Wednesday, May 04, 2011

கிருத்திகைப் பதிவு


இன்று கிருத்திகை. முருகனை நினைக்க நல்லது நடக்கும் நாள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய பதிவு முருகன் அருளில் அவன் அருளால். முருகனை குழந்தையாக பாவித்து  திரு. நீலகண்டசிவன் அவர்களெழுதிய பாடல். திருமதிகள் ரஞ்சனி- காயத்ரி அவர்கள் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர். கேட்டுப் பாருங்கள்.கிருத்திகை பதிவைத் தொடர முருகன் அருளை வேண்டி இந்தப் பதிவை அளிக்கிறேன்.
ராகம்: ரீதிகௌள

பல்லவி

ஓராறு முகனே
அன்னைஉமையாள் திரு மகனே...ஓராறு

அனுபல்லவி

ஈராறுகரனே எனக்கும் உன்கருனை
பராய் என் கண்ணே என் பாலசுப்ரமண்யா....ஓராறு

சரணம்

ஓங்கார பொருளே அருள்மறை ஓளிபடவரும் முதலே
நீங்காது எனதுள்ளெ மேவி அருளும்
திரு நீலகண்டம் அருமை பாலகனே பரனே....ஓராறு


13 comments:

Lalitha Mittal May 04, 2011 5:46 AM  

sweeet song in sweeeeetest voice;thanks

Lalitha Mittal May 04, 2011 5:49 AM  

pl visit my blog for one more krittikai geetham!

தி. ரா. ச.(T.R.C.) May 04, 2011 10:01 AM  

thanks LM

தி. ரா. ச.(T.R.C.) May 04, 2011 10:02 AM  

sure will visit

Kannabiran, Ravi Shankar (KRS) May 04, 2011 10:41 AM  

மீள் நல் வரவு திராச ஐயா! :)
எங்கள் கிருத்திகை நாட்காட்டி முருகனருளில் மீண்டும் துவங்கி விட்டதே! :)

தி. ரா. ச.(T.R.C.) May 04, 2011 10:47 AM  

என்மூலமாக கேஆர்ஸையும் வரவழைத்துவிடுவான் முருகன்.

Kannabiran, Ravi Shankar (KRS) May 04, 2011 10:50 AM  

இந்த நீலகண்ட சிவன், அப்பைய தீட்சிதர் பேரனான நீலகண்ட தீட்சிதரா? இல்லை வேறொருவரா? ஆனந்த நடமாடுவார் தில்லை-பாட்டு இவர் எழுதியது அல்லவா? இந்தப் பாட்டும் நல்லாத் தான் இருக்கு!

//என் கண்ணே என் பாலசுப்ரமண்யா//

இந்த "என்" என்னும் முன்னொட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சமானது! என் முருகன்! என்-அவன்! என் லூசு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) May 04, 2011 10:54 AM  

//கேஆர்ஸையும் வரவழைத்துவிடுவான் முருகன்//

ஹா ஹா ஹா
அதான் பழியாய்க் கிடக்கிறேனே திராச ஐயா!

முருகா,
பழியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
அழியாது அழிந்து என் அன்பனைச் சேர்வேனே!

தி. ரா. ச.(T.R.C.) May 04, 2011 11:06 AM  

@கேஆர்ஸ் வாங்க ஆனந்த நடமாடுவார் எழுதின அதே நீலகண்ட சிவன் தான். அப்பனை பாடிய வாயால் ஆண்டி சுப்பனையும் பாடியுள்ளார்.எந்தாய் என் தந்தை என் மகன்போல அப்படி ஒரு உறவுச்சொந்தம்.என் உறவால் அழிந்தேன் என் உறவால்சிதைந்தேன் ஆனால் உன் உறவால் வளர்ந்தேன் உன் உறாவால் தெளிந்தேன் திருத்தணி முருகனே

குமரன் (Kumaran) May 06, 2011 4:30 PM  

இனிமையான பாடல் ஐயா. நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) May 07, 2011 3:08 AM  

குயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம். குமரன் வர கூவுவாய் ! நன்றி குமரன்

nagaa May 21, 2011 10:25 AM  

கார்த்திகை விளக்கை ஏற்றி வைத்து கந்தனை அழைப்போம் என்ற எல் ஆர் ஈஸ்வரி அம்மா அவர்கள் பாடிய பாடல் கிடைக்குமா நண்பர்களே?

Guna - Chennai March 21, 2022 1:32 AM  

கார்த்திகை விளக்கை ஏற்றி வைத்து கந்தனை அழைப்போம் என்ற எல் ஆர் ஈஸ்வரி அம்மா அவர்கள் பாடிய பாடல் கிடைக்குமா?
Pl update this song.
I heard this song in my boy hood. But not able to get this song to sing.

Guna.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP