Tuesday, June 04, 2013

TMS: வடிவேலும் மயிலும் துணை!

சில நினைவுகள்:  மறக்க(வே) முடியாதவை!

சென்ற ஒரு வாரம் முழுக்க...,
1000 TMS பாடல்கள் கேட்டிருப்பேனோ? = தெரியாது; Never been non stop like this;

சினிமாப் பாடல்கள் தான் நிறைய; எப்படித் தான் சதா கேட்டுக்கிட்டு இருந்தேனோ? எனக்கே வியப்பா இருக்கு;

ஆனால், இன்பத்தை விட,  இன்ப நினைப்புகள்.... இன்பமா இருக்கும்;
ஆண்டாள் போல ஆயிருச்சோ, என் நெலமையும்?
கற்பனை என்றாலும், கந்தனே... நான் உன் சொந்தனே....



அத்தனை பாட்டு கேட்டாலும், இந்த ஒரு பாட்டு மட்டும்,
இன்னும் ரீங்காரம் இட்டுக்கிட்டே இருக்கு; ஏன்?-ன்னு தெரியல!



படம்: அம்பிகாபதி
குரல்: ஏழிசை மன்னர், TMS
வரிகள்: KD சந்தானம்
இசை: ஜிரா (எ) ஜி. ராமநாதன்



வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் - சந்ததமும் - கந்தனைப் பாட
(வடிவேலும் மயிலும் துணை)

நடராஜன் அருள்பாலன் - நான்மறை தொழும் சீலன்
தட மேவும் பொழில் சூழும் 
தணிகை வாழும் - பரம ஞான - குருபரன்
(வடிவேலும் மயிலும் துணை)

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை  மலர்மாலை - ஜெபமாலையுடன் - சந்தத்
(தமிழ்மாலை தனைச் சூடுவான்)
---------------

தாபமிகு வெப்பு - வாதமொடு பித்த
மான பிணி மொய்த்து உடம்போடு...
சாரும் உயிர் துன்ப - சாகரம் உழன்று
சாதனை இழந்து வருந்தா உன்

தாளை அளித்திட - வேணுமெனத் துதி
பாடருணை கிரி - நாதன் அழைத்திட
தயவுடன் விரைந்து - அருள்மழை பொழிந்து

முத்தைத் தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த - தழைத்த கருணையை
நினைந்து நினைந்து - கவிமலர் தொடுத்த
(தமிழ்மாலை தனைச் சூடுவான்)
----------------

சற்றே சரிந்த குழலே துவளத் - தரளவடம்
குற்றே அசையக் - குழை ஊசலாட - துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக - நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இழுக்கத் - தலையலங்காரம் புறப்பட்டதே!!!



TMS in a cheeval advt.

99 or 100?
= அந்த "ஒன்னுல" தான் அவன் வாழ்க்கை விதி, ஒத்த நூலில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்காம்!
*அம்பிகாபதி 100 பாடல்கள் பாடினால் = காதல் - கை வரும்;
*இல்லையேல் = சாதல் - தலை போகும்!

அருணை கிரி - நாதன் அழைத்திட
முத்தைத் தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த - தழைத்த கருணையை
-ன்னு வருவதால் தானோ, இந்தப் பாட்டு இன்னும் எனக்குள் ரீங்காரம் இட்டுக்கிட்டே இருக்கு?

*கடவுள் வாழ்த்தோடு சேர்த்து நூறா?
*(இல்லை) கடவுளைச் சேர்க்காமல் நூறா?

எது எப்படியோ, முருகனைச் சேர்த்துத் தான் என் நூறும், பேரும், ஊரும், உயிரும்!
முருகனால், தலை போகும் என்றால்... போய் விடட்டுமே!
அவன் இதழ்க் கோட்டோரம், அவன் புன் சிரிப்பே தலை;  என் தலை தலையல்ல!

முருகனுக்கும்-எனக்கும்,
for both of us...
வடிவேலும் மயிலும் துணை

3 comments:

திண்டுக்கல் தனபாலன் June 04, 2013 9:20 PM  

1000 TMS பாடல்கள்... அடியேனும் அப்படியே...

/// முத்தைத்திரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும்.... /// மனதில் தான் ரீங்காரம் இட முடியும்... பாட முடிவதில்லை... வார்த்தைகள் தவறு என்றால் தந்தைக்கு கோபம் வரும்... அவர் அமர்க்களமாக பாடுவார்...!

வடிவேலும் மயிலும் துணை...

Anonymous February 22, 2018 2:23 AM  

இந்தப் பாடலில் TMS "தாபமோடு வெப்பு முதல் கவிமலர் தொடுத்து தமிழ்மாலை தனைச்சூடுவார்" என்ற வரிகள் வரை மூச்சு விடாமல் பாடியிருப்பார். ஒரு நிமிடத்திற்கு மேலேயே அது இருக்கும்.

P R Srinivasan October 11, 2018 1:46 PM  

'தாளை அளித்திட'என்ற இடத்திலிருந்துதான் மூச்சு விடாமல் பாடுகிறார்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP