
புனிதாஸ்ரீ இயற்றிய இந்த சிறிய பாடலை சிறப்பாகப் பாடியிருக்கிறார் ஏசுதாஸ். இன்னமும் ஸ்ரீ எழுத உங்களுக்கு வரவில்லையா?
குமரன்
இந்த பாடலை எப்படி தரவிறக்கம் செய்து கொள்வது பாடல் நன்றாக உள்ளது.
ஆகா ஸ்ரீ வந்துவிட்டதா குமரன். அருமை. அருமை. :-)
நன்றி இராகவன்.
ஆமாம் இராகவன். நான் புதுவை தமிழ் யுனிகோடு எழுதியைப் பயன்படுத்துகிறேன். அதில் ஸ்ரீ வரமாட்டேன் என்கிறது. சில நேரம் வேறு எங்காகிலும் இருந்து ஸ்ரீயை வெட்டி ஒட்டிவிடுவேன். இந்தப் பதிவிலும் அப்படிச் செய்துவிட்டேன்.
குமரன்,
//மிகச் சிறிய பாடல் தான். ஆனால் கர்நாடக இசையில் கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.//
இனிமையான பாடல். மிக்க நன்றி.
//கோடிக்கோடி இன்பம் தரும் கதிர்காம வேலனே//
கதிர்காமத்தில் செல்லக்கதிர்காமம் எனும் ஆலயமும் உண்டு. பிள்ளையில்லாதவர்கள் அச் செல்லக்கதிர்காமத்திற்குச் சென்று தரிசித்தால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் எனும் நம்பிக்கை ஈழத்தில் உண்டு. அதனால் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் இவ் ஆலயத்திற்குச் சென்று தரிசிப்பார்களாம்.

முதல் ஆளாய் வந்து வாழ்த்திய யோகன் ஐயா. மிக்க நன்றி. கதிர்காம முருகன் பெயர் எனக்கெல்லாம் பழனி முருகன், செந்தில் முருகன் போல் மிக இயல்பாகப் போய்விட்டது என்று நினைக்கிறேன். பலமுறை இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன். நேற்று கூட இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது என் மூன்று வயது மகள் 'Baabaa's Favourite song' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு முறையும் கதிர்காம வேலனே என்பது தனித்துத் தோன்றவில்லை. பாடலின் மற்ற வரிகளுடன் இயைந்து இயல்பாகத் தோன்றியதென்று உணர்கிறேன். நீங்களும் வெற்றியும் கதிர்காம வேலனே என்பதைக் கவனித்துச் சொல்லியிருக்கிறீர்கள். :-)
பாடலைக் கேட்டு ரசித்ததற்கு நன்றி சிவபாலன். எல்லாம் தங்கள் புகழ் தானே பாடப்படுகிறது இந்தப் பாடலில். :-)
இராகவன். தற்போதெல்லாம் தங்களின் பின்னூட்டங்களில் எழுத்துப் பிழை மிகுதியாக (ஒன்றிரண்டு தான். ஆனால் அது உங்கள் பின்னூட்டம் என்பதால் எனக்கு மிகுதியாகத் தெரிகிறதோ என்னவோ?!) இருக்கிறது. இங்கும் பாருங்கள். 'சீரிய' என்று சொல்ல நினைத்துச் 'சீறிய' என்று இட்டிருக்கிறீர்கள். :-) நான் எப்போதோ ஒரு முறை உங்களைச் சீறிய நிகழ்ச்சியை நீங்கள் இன்னும் மறக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ;-)
என்னார் ஐயா. இந்தப் பாடலை எப்படித் தரவிறக்கம் செய்து கொள்வது என்று தெரியவில்லை. இந்தப் பாடல் வடிவில் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். நன்றி.
செல்லக் கதிர்காமத்தைப் பற்றிய செய்தியைச் சொன்னதற்கு நன்றி வெற்றி. கதிர்காம வேலனின் புகழ் தமிழகத்திலும் ஆறுபடை வீடுகளின் அளவிற்கு உண்டு.
// குமரன் (Kumaran) said...
இராகவன். தற்போதெல்லாம் தங்களின் பின்னூட்டங்களில் எழுத்துப் பிழை மிகுதியாக (ஒன்றிரண்டு தான். ஆனால் அது உங்கள் பின்னூட்டம் என்பதால் எனக்கு மிகுதியாகத் தெரிகிறதோ என்னவோ?!) இருக்கிறது. இங்கும் பாருங்கள். 'சீரிய' என்று சொல்ல நினைத்துச் 'சீறிய' என்று இட்டிருக்கிறீர்கள். :-) நான் எப்போதோ ஒரு முறை உங்களைச் சீறிய நிகழ்ச்சியை நீங்கள் இன்னும் மறக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ;-) //
:-))))))))))))))))))))
என்ன செய்வது குமரன்...கற்றது கைமண்ணளவு. எப்படியோ எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன. தெரிந்து செய்கிறேனா...தெரியாமல் செய்கிறேனா என்றே தெரியவில்லை. குமரன் திருத்தட்டும்.
குமரன், கந்தவேள் பற்றிய பாடல் அழகாக அமைவதும் இன்பம்.
இயல்பு.
பாடலை யேசுதாஸ் பாடி நம் செவியில் தேன் பாய்கிறது.
மனம் நிறைந்த நன்றி.
உண்மை தான் வல்லி அம்மா. முருகவேளின் பாடல்கள் இனிமையாக அமைவது இயல்பே. மிக்க நன்றி.
Post a Comment