Monday, July 25, 2011

ஆடிக் கிருத்திகை: சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!!

இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 25, 2011) - முருகன் தலங்களிலே பெரு விழா!

* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம்

இன்று, உருவாய் அருவாய்...அறுவராகி ஒருவன் ஆனவன்!
இன்று, வாசனை மிக்க ஒரு பாடலையும் காண்போம்! = என்ன படம்?

பாடலை வலையேற்றித் தந்த தோழன் இராகவனை எண்ணிக் கொண்டு...
சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!! - கந்தர் அலங்காரம்


சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம் - பச்சை
நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்
திருநீறின் தத்துவம் தந்தை என்போம் - அதில்
திகழும் குங்குமத்தை அன்னை என்போம்!
(சந்தனம் மணக்குது)

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்
திருமார்பில் ஒளிவீசும் கவசம் இட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
(சந்தனம் மணக்குது)

விரலுக்கு மோதிரம் பவளத்திலே - கையில்
விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே
தங்கத் திருப்பாதம் வணங்கும் போது
பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது!
(சந்தனம் மணக்குது)

மயில்மீது மன்னனை இருக்க வைத்து
ஏழுசுரம் பாடும் கிங்கிணிச் சலங்கை கட்டி
வெற்றி வேலுடன் சேவல்கொடி ஏற்றிவைத்து
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
(சந்தனம் மணக்குது)

படம்: கந்தரலங்காரம்
இசை: குன்னக்குடி
குரல்: சீர்காழி - டி.எல்.மகாராஜன்
வரி:



ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, இங்கே...நியூஜெர்சி கோயிலிலே, முருகன் பவனி வரும் காட்சி!
"மறந்தும் புறம் தொழாதவர்களாக" சித்தரிக்கப்படும், நெற்றியில் நாமம் தரித்த வைணவ நம்பிகள், என் ஆசை முருகனின் கைங்கர்யத்திலே, சிரித்தபடி வரும் காட்சியையும் கண்டு களிக்கலாம்! :)

14 comments:

கடம்பவன குயில் July 25, 2011 9:26 AM  

ஆடிக்கிருத்திகையில் அற்புதமான பாடல்களுடன் ஜவ்வாது விபுதி மணக்க ஒரு அழகான பதிவு. நன்றிகள்.

தி. ரா. ச.(T.R.C.) July 26, 2011 12:06 AM  

ஆடிக் கிருத்திகையில் அழகு முருகனை பாடிக் களித்தோம் நன்றி

Lalitha Mittal July 26, 2011 9:14 AM  

very sweet paattu!

adithyasaravana July 26, 2011 10:52 AM  

enna oru perumitham paaru, irandaavathu padaththai tharavaettri sollumpothu..
naanum pala maathangalachu thambi.. murugan kovilukku poyi.. yaen murugan ennai pirinthu ponaan?

Kavinaya July 26, 2011 10:49 PM  

என்ன அழகு, இந்தக் குட்டி பையன்! இந்த முறை வட பழனியில் தங்கத் தேரில் ராஜ அலங்காரத்தோட பவனி வரும் அவன் அழகைக் கண்டு களிக்கும் பாக்கியம் கிடைத்தது.

உங்க தயவில் NJ முருகனையும் பார்த்தாச்சு! உங்களைத்தான் இன்னும் பார்க்கலை :(:)

Unknown July 27, 2011 1:36 AM  

ரஜினி ராணா படம் தொடங்குவதற்கு முன் இந்தியா திரும்பிய பிறகு, கடவுளின் ஆசி பெற நேராக சென்றது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

Kannabiran, Ravi Shankar (KRS) July 27, 2011 7:46 PM  

@கடம்பவனக் குயில்
சந்தனம், திருநீறு மணக்கும் பாட்டு தான்! விகே ராமசாமி, தங்கவேலும் மணக்க மணக்க நடித்துள்ளார்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) July 27, 2011 7:47 PM  

@திராச, @லலிதாம்மா
நன்றி!
பாடல் வரிகள் யாரு-ன்னு தெரியுமா? வாலியா?

Kannabiran, Ravi Shankar (KRS) July 27, 2011 7:52 PM  

//adithyasaravana said...
enna oru perumitham paaru, irandaavathu padaththai tharavaettri sollumpothu..//

ஹா ஹா ஹா
வைணவர்கள் முருகனுக்கு ஆகாதவர்கள்! பெருமாள் தவிர எந்தவொரு தெய்வம் மேலேயும் அவிங்க கை படாது-ன்னு பேசுறவங்க இருக்காங்க!
ஆனா, இதோ ஒரு நாமம் போட்ட பெருமாள் கோயில் அர்ச்சகர் முருகனுக்கு பூச்சூடி விடுகிறார்! அவன் தேரை இழுத்து வருகிறார்!

அதைச் சொல்பவர்கள் சொல்லும் போது, இதைச் சொல்பவர்களும் சொல்லட்டுமே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) July 27, 2011 7:55 PM  

//naanum pala maathangalachu thambi.. murugan kovilukku poyi.. yaen murugan ennai pirinthu ponaan?//

கோயிலுக்குப் போனாத் தான் முருகனா? முருகா என்றாலே முருகன் தான்!

சரவணன் அண்ணா
அவன் ஒங்கள விட்டு "பிரிந்து" எல்லாம் போகலை! எனக்குத் தெரியும்! ஏன்-ன்னா இதை டைப் செய்யும் போது, என் bed-இல், பக்கத்துல இருந்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்!:)

Kannabiran, Ravi Shankar (KRS) July 27, 2011 7:58 PM  

//இந்த முறை வட பழனியில் தங்கத் தேரில் ராஜ அலங்காரத்தோட பவனி வரும் அவன் அழகைக் கண்டு களிக்கும் பாக்கியம் கிடைத்தது//

சூப்பரு! ஐயா ராஜா-வா? தங்கத் தேரு, தங்கக் காரு எல்லாம் கேக்குதா? இருங்க, அவன் கன்னத்தைக் கடிக்கிறேன்! :)

//உங்க தயவில் NJ முருகனையும் பார்த்தாச்சு! உங்களைத்தான் இன்னும் பார்க்கலை :(:)//

ஏன்-க்கா சிரிப்பான் + அழுவான்?:)

Kannabiran, Ravi Shankar (KRS) July 27, 2011 7:59 PM  

அனானி
ரஜினி ராணா படத்துக்கும், ஆடிக் கிருத்திகைப் பதிவுக்கும் என்ன தொடர்புங்க?:)
சரி சரி! ரஜினி பூரண நலமோடு இருக்கணும்! வாழ்க!

குமரன் (Kumaran) July 27, 2011 7:59 PM  

அட ரொம்ப டகால்டியில்லாம எழுதிட்டீங்களேன்னு பார்த்தா நம்பிகளைப் பத்தி சொல்லியிருக்கீங்க. அதெப்படி உங்க முத்திரை இல்லாம இடுகை வரும்?! :-)))

குமரன் (Kumaran) July 27, 2011 10:33 PM  

அம்மா குழந்தையை நீராட்டி சீராட்டி அலங்கரித்து அழகு பார்ப்பது போல் இருக்கிறது இந்த இருவர் பாடும் பாடலும்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP