முருக "வாலி" - அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே!
வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி = அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!
அதென்ன "வாழ்ந்தவர்"?
...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!
பொன்னுடலுக்கு மட்டும், நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!
All Young - MSV, Vaali, P Susheela, TMS |
வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்"...
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;
* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...
(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே:
சில திருப்புகழ்ப் பாடல்களை விட..வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்... ஏனோ என் உள்ளத்தை... ரொம்ப உருக்கி எடுக்கும்!)
அதுவே இன்று... முருகனருள் வலைப்பூவில் = "வாலி அஞ்சலி!"
பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!
அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)
தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)
பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)
வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;
என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அவன் கையும் கோத்துக்கிட்டு..
அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
கருணையே இல்லையாடா முருகா? = (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..
* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!
இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!
4 comments:
வாலி வரிகள் என்றும் வாழும்.... ...ம்... ஆழ்ந்த இரங்கல்கள்..
நல்ல கருத்துள்ள பாடல் வரிகள். வாழ்க கவிஞர் வாலி.
வாலியின் இனிமையான பாடல் வரிகள். கவிஞர் வாலி என்றும் வாழ்க.
பிள்ளைகளுக்கான மிகவும் அருமையான பாடல் வரிகள்.வாலி வாலிதான்.
Post a Comment