007 : மருதமலை மாமணியே முருகய்யா...!
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே!
(மருதமலை)
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா!
(மருதமலை)
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டு வேன்..ஆ..
(மருதமலை)
சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்
பரமனின் திருமகனே... அழகிய தமிழ்மகனே...
காண்பதெல்லாம் - உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் - எனதுமனம் உறு முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா....
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா அய்யா
திரைப்படம்: தெய்வம்
பாடியவர் : மதுரை சோமு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன்
10 comments:
அருமையான பாடல் சிபி. வலையேற்றியதற்கு நன்றி. பாடலின் ஒலிவடிவையும் பதிவில் இணைத்துவிட்டேன்.
படத்தில் இருப்பது பழைய மருதமலையல்லவா? இப்போது புதிதாகப் பெரிதாகக் கட்டி அண்மையில் குடமுழுக்கு செய்தார்கள் அல்லவா?
முருக பக்தர்களே.
டி.எம்.எஸ் அவர்கள் பாடிய
"முருகா என்றதும் உருகாதா மனம் உருகாதா.... மோகன குஞ்சரி மணவாளா
...........
தவசீலா ஏ சிவ பாலா " பாடலை தேடுகிறேன். இது சினிமாவில் இடம் பெற்றது எந்த படமென்று ஞாபகமில்லை.
தயவு செய்து எனக்கு கிட்டும் படி செய்தால் நன்றி உடையவானக இருப்பேன்
சிபி
வரிகளைப் படிக்க படிக்க அப்படியே பாடல் காட்சி கண்முன் ஓடியது!
//சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன்//
இதைப்பற்றி குன்னக்குடி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், "இப்பாட்டு ஒரு instant அரங்கேற்றம்" என்று!
மெட்டைக் குன்னக்குடி சொல்லச் சொல்ல, கவியரசர் மடை திறந்த வெள்ளமாகப் பாய, இந்த இடம் வரும் போது சற்றே நின்றதாம்.
"தத்தித் தரிகட ததத்தித் தரிகட தா தா" என்னும் போது, கவியரசர் சற்றே அசர, சத்தித் திருமகன் முத்துக் குமரன் அன்னையிடம் வேல் வாங்கும் நாட்காட்டி ஒன்று அந்த அறையில் இருப்பதைப் பார்த்தவுடன் வந்து விழுந்த வரிகள் தான் அவை என்று சொல்லிச் சிலாகித்தார் பேட்டியில்!
மெட்டுக்குப் பாட்டு எழுத கண்ணதாசன் ஒப்புக் கொண்டது ஒரு சில பாடல்கள் தான். அதில் இது தலையாயது!
மிகவும் அருமையான பாடல். மதுரை சோமுவின் குரலில் கவியரசரின் பாடல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில்.
// "முருகா என்றதும் உருகாதா மனம் உருகாதா.... மோகன குஞ்சரி மணவாளா
...........
தவசீலா ஏ சிவ பாலா " பாடலை தேடுகிறேன். இது சினிமாவில் இடம் பெற்றது எந்த படமென்று ஞாபகமில்லை. //
சிவா, இந்தப் பாடல் நீலமலைத் திருடன் என்ற படத்தில் இடம்பெற்றது. மிகவும் அருமையான பாடல். என்னிடம் இந்தப் பாடல் ரியல் ஆடியோ பார்மெட்டில் இருக்கிறது. அடுத்து இந்தப் பாடலை முருகனருளில் இடுகிறேன்.
சிபி,
மிக அருமையான பாடலுங்க..
மருதமலை லேட்டஸ்ட் படம் போட்டிருக்கலாம்.. எனினும் பழைய மருதமலை போட்டோ நன்றாக உள்ளது.
பதிவுக்கு நன்றி.
இராகவன்,
நன்றி..நன்றி..நன்றி
முருகா என்றதும்
உருகாதா மனம்
மோஹன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா - முருகா
மறையே புகழும்
மாலவன் மருகா [2]
மாயா விமோசனம்
அருள் நீ தர வா
குணசீலா
ஹே சிவபாலா
சர்வமும் நீயே
சிவசக்தி பாலா
சர்வமும் நீயே
சிவசக்தி பா..லா
[முருகா என்றதும்]
பந்த பாச வினை
பாரினில் மறைய [2]
பாதார விந்தம்
துணை நீ தர வா
தவசீலா
ஹே சிவபாலா
சர்வமும் நீயே
சிவசக்தி பாலா
சர்வமும் நீயே
சிவசக்தி பா...லா
[நினைவினில் இருந்து எழுதியது! சந்தம் சரியாக வந்துள்ளது. பிழைகளை ஜி.ரா. வந்து திருத்தட்டும்!]
முருகனருள் முன்னிற்கும்!
எஸ்.கே அவர்களே, பாடலைக் கேட்டு முருகனருள் பெற்று பேரானந்தம் அடைந்தேன். மிக்க நன்றி.
கனடா வந்து என்னை தொடர்பு கொள்ளாமால் போய்வீட்டிர்களே?
சிபி,
முருகன் பாடல் கேட்பதும் நெகிழ்வதும் எப்போதும் கிடைக்ககூடிய அனுபவங்கள் அல்ல.
இந்தப் பாடல் எத்தனைக் குடும்பங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது என்று கணக்கெடுக்க முடியாது.
எல்லா முருகன் பாடல்களும் ஒலிபெருக்கிகளில் எங்களுக்கு எப்போது கேட்டுக் கேட்டுப் பழக்கம்.
இப்போது மாறிவிட்டது.
அதனால் தவசீலன் சிவபாலனைக் கேட்பதில் இரட்டிப்பு சந்தோஷம். நன்றி.
சிபி அண்ணா...
//தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா//
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா-ன்னுல்ல வரும்?
//காலமெல்லாம் எனதுபலம் உறுதுணை முருகா//
உம்ம்ம்ம்
காண்பதெல்லாம்
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது மனம் உறு முருகா
அதிபதியே குருபரனே
அருள் நிதியே சரவணனே...ன்னு வரும்-ண்ணா!
கூகுள் பண்ணா, நம்ம முருகனருள் பதிவு தான் வந்து மொதல்ல நிக்குது...
ஸோ, இதையே தங்களிடம் அனுமதியாக கருதி, பதிவில் வரிகளைச் சரி செய்து விடுகிறேன்! ஓக்கேவா?
Post a Comment