முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!
ஓர் அலுவல் காரணமாக ஆம்ஸ்டர்டாம் வந்துள்ளேன்! - இது என் தோழன் முன்பிருந்த ஊர்! Croeselaan கடந்து செல்லும் போதெல்லாம் பழைய நினைவுகள்! ஏனோ தெரியல, வண்டியை நிப்பாட்டி அந்தப் பழைய இடங்களை, இறங்கிப் போய் பார்க்கத் தோனுது!
(தோழனுக்காக முன்பு எழுதியது.....)
பச்சைமா மலைபோல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்
அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
ஆயர் தம் அன்னபூர்ணா
இச்சுவை தவிர யான்போய்
மெக்டொனால்ட்ஸ் ஃபாஸ்ட்ஃபுட் உண்ணும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
ஆம்ஸ்டர் டாம் நகருளானே!! :))
இன்றைய செவ்வாய் - முருகனருளில் சீர்காழி பாடல்!
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)
சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)
முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்!
(முதல்)
13 comments:
இப்பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் சீர்காழியாரின் கம்பீரமான குரல்வளத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை
ஓய்விருக்கும போது எங்க சிவயசிவ - பக்கமும் வாங்க தோழரே..
http://sivaayasivaa.blogspot.com
'பச்சைமாமலை ......'படித்து அடக்கமுடியாமல் வாய் வெடித்துச்சிரித்தது உண்மை என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் "இதற்கென்று நகைச்சுவை ப்ளாக் ஆரம்பித்து அதில் போட்டிருக்கலாம்;முருகனருளில் நுழைக்கணுமா ?'' என்று கேட்கத்தோணுது!
சீர்காழி பாட்டு டாப்பு!
எங்க மதுரையில சீர்காழியார் பாடும் இந்தப் பாட்டுக்கும் டி.எம்.எஸ். பாடும் முருகன் பாடல்களுக்கும் தான் தேநீர்க்கடைகள்ல காலங்காத்தால கடை தொறந்தவுடனே போட்டி. அப்ப நிறைய தடவை இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன்.
கடைசி வரியை மட்டும் சிறப்பா காண்பிச்சிருக்கீங்க. என்னைக் கேட்டால் இந்தப் பாட்டுல ஒவ்வொரு வரியும் சிறப்பே! பாடியவர் குரலும் சிறப்போ சிறப்பு!
ஆம்ஸ் நள்ளிரவில் தூங்கப் போகும் முன்னர்...
@பிரகாசம் சார் - நன்றி! சீர்காழியின் சினிமாப் பாடல்களும் அதே கம்பீரம் தான் - தேவன் கோயில் மணியோசை, சின்னஞ் சிறு பெண் போலே
@ஜானகிராமன்
வரோம்-ங்க! ஊரு ஊராச் சுத்துற பொழைப்பாப் போயிருச்சி! ப்ளாக் ப்ளாக் வேற சுத்தணும்! வாரேன், இருங்க!:)
@லலிதாம்மா
அது தோழனுக்காக எழுதிய பாட்டு! இன்னிக்கி காலைல இங்க வந்ததில் இருந்து ஞாபகம் ரொம்ப வரவே இட்டு விட்டேன்!:)
//அதே நேரத்தில் "இதற்கென்று நகைச்சுவை ப்ளாக் ஆரம்பித்து அதில் போட்டிருக்கலாம்; முருகனருளில் நுழைக்கணுமா ?//
முருகனருளிலேயே இருப்பவனுக்கு தனியா நகைச்சுவைக்கு ஒரு இடம், சாப்பிட ஒரு இடம், மகிழ ஒரு இடம், பக்திக்கு ஒரு இடம்-ன்னு இல்லீங்களே! எங்கும் கூடவே ஒட்டிக்கறான், நான் என்ன செய்ய!
மன்னித்துக் கொள்ளுங்கள் லலிதாம்மா! இப்படியான ஒரு பந்தம் ஏற்பட்டு விட்டது!
@குமரன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
முருகா, தூங்கப் போலாமா? நேரமாச்சு!
8 hrs flight, straight to oppice, Tired aa irukku da! Vaa da!
@குமரன் அண்ணா
நேற்றிரவு தூக்கக் கலக்கத்தில் கவனிக்கலை
//கடைசி வரியை மட்டும் சிறப்பா காண்பிச்சிருக்கீங்க. என்னைக் கேட்டால் இந்தப் பாட்டுல ஒவ்வொரு வரியும் சிறப்பே//
உண்மை! ஆனால் இதை எழுதிய பூவை செங்குட்டுவனுக்குப் பிடித்தமான வரிகள் அவை! சுனாமி வந்த போது செந்தூரைத் தாக்காதது குறித்துத் தான் எப்பவோ எழுதிய இந்தப் பாட்டை நினைவு கூர்ந்தாரு! அதான் bold:)
அழகான பாடல். நன்றி கண்ணா.
பள்ளியிலிருந்து எழுந்தாச்சு போல :)
@கவிக்கா
//பள்ளியிலிருந்து எழுந்தாச்சு போல :)//
நான் எப்பவோ பள்ளியில் பாஸ் அக்கா! ஃபெயில் எல்லாம் இல்ல! என்னய போய் இப்படிச் சொல்லலாமா?:(
கடைசி வரி தமிழ் வரலாறு, அண்ணாச்சி !
Post a Comment