ஆடிக் கார்த்திகைத் திருநாள்
இன்று(25/07/2011) கிருத்திகைத் திருநாள்.முருகனுக்கு விருப்பமான திருநாள்.பதிவு போட அருள்கூர்ந்த முருகனுக்கு நன்றி.எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகன். கந்தன் மீது ஒரு உணர்ச்சி மிக்க பாடல்
பாடலைப் பாடியவர் மறைந்த மாமேதை திரு. சோமு அவர்கள்.பாமரனையும் கர்நாடக சங்கீதத்தை அனுபவிக்கச் செய்தவர் அவர்.உள்ளம் உருகும் வண்ணம் அவர் முருகனின் மீது பாடிய பாடல்கள் பல.அதில் ஒன்றுதான் கீழே வரும் பாடல். பாடலை படித்து, பார்த்து, கேட்டு ரசித்து ஆடிகிருத்திகயையின் நாயகனான திருத்தணி முருகனின் அருளைப் பெற அவன் தாள் போற்றுவோம்
ராகம் : சிந்துபைரவி தாளம் ஆதி
பல்லவி
எதைச் செய்ய மறந்தாலும்
தமிழ் முருகனை துதி செய்ய மறாவாதே... (எதை...)
அனுபல்லவி
விதிசெய்யும் சதிக்கிடையில் முருகனை துதி செய்தால்
மதி தருவான் உயர் நிதி தருவான் மனமே....(எதை....)
சரணம்
தேவர் துயர் தீர்த்த தேவ சேனாதிபதி
மூவரில் அவன் முக்கண்ணனின் புதல்வன்
ஆவதும் அழிவதும் அவன் அருள் இன்றில்லை
அவனை மறந்தால் உண்டு அவனியில் பெரும்தொல்லை (எதை>>>.)
......)
8 comments:
முருகா!
இப்பத் தான் எதையோ நினைச்ச மாத்திரத்தில், Blogger-ஐத் தட்டினால், நீ வந்து நிக்குற! நான் என்ன சொல்வேன்? நீயே...
மிக்க நன்றி திராச ஐயா, ஆடிக் கிருத்திகைப் பதிவுக்கு!
//விதிசெய்யும் சதிக்கிடையில் முருகனை துதி செய்தால்//
:)
அருமை!
//அவனை மறந்தால் ஒரு அவனியில் துயர் இல்லை//
அவனை மறந்தால் அன்றி அவனியில் துயர் இல்லை-ன்னு இருக்கணுமோ?
பாடலைக் கேட்கையில் கடைசி வரி "அவனை மறந்தால் புது அவனியில் பெரும் தொல்லை" என்பதாக தோன்றுகிறது.
ஆடிக் கிருத்திகைப் பதிவிற்கு நன்றி திராச ஐயா.
செல்லக் குழந்தையின் சின்னத் திருவடிகள் சரணம்.
கே ஆர் ஸ் வாங்க . உங்க பின்னுட்டத்த பாத்தாலே உங்களை பாத்தா மாதிரி. தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. இர்வு 1.30 கேட்டு எழுதியது அதனால் இருக்கலாம். திருத்தப்பட்டு விட்டது
கே ஆர் ஸ் போட்டோ மாத்தீடீங்க பொல இருக்கு. நின்றான் ,கிடந்தான் ஆயிற்று எப்போ இருந்தான் எப்பொ வரும்?
வாங்க கவிநயா . தவற்றுக்கு வருந்துகிறேன். திருத்தியாச்சு
அவனை நான் மறந்தாலும் என் ஐ என்னை மறந்தாலும் உண்டு பெருந்தொல்லை! நன்றி தி.ரா.ச. ஐயா.
நன்றி குமரன் குயிலே உனக்கனர்ந்த கோடி நமஸ்காரம் குமரன் வரக் கூறுவாய்
Post a Comment