சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே
நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் - முருகா (நீல)
நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)
வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
வேழ முகம் படைத்தோன் சோதரனே
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
7 comments:
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையத்தில் முதல் முதலாய் கேட்டு பக்தி மீட்டும் பாடல்! அதிகாலை வேளைகளில் ஆடியோ கேசட்களில் சீர்காழியில் குரல் வழி முருகன் தரிசனம் பெற்ற நாட்கள் நினைவில் எழும்புகின்றன !
நன்றி :)
அருமையான பாடல்! பகிர்ந்தமைக்கு நன்றி குமரா.
மகிழ்ச்சி ஆயில்யன். நன்றி.
நன்றி கவிநயா அக்கா.
பதிவு மிகவும் அருமை. தங்கள் சேவை தொடரட்டும். இறைவனை வேண்டிகொள்கிறேன்.
நன்றி உதயகுமார் ஐயா.
முருகன் என் இல்லம் தேடி வந்து என் இதயத்தில் அமர்ந்து கொண்டான்.இறை பணியில் தங்கள் பதிவுகள் சிந்தை கவர்ந்தன.என் 12 வயது பிள்ளை பாடல்களை பிரிண்ட் செய்து பாடி மகிழ்கிறான்.வலை உலகம் மூலம் ஒரு நல்ல பழக்கத்தை கற்று தர உதவிய உங்களுக்கு நன்றிகள்.
மிக்க மகிழ்ச்சி. நன்றி சந்திரா.
Post a Comment