Friday, July 17, 2009

ஆடிக்கிருத்திகை

இன்று ஆடிக்கிருத்திகை. முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான். ஆனாலும் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுவது ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருத்தணிகையில்தான்.பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லக்ஷம்பேர்களுக்கு மேல் திருத்தணியில் கூடும் தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும்.வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள். சிறுவர்கள்கூட காவடி எடுத்து ஆடிவருவார்கள்

பக்தர் கூட்டமெல்லாம்"கந்தா வந்து அருள் தரலாகாதா' என்று கதறி கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குவார்கள்.ஊரே திருவிழாக்கோலம் பூண்டு எங்கும் ஆனாந்தவாரிதியாக இருக்கும். நீங்க கூட்டத்துக்குள் போய் அழகனைப் பார்க்க வேண்டாம் இங்கேயே அமைதியாக தரிசனம் செய்துகொள்ளுங்கள்.
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி

பல்லவி

திருத்தணி முருகன் திருவருள் புரிவான்
திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)

அனுபல்லவி

அறுபடை வீட்டின் நாயகனே
குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)

சரணம்


குறுநகை புரிந்திடும் அருள்முகமும்

பரிவுடன் உதவும் பன்னிருகரமும்

வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்

என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)

3 comments:

M.Thevesh July 17, 2009 1:46 PM  

அந்த பாடலுக்குரிய Audio வை இணைத்
திருக்கலாம்.

கே.பழனிசாமி, அன்னூர் July 18, 2009 12:27 AM  

TMS ன் முருகன் அஷ்டோத்திர பாமாலை பாடல் கிடைத்தால் எம்.பி 3 வடிவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சீர்பரமன் எனத்தொடங்கும் பாடல் அது

VSK August 13, 2009 9:16 PM  

முருகா! முருகா!
மிக நல்ல பதிவு ஐயா!
முருகனருள் முன்னிற்கும்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP