100) சொல்லாத நாளில்லை (காவடிச் சிந்து)
முருகனருள் வலைப்பூவில், இது என் 100ஆம் பதிவு;
(May 27) இன்று, தோழன் இராகவனின் பிறந்த நாளும் கூட!
"பிறந்த நாள் வாழ்த்து" - என்பதாகத் தான், ரெண்டு நாளுக்கு முன்னாடி, இந்தக் காவடிச் சிந்தை, முருகன் மேல் எழுதி வைச்சேன்;
ஆனால்... TMS அவர்களின் இறுதிச் சேதி கேட்ட பின், "சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா"- என்றே சொல்லத் துடிக்கிறேன்!
ஆனால்... TMS அவர்களின் இறுதிச் சேதி கேட்ட பின், "சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா"- என்றே சொல்லத் துடிக்கிறேன்!
TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....
முருகா!
"முருகனருள்" = இந்தக் குழு வலைப்பூவில் மட்டுமே = 100 பதிவுகள் இட முடியும் -ன்னு, நான் நினைச்சிக் கூடப் பார்த்தது இல்லை;
என்னையும் ஒரு பொருட்டாய், இங்கே இருக்க வைத்த, "முருகனருள்" சக உறுப்பினர்களுக்கு நன்றி!
இது நாள் வரை, என் எழுத்தையும் ஒரு பொருட்டாய் வாசித்த வாசகர்களுக்கு நன்றி!
உங்களுக்கு, அடியேன், சொல்லால் செய்த பிழைகள் ஏதாச்சும் இருந்தா, என்னை மன்னித்து அருள்க!
முருக வாசகம் = இதய வாசகம்!
*இதயத்தில் இருந்து வந்த சொற்களை,
*இதயத்தில் இருந்தே அணுகுமாறு கேட்டுக்கறேன்;
(சமயத்தில் இருந்தோ, சார்பில் இருந்தோ அணுகினாலும் பரவாயில்லை; என் தலை தாழ்ந்த மன்னிப்பையும் ஏத்துக்குமாறு கேட்டுக்கறேன்)
இந்தப் பாட்டைக், காவடிச் சிந்து மெட்டில் பாட முடியும்;
ஆனா, பாட எனக்கு வலுவில்லை இன்று! முருகனே பாடிக் கொள்ளட்டும்;
(ஆறுபடை வீட்டையும், ஒரே வரியில் அடக்க ஆசை; ஆனா முடியலை; இரண்டு வரி ஆயிருச்சி...)
"சொல்லாத நாளில்லை" முருகா - உன்போல்
பொல்லாத ஆளில்லை முருகா - ஐயா
சொல்லாத சொல்லுள்ளும், சொல்லிய சொல்லுள்ளும்
தள்ளாது நிப்பவன் நீயே - என்னைத்
தள்ளாது நிப்பவன் நீயே! (1)
உலகெலாம் உள்ளவன் ஒருவன் - எந்தன்
உளமெலாம் உள்ளவன் ஒருவன் - ஐயன்
உருவாயும் அருவாயும், உளதாயும் இலதாயும்
கருவினில் வரும்கந்தக் காரன் - என்
கனவினில் வரும்சொந்தக் காரன்! (2)
குறிஞ்சி நிலத்திலே குரவன் - குன்றக்
குரவையின் கூத்துக்கு மறவன் - அவன்
பரங்குன்றச் செந்தூரன் , பழனிச்சாமி மலையன்
தணிகை-யன் சோலையில் சிலையன் - தமிழ்ப்
பசிக்கு-அவன் பால்தரும் முலையன்! (3)
இராகவன் மனசில்வாழ் பிள்ளை - உமைப்
பாகவன் பெற்றசெங் கிள்ளை - தமிழ்த்
தாகவன் மோகவன், நட்புக்கு வாகவன்
இராகவன் கூப்பிட்டால் வருவான் - எனக்குச்
சேகவன் முருகனைத் தருவான்! (4)
(end of kavadi chinthu)
Happy Birthday Ragava!
"சொல்லாத நாளில்லை" - சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே - செந்தமிழாலே!
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலா நின்திருப் புகழினை நான் பாட
அரகர - சிவசுத - மால்மருகா என
அனுதினம் - ஒருதர - மாகிலும் உன்னைச்...........
(சொல்லாத நாளில்லை)
தொகுப்பு (Album): முருகா, நீ வர வேண்டும்
வரிகள்: கோவைக் கூத்தன்
குரல்: ஏழிசை மன்னர், TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan
Link: All songs of TMS, in this Muruganarul Blog!

9 comments:
சிறப்பு பகிர்வுக்கு பாராட்டுக்கள்...
100-ம் பதிவிற்கு வாழ்த்துக்கள்...
இராகவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
சொல்லாத நாளில்லை முருகா என
நண்பர் திரு இராகவன் அவர்கள் பிறந்த நாளன்று அவரை
வாழ்த்துமுகத்தான் தாங்கள் பாடிய பாடலை
காவடி சிந்து மெட்டிலே நான் பாடி பரவசமுற்றேன்.
தாங்களும் இதை இங்கே கேட்கலாம்.
என்ன ஒரு அழகான சொற்கட்டு...
அப்பனே..சுப்பிரமணியா...
கண்ணபிரானுக்கு சொல்வளம் அளித்தது போல்
எனக்கும் அவர் பாடலைப் பாடிட இன்னும் நல்ல
குரல் வளம் தாராயோ ?
சுப்பு தாத்தா
www.kandhanaithuthi.blogspot.com
வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்;
சுப்பு தாத்தா,
தாங்கள், இந்த வயதிலும், இந்தக் காவடிச் சிந்தைச் சிரத்தை எடுத்துக் கொண்டுப் பாடியமைக்கு மிக்க நன்றி; பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றி!
முருகனே பாடிக் கொள்ளட்டும், இன்று எனக்கு வலுவில்லை-ன்னு சொல்லிட்டுப் போனேன்...
ஆனா, யாரோ ஒருத்தவங்க மூலமா (அவங்க இந்தப் பதிவின் வாசகர் கூட இல்ல)
திருப்பரங்குன்ற முருகன், மடலில் வந்து நிக்குறான் (குதிரை வாகனத்தில்);
இன்று கோயிலுக்குப் போயிருந்த போது, புறப்பாட்டில் புடிச்சாங்களாம்!
= எதிர்பார்க்கவே இல்ல...
பரி மேல் அழகா,
"மடல்" ஏறி வந்தாயோ காதலா?
உன்னை வேண்டாம் என்று சொன்ன என்வாய்
என் வாயில் ஏறி வந்தனையோ கந்த பிரானே?
எழிலான காவடிச் சிந்து எழுதிய கண்ணனுக்கும், இனிமையாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கும், நன்றிகள் பல. ஜிராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
இராகவனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க நீ எம்மான்! இன்னுமோர் நூற்றாண்டிரும்!
நல்ல பாடல் இரவி. பாட முடியாத அளவு என்ன நடந்துகொண்டிருக்கிறது இரவி?
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி கவி-க்கா
குமரன்
ஒரு நூற்றாண்டு தானா?
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -ன்னு சொல்லுங்களேன்...
நீங்க சொன்னா ஒரு மகள் தன்னை உடைய ஆழ்வாரே சொன்னது போல்!
மே 27 ஜிரா பிறந்த நாள் என்று தெரியாது. Happy belated wishes Gira! இனி தவறாமல் வாழ்த்துகிறேன் :-)தமிழும் முருகனும் உங்களுக்கு இரு கண்கள். அருமையான பதிவு. பாடலைப் பாடிய சுப்பு தாத்தாவிற்கு நன்றி.
amas32
@amas
வாழ்த்துக்கு நன்றி-ம்மா; though belated itz still a blessing; i count the (my) blessings:)
//தமிழும் முருகனும் உங்களுக்கு இரு கண்கள்//
அதுக்காக பொறந்த வீட்டை மறக்க முடியுமா?:))
அப்பா பெருமாளும், என்னவன் முருகனும் கண்ணா இருந்துக்கட்டும்;
ஆனா, இதயம் = தமிழுக்கு மட்டுமே;
both my & murugu idhyam:)
Post a Comment