தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும்
தணிகை மலைப் படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் - அங்கே
தனை மறந்து மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்!
(தணிகை மலை)
கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி - அதைக்
காண்பவர்க்கு எந்தநாளும் இல்லையே வீழ்ச்சி!
(தணிகை மலை)
விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் - அது
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்!
(தணிகை மலை)
குலுங்கி வரும் தென்றல் அங்கே இசை முழக்கும் - திருக்
குமரன் பேரைச் சொல்லிச் சொல்லி நம்மை மயக்கும்!
(தணிகை மலை)
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி: எழில் மணி
3 comments:
அடியவர் விரும்பிக் கேட்ட பாடலை, அடுத்த பதிவிலேயே இட்டமைக்கு நன்றி குமரன் அண்ணா! நிர்மல்ராஜ்-உங்க பாட்டு இதோ:)
எனக்கு ரொம்பவும் பிடிச்ச மயில் பாட்டு இது! மயிலு டொக் டொக்-ன்னு நடந்து வராப் போலவே இருக்கும்! அதுவும் சீர்காழிக் குரலில் :)
வர வர மயிலார் ஒயிலார் வருக!
ஆருயிர்த் தோழனின் தோழார் வருக!
சிர கிரி ராகவன் சீக்கிரம் வருக!
சிந்தையில் சிரித்துச் சீக்கிரம் வருக! :)
'அரோஹரா' என்றடியார்க் கூட்டமும் கூவும் --கேட்ட
மரங்கள்கூட மெய்சிலிர்த்து மணமலர் தூவும்!(தணிகைமலை)
காணொளி தந்தது உன்குழல். தட்டச்சிக் கொடுத்தது நீங்கள். எம்பி3 தந்தது பிரகாசம் ஐயா. நன்றி மட்டும் எனக்கா இரவி? :-)
Post a Comment