005. கந்தனைக் கண்டீர்களா
இது ஒரு மீள்பதிவு. ஏன்? இதோ இந்தப் பாடல் ஒலி வடிவில் நீங்கள் கேட்க. கேட்ட பிறகு இந்தப் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் கண்டிப்பாகச் சொல்லுங்கள்.
கந்தனைக் கண்டீர்களா
கன்னித் தமிழ்ப் பெண்டீர்களா (கந்தனைக் கண்டீர்களா
அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
கையிலே வேலிருக்கும்
கண்ணிலே ஒளியிருக்கும்
நெற்றியிலே நீறிருக்கும்
மத்தியிலே பொட்டிருக்கும்
செம்பவழ இதழ் இருக்கும்
திங்களைப் போல் முகம் இருக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
தோளிலே அழகிருக்கும்
வேதத்தில் கொலுவிருக்கும்
காலிலே கொலுசிருக்கும்
தாளமாய் அது ஒலிக்கும்
மழலை மொழி இருக்கும்
தமிழே கலந்திருக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
கால் கோடு பட்ட இடம்
கமகமன்னு மணக்கும்
மயிலேறிப் போகையிலே
மங்கல மணி ஒலிக்கும்
அவன் பெயர் சொன்னதுமே
அமுதமாய் இதழ் இனிக்கும்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
அங்கமெலாம் தங்க நிறம்
அவன் பேரு ஆறுமுகம்
எந்தன்.................... (கந்தனைக் கண்டீர்களா
பாடியவர் : தெரியவில்லை
பாடல் : தெரியவில்லை
இசை தெரியவில்லை
கேட்பதற்கு மிகவும் இனிமையான இந்தப் பாடல் பற்றித் தகவல் கொடுத்தால் மிக்க நன்றி. அப்படிக் கொடுப்பவருக்கு இன்னொரு இனிய பாடல் அனுப்பப்படும்.
படம் நன்றி : http://www.holytreebalasubramaniar.com/Arupadai%20Veedu.htm
அன்புடன்,
கோ.இராகவன்
14 comments:
பாட்டை பற்றியெல்லாம் நமக்கு எந்த காலத்துல தெரிஞ்சுருக்கு...ஆனா படம் அருமை. :)
இந்தப் பாடலை நான் இப்போது தான் முதன் முறையாகக் கேள்வி படுகிறேன். பாடல் வரிகள் அருமை.
பல நாட்களாக எனக்கும் திரையில் ஒலித்த ஒரு முருகன் பாடலைப் பற்றிய சந்தேகம் உள்ளது. எனக்குப் பாடல் வரிகளும் நினைவில்லை. நடிகை சரிதா திருநீறு அணிந்து "முருகா முருகா" என்று பாடுவார். இனிமையான பாடல். சிறுவயது நினைவுகளில் இப்பாடலும் ஒன்று. படம் பெயரும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன்.
நான் கண்டேன் கண்ணாரக்கண்டேன் முருகனை அந்த காலத்திலே கலப்புத்திருமணம் செய்தவன் வாத்தியாரையே கண்டித்தவன் அப்பனுக்கே பாடம் சொன்ன புத்திரன். அப்பனை பாடும்வாயால் அவன் மகன் சுப்பனைப் பாடுவேனோ என்றவரைப் பாட வைத்தவனை
படம் அருமை இராகவன்.
நல்லதொரு நாளில் நல்லதொரு பாடல். நல்லதொரு படம்.
முருகனருள் முன்னிற்கும்.
// Samudra said...
பாட்டை பற்றியெல்லாம் நமக்கு எந்த காலத்துல தெரிஞ்சுருக்கு...ஆனா படம் அருமை. :) //
நன்றி சமுத்ரா. இது கூகிளாண்டவர் தேடிக் குடுத்த செந்திலாண்டவர் படம். அதனால்தான் நன்றி போட்டிருக்கேன். :-)
// கைப்புள்ள said...
இந்தப் பாடலை நான் இப்போது தான் முதன் முறையாகக் கேள்வி படுகிறேன். பாடல் வரிகள் அருமை. //
இந்தப் பாட்டு கேக்கவும் ரொம்ப நல்லயிருக்கும். இத உங்க எல்லார் கிட்டயும் பகுந்துக்கு ஆசையா இருக்கு. ஆனா எப்படீன்னு தெரியலை. ஏதாவது வழி இருக்கா?
// பல நாட்களாக எனக்கும் திரையில் ஒலித்த ஒரு முருகன் பாடலைப் பற்றிய சந்தேகம் உள்ளது. எனக்குப் பாடல் வரிகளும் நினைவில்லை. நடிகை சரிதா திருநீறு அணிந்து "முருகா முருகா" என்று பாடுவார். இனிமையான பாடல். சிறுவயது நினைவுகளில் இப்பாடலும் ஒன்று. படம் பெயரும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்களேன். //
சரிதாவா? முருகன் பாட்டா? கீழ் வானம் சிவக்கும்ல சிவாஜியும் சரிதாவும் பாடுற பாட்டு ஒன்னு உண்டு.
"கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே முருகா முருகா" இப்படிப் போகும் அந்த பாட்டு.
வேறென்ன முருகன் படத்துல சரிதா நடிச்சிருக்காங்க....தெரியலையே...
// ENNAR said...
நான் கண்டேன் கண்ணாரக்கண்டேன் முருகனை அந்த காலத்திலே கலப்புத்திருமணம் செய்தவன் வாத்தியாரையே கண்டித்தவன் அப்பனுக்கே பாடம் சொன்ன புத்திரன். அப்பனை பாடும்வாயால் அவன் மகன் சுப்பனைப் பாடுவேனோ என்றவரைப் பாட வைத்தவனை //
கண்டோம் கண்டோம்
கண்ணுக்கும் கருத்தும்
இன்னிய கண்டோம்
உண்டோ உண்டோம்
தண்டமிழ் அமுதினை
அன்போடு உண்டோம்
// நாமக்கல் சிபி @15516963 said...
படம் அருமை இராகவன்.
நல்லதொரு நாளில் நல்லதொரு பாடல். நல்லதொரு படம்.
முருகனருள் முன்னிற்கும். //
நன்றி சிபி. பாடல்களின் ஒலி வடிவத்தைப் பகிர்ந்து கொள்ள ஏதேனும் வழியுண்டோ?
ராகவா!
பாடலும் படமும் அருமை!
செந்தூர் மூலவர் சந்தணக்காப்பில் இப்படியா??, இருப்பார். அவர் அழகர் தான் ஐயமில்லை.
செந்தூர் சென்றும்;இவ்வளவு துல்லியமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை.
நன்றி!
யோகன் பாரிஸ்
இராகவன். உங்களிடம் பாடலின் ஒலிவடிவம் இருக்கிறதா? எந்த வடிவத்தில் இருக்கிறது? தனிமடலில் சொல்லுங்கள்.
இராகவன்,
பாடலும் படமும் அருமை. இப் பாடலை இதுவரை அறிந்திலேன்.மிக்க நன்றி.
//"கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே முருகா முருகா"//
அடடா! இதே பாட்டு தாங்க. ரொம்ப நன்றிங்க.
// Johan-Paris said...
ராகவா!
பாடலும் படமும் அருமை!
செந்தூர் மூலவர் சந்தணக்காப்பில் இப்படியா??, இருப்பார். அவர் அழகர் தான் ஐயமில்லை.
செந்தூர் சென்றும்;இவ்வளவு துல்லியமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை.
நன்றி!
யோகன் பாரிஸ் //
யோகன் ஐயா...நான் பிறந்தது தூத்துக்குடி. அதன் வழியாகத்தான் திருச்செந்தூர். சிறுவயதிலிருந்தே பலமுறை சென்ற ஊர். கண்ட செந்தில். உண்ட உப்பு. திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள் ஒன்றிரண்டு எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்.
1. முருகன் கையில் மலருண்டு. வாழ்வை மலர வைப்பேன் என்று உறுதி சொல்லும் வகையில் மலரோடு நிற்கின்றானாம்.
2. கோயில் இருப்பது சந்தன மலைக்குள்ளே. ஆனால் இன்று மலை குறைந்து கோயில் பெருகி விட்டது. ஆனாலும் கோயிலுக்குள்ளே ஆங்காங்கு சந்தன மலையைக் காணலாம். வள்ளிகுகையும் சந்தனமலை என்னும் நுரைக்கல் குகைதான்.
3. திருச்செந்தூர் வியாழன் தலம்.
4. செந்தில் - செந்து இல். பிறவிக் கடலில் உழலும் உயிர்கள் அனைத்தும் சேர வேண்டிய இல்(லம்). அதனால்தான் கடற்கரையில் கோயில்.
5. பன்னீர் இலையில் திருநீறு தருவது பழைய வழக்கம். இன்றைக்கெல்லாம் அது துட்டுக்குத்தான் கிடைக்கும். ஆனால் கந்தனருள் அன்பிற்கே கிடைக்கும்.
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தப் பாடலின் ஒலி வடிவத்தை இணைத்துள்ளேன். கேட்டுப் பார்த்து உங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லுங்கள்.
Post a Comment