Wednesday, February 09, 2011

பழனி அமிர்தம்



பக்தர் மனம்மகிழ பழனி மலை மீதில்
சக்தி மகன் நின்றான் – அவர்
சித்தம் குளிர்ந்திடவே அனைத்தும் தரும் அரசன்
ஆண்டிக் கோலம் கொண்டான்

சின்னஞ் சிறுகுழந்தை போலக் கோபங் கொண்டு
வண்ண மயிலில் வந்தான்
தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்க்கென
தனிய னாக நின்றான்

பஞ்ச அமிர்தத்தை தந்து வணங்கி நின்றால்
அஞ்சல் என்று அருள்வான் – தனை
விஞ்சும் அமிர்தம் இந்த உலகில் இல்லை யென்று
உணர அவன் மகிழ்வான்!


--கவிநயா

சுப்பு தாத்தா காவடிச் சிந்தில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!

20 comments:

Anonymous February 09, 2011 9:09 AM  

good post

Lalitha Mittal February 09, 2011 10:52 AM  

kandhanuku aroharaa!umai maindhanukku aroharaa!!
pazhani panjaamrutham saappitta feeling un paattaip padichchathum!!!

R. Gopi February 09, 2011 12:06 PM  

வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க

Kavinaya February 09, 2011 8:35 PM  

//good post//

நன்றி, சதீஷ்குமார்!

Kavinaya February 09, 2011 8:35 PM  

//kandhanuku aroharaa!umai maindhanukku aroharaa!!
pazhani panjaamrutham saappitta feeling un paattaip padichchathum!!!//

கந்தனுக்கு அரோகரா!
நன்றி லலிதாம்மா :)

Kavinaya February 09, 2011 8:35 PM  

//வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க//

நன்றி கோபி :)

Kannabiran, Ravi Shankar (KRS) February 09, 2011 8:59 PM  

//தனை விஞ்சும் அமிர்தம் இந்த உலகில் இல்லை//

அதனால் தான் அந்த அமிர்தம் மட்டுமே வேண்டி, அவனேன்னு நிக்குறேன்...சித்தம் குளிர்வானோ, சீக்கிரம் வருவானோ?

Kavinaya February 09, 2011 9:03 PM  

அறுமுகன் வருவான்,
ஆறுதல் தருவான்!
கவலை வேண்டாம் கண்ணா :)

(நான் இப்படில்லாம் எழுதும்போது நீ என்ன அவனோட பிரதிநிதியா, செயலாளரா, அப்படின்னு உள்ளேருந்து ஒரு குரல் கேக்குது :)

Kannabiran, Ravi Shankar (KRS) February 09, 2011 9:33 PM  

பாடும் பணியே பணியாய் அருள்வாய்
- அனுபூதி

அப்படின்னா அந்தப் பணியைச் செய்யும் நீங்க அவன் பணியாளர்,செயல்-ஆளர் தானே கவிக்கா?

Lalitha Mittal February 09, 2011 9:38 PM  

krs,
the one who came down for us as
pazhaniaandi,thagappansaami,
senthilnaathan[noi neekka],etc besides appearing as naughty child for awaiyaar,sammbanthan for giving thevaaram for us,and as kumarilabattar in north india for helping aadisankarar to locate his disciple,[manymore]...will surely help us all out;he is karunaa saagaram with no varambu;let us all pray him with full faith!

Prasad February 09, 2011 11:58 PM  

அருமையான கவிதை

sury siva February 10, 2011 11:29 AM  

வேலனைக் காண்பதெப்போ ‍ = பழனி
வேலனைக்காண்பதெப்போ ? பழ
வினைகளைத் தொலைத்திடவே
பக்குவமே அடைந்திடவே =
வேலனைக்காண்பதெப்போ ?


சுப்பு ரத்தினம்
http://kandhanaithuthi.blogspot.com

Kavinaya February 10, 2011 10:10 PM  

//அப்படின்னா அந்தப் பணியைச் செய்யும் நீங்க அவன் பணியாளர்,செயல்-ஆளர் தானே கவிக்கா?//

ம்.. அவன் பார்த்துப்பான் என்கிற நம்பிக்கைதான் அப்படி ஆறுதல் வார்த்தைகளா வருது போலிருக்கு :)

எப்படியோ... நீங்களும், மற்றும் அனைவருமே நல்லா இருக்கணும். முருகனருள் முன்னிற்கும்.

Kavinaya February 10, 2011 10:12 PM  

வாங்க சுப்பு தாத்தா.

கந்தனைத்துதி வலைப்பூவுக்கு போய் பார்த்தேன். பின்னூட்ட முடியாது போலருக்கே... மயில்வாஹனா பாடல் பார்த்தேன் - அந்த பாட்டுக்கு பரதம் ஆடியிருக்கேன் :)

Kavinaya February 10, 2011 10:12 PM  

//அருமையான கவிதை//

மிக்க நன்றி பிரசாத்.

Unknown February 11, 2011 11:32 PM  

அருமை அக்கா!

குமரன் (Kumaran) February 13, 2011 3:19 PM  

//தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்க்கென
தனிய னாக நின்றான்

//

இரண்டு பொருள் வருது பார்த்தீங்களா அக்கா. ரெண்டுமே பொருத்தம். 'தவிக்கும் அடியர்க்கென தந்தை தாயை விட்டு தனியனாக நின்றான்' - முருகன்! 'தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்' - குமரன்!

Kavinaya February 13, 2011 8:00 PM  

//அருமை அக்கா!//

மிக்க நன்றி அருணையடி.

Kavinaya February 13, 2011 8:02 PM  

//இரண்டு பொருள் வருது பார்த்தீங்களா அக்கா. ரெண்டுமே பொருத்தம். 'தவிக்கும் அடியர்க்கென தந்தை தாயை விட்டு தனியனாக நின்றான்' - முருகன்! 'தந்தை தாயை விட்டு தவிக்கும் அடியர்' - குமரன்!//

உங்களுக்குதான் இதெல்லாம் தெரியுது. பின்னே... தமிழ்க் கடவுள் பேரையில்ல வச்சிருக்கீங்க? :) நன்றி குமரா.

தமிழினியன் February 21, 2011 8:44 AM  

Thank you for post

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP