சீக்கிரமாய் வா!
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா!
பக்தர்க் கருளும் சக்திக் கொழுந்தே
சரவண பவனே வா!
வண்ண மயிலேறி வாகாய் அமர்ந்து
சின்னக் குமரா வா!
சின்னக் குழந்தை வடிவில் ப்ரணவ
பொருள் சொன்னவனே வா!
விண்ணும் மண்ணும் வியந்தே போற்றும்
வடிவே லவனே வா!
கண்ணும் மனமும் கசியத் துதித்தோம்
கண்ணின் மணியே வா!
கன்னல் தமிழில் கவிதை சொல்வேன்
செல்லக் குமரா வா!
மின்னல் போலே எம்மைக் காக்க
விரைந்தே நீயும் வா!
சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா!
கல்லும் கனியும் தமிழின் சுவையில்
கனிந்தே நீயும் வா!
சரவண பவனே சண்முக குகனே
சடுதியில் இங்கே வா!
சங்கரன் மகனே சங்கடம் தீர்க்க
சீக்கிரமாய் நீ வா!
--கவிநயா
7 comments:
இன்று இட வேணும், இட வேணும்-ன்னு நினைச்சிக்கிட்டே அலுவலகத்தில் இருந்து ஓடி வந்தால்...
சீக்கிரமாய் வா...என்ற பதிவு கண் முன்னே!
முருகா - எத்தனை நாள் தான் நான் எண்ணியெண்ணியே அழிவது?
சீக்கிரமாய் வா!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சீக்கிரமாய் வா!
என்னிடம் சீக்கிரமாய் வா! இல்லையேல்...உன்னிடம் சீக்கிரமாய்ச் சேர்!
வருக கண்ணா. 'சீக்கிரமாய் வா', உங்களுக்கும் சேர்த்துதான்! :) பதிவு இட்டவுடனே வந்துட்டீங்களே. நலந்தானே?
i ws waiting to hear the song:((
//i ws waiting to hear the song:((//
வாங்க லலிதாம்மா. எதுவுமே அவன் மனசு வச்சாதான் நடக்கும் :)
(இப்படி ரொம்ப வருத்தப்பட்டீங்கன்னா நானே பாடினாலும் பாடிருவேன்!)
kavinaya,
if u don't sing,i'll start harassing u by myself singing on hearing which u may have jitters and sleepless nights(may be nightmares?)!so u better sing!
சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா
முருகா சரணம்
வருகைக்கு நன்றி தி.ரா.ச. ஐயா.
Post a Comment