வரமனம் இல்லையா?
திருத்தணியில் ஒவ்வொரு கிருத்திகை நாளும் சிறப்பு நாளாகும். ஆடிக்கிருத்திகைதான் மிகவும் விசேஷமானது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு சரவணப் பொய்கையில் தெப்ப உற்சவம் நடைபெறும்.இந்த மூன்று நாட்களிலும் சுமார் 12 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.அன்று பூக்காவடி, பால்காவடி ஆகிய பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர்.
சூரபத்மனோடு போரிட்டு முடித்த பின்பு சினம் தணிந்து இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதால் இங்கு சூரசம்ஹார விழா கொண்டாடப் படுவதில்லை
தேவர்கள் பயம் நீங்கிய இடமும் இது தான். முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடமும் இதுதான். அடியவர்கள் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றை தணிக்கும் இடமாதலால் தணிகை என்று பெயர்க் காரணமும் உண்டு
திருத்தணியில் முருகனை வழிபட்டவர்கள் சிவபெருமான், திருமால், ராமர்,பிரும்மன், சரஸ்வதி,
அடியார்களைப் பொருத்தவரை அருணகிரிநாதருக்கு சும்மாஇரு என்று உபதேசம் செய்தவரே முருகந்தான். அவரும் இங்கு முருகன் மீது 63 பாடல்கள் பாடியுள்ளார். முத்துஸ்வமி தீக்ஷதரும் தனது முதல் பாடலான "ஸ்ரீ நாதாதி குரு குஹோ " என்ற பாடலை இயற்றியது திருத்தணிகையில்தான்.தீவிர முருக பக்த்தரான அவர்தனது ஒவ்வோரு கீர்த்தனையிலும் " குரு குஹ" என்ற முத்திரையை பதித்துள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியாரும் கந்தபுராணத்தில்"உலகில் மலைகள் பல இருந்தாலும் சிவபெருமான் கயிலாயத்தில் விரும்பி இருப்பதுபோல முருகந்திருத்தணி மலையை மிகவும் விரும்பி அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறான்" என்று சிறப்பித்து கூறியுள்ளார். மற்றும் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வடலூர் ராமலிங்கஸ்வாமிகள், கந்தப்பையதேசிகர் ஆகியோரும் வழிபட்ட இடம் இது.
இங்கு முருகனின் பிரசாதமாக திருநீறு குங்குமம் அளித்தாலும் முருகனுக்கு அபிஷேகம் முடிந்து பின்னர் அவர் மார்பு மீது சாத்தப்படும் திருமேனிப் பூச்சு என்னும் சந்தனம் முருகன் சந்நிதியில் வழங்கப்படும். இச்சந்தனத்தை உட்கொள்ளுபவர்கள் நோய்கள் பலவும் தீரப் பெறுவர்.
முருகனுக்கு இணயான தெய்வமோ திருத்தணிகைக்கு சமமான தலமோ இல்லை என்றே சொல்லாம்.மற்ற படை வீடுகள் எல்லாம் மதுரையைச் சுற்றியே இருக்கும் போது இது ஒன்றுதான் தொன்டை மண்டலத்தில் இருக்கும் ஒரே படை வீடு.
தணிகை மலை துரையைப் பற்றி பெங்களூர் ரமணி அம்மாள் பாடுவதை கீழே கேட்டும் கண்டும் அனுபவியுங்கள்
-
ராகம்:யமுனா கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி
வரமனம் இல்லையா முருகா
வரம் தர மனமில்லையா? என்னிடம்....வரம்தர
அனுபல்லவி
பிறவிப் பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன் மைந்தா குறை தீர்க்கும் குமரா....வரம் தர
சரணம்
வாழ்க்கை எனும் கடலிலே முழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம்..... வரமனம்
இந்த வருடம் ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது கிருத்திகை இது.இந்த வாரம் திருத்தணிகைக்கு குடும்பத்துடன் சென்றுமுருகனை வணங்கி விட்டு வந்தேன்.இந்தபாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அது சரி பிறைசூடன் யார்? ஓ ஸ் அருணின் குரலில் கேட்டுதான் பாருங்களேன்...
18 comments:
சக்திவேல் முருகனுக்கு அரோஹரா!
ஞானவேல் முருகனுக்கு அரோஹரா!
பாடலை பிறகுதான் கேட்கவேண்டும்.
வாங்க மௌலி அண்ணா சந்திரமௌலிக்கே பிரணவப் பொருளை விவரிக்க கிளாஸ் எடுத்தவர் எங்க சிறுவன் முருகந்தான்
கேஆர்ஸ் என்ன பொருத்தம் நம் இருவருக்கும். இருவரும் வட ஆற்காடு மாவட்டம். ஆடிகிருத்திகைபதிவு அதிலும் பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டு, திருத்தணிகை தலவரலாறு.எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் இது எத்தனை கண்களுக்கு வருத்தம்
எப்படியோ இதிலாவது உங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் கிட்டே வரமுடியுதேன்னு ஒரு அல்ப சந்தோஷம்தான்
பதிவு தூள். அதுவும் ரமணி அம்மாள் முழுப்பாட்டும் போட்டு இருக்கும் விதம் சூப்பர்.
//மதுரையைச் சுற்றியே இருக்கும் போது இது ஒன்றுதான் தொன்டை மண்டலத்தில் இருக்கும் ஒரே படை வீடு//
சூப்பர்! இது நம்ம வீடு, இது நம்ம ஆளு-ன்னு சொல்லுங்க! :)
பக்கத்துல வள்ளி மலையும் எங்கூரு பக்கம் வேலூர் தான்! இது ஒன்னே போதும் திருத்தணிப் பெருமைக்கு! :)
நல்ல பாடல் திராச!
வர மனம் இல்லையா? வரம்
தர மனம் இல்லையா?-ன்னு சரியாத் தான் மடக்கறாரு! :)
பிறை சூடன் யாரு? சந்தேகம் என்ன? பிள்ளை தான் பிறை சுதன்! பிறை சூடன்! :)
திராச,
அடியேனை மன்னிக்கவும்! இந்தப் பதிவை scheduleல்ல போட்டு வச்சிருந்தீங்களா என்ன? அதை நான் கவனிக்கவே இல்ல! ஒன்னுமே காணோமே, எல்லாம் Draft-ல இருக்கே-ன்னு நான் தான் விறு விறு-ன்னு எழுதிப் போட்டேன்! அதுவும் விடிகாலை 03:30 மணி! தூக்கக் கலக்கம்! :)
கடைசீல பாத்தா இதுவும் ரமணி அம்மாள் பாட்டு தானா? ஆகா!
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்து அருள் பெருமாளே-ங்கிற திருப்புகழ் இன்னிக்கி நல்லாவே பொருந்திடிச்சி! எந்நாளும் பொருந்த ஆசி கூறுங்கள்! சேவித்துக் கொள்கிறேன்!
வாங்க கேஆர்ஸ். சந்திரசேகரன் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் பிறை சூடன் என்கிறார்களே அப்படியும் இருக்குமோ? அடுத்த முறை சென்னை வரும்போது திருத்தணிகை செல்லலாம்.
இப்போதான் அறுபடைவீடு போயிட்டு வந்தோம். சிங்கைச் செந்திலுக்கு சீக்கிரம் குணமாகணுமுன்னு வேண்டிக்கிட்டு வந்தேன்.
வாங்க டீச்சர். நான் கூட ஆறுபடை வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போயிருந்தேன். சந்தேகமா சென்னை பெஸண்ட் நகரில் நகரத்தார்கள் கடற்கரை ஓரமாக ஒரே இடத்தில் ஆறு படை வீட்டு முருகன்களையும் ஸ்தாபிதம் செய்துள்ளார்கல் அங்குதான் போயிருந்தேன். நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லாம போராது ஆனா உங்க விஷ்யத்துளே சொல்லமலேயே வரதா?
நானும் அதே இடத்துக்குத்தாங்க போனேன்!
திருத்தணிகை மலையைப் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன் தி.ரா.ச. நன்றி. நன்றி.
இரண்டு பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன் பிறைசூடரே. நன்றி. நன்றி.
//வாங்க கேஆர்ஸ். சந்திரசேகரன் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் பிறை சூடன் என்கிறார்களே அப்படியும் இருக்குமோ?//
ஹிஹி! ஓ.எஸ்.அருண் தான் சொல்லிட்டாரே!
ஆனாலும் நாங்க சந்திர மெளலியைத் தான் பிறை சூடன்-ன்னு சொல்லுவோம்! அதான் சந்திர சேகரனைக் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்! :)))
எது எப்படியோ...என் முருகனும் பிறை சூடன் தான்! சுவாமிமலை ஜடாமுடிக் கோல அலங்காரத்தில் பிறை உண்டு!
ஆடிக் கிருத்திகைக்கு அற்புத பதிவு. திருத்தணிகையைப் பற்றி பல சுவையான செய்திகளை அறிந்து கொண்டேன் நன்றி.
சந்திரசேகரன் ஐயா, கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவிற்க்கு சுவையான வலைப்பூ என்னும் விருது கொடுத்து கௌரவித்தாத். அடியேன் அதை தங்களுக்கு அளிக்கின்றேன். மேலும் விவரம் அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.
கைலாசி அவர்களே நன்றி அடியேனைப் பற்றி தங்கள் பதிவில் பதித்தமைக்கு. மற்றபடி பட்டங்களுக்கு நான் தகுதியா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் மறைந்த திருமதி. டி.கே பட்டம்மாள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. "பட்டம் பதவி பெறபாடவில்லை ஐயா எனக்கு தங்கப் பதக்கங்களும் தேவையில்லை. எட்டு எட்டு திக்கிலும் ஓடவில்லை முருகா உன்னை என்றும் மறந்தேனிலை"உங்கள் விருபத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.
வாங்க குமரன் வருகைக்கு நன்றி
ஆனாலும் நாங்க சந்திர மெளலியைத் தான் பிறை சூடன்-ன்னு சொல்லுவோம்! அதான் சந்திர சேகரனைக் கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்! :)))
நீங்க சந்தரமௌலியை அடிச்சி வாசிக்கறதும் என்னை அடக்கி வாசிக்கிறதும் தெரிஞ்ச விஷயம் தானே: ) ) )
நானும் அதே இடத்துக்குத்தாங்க போனேன்
டீச்சர் அப்படியா விஷயம். இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறீர்களா? இருந்தால் கொஞசம் தகவல் அளியுங்கள்.
அருமையான பாடல்.
சின்னச் சின்ன முருகன் ஸ்ரீமுருகனுக்கு அரோகரா!
Post a Comment