சிவசண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை!!
சுவாமிமலை எங்கள் சுவாமிமலை சிவ
சண்முகனுக்கு ஈடு யாரும் இல்லை (சுவாமிமலை)
சப்தங்களின் தொடக்கம் பிரணவமாம்
சாரம் தெரியாமல் திகைத்தனராம்
சத்தியலோகத்து பிரம்மனுமே
சரவணன் கையாலே சிறைப்பட்டான் (சுவாமிமலை)
சங்கரன் செவியினில் உமைபாலன்
சாற்றும் உபதேசன் ஓம் நாதம்
சாமிமலை தகப்பன் சாமிமலை
சன்னிதி வந்தவர்க்கு ஏது குறை (சுவாமிமலை)
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
10 comments:
குமரன்,
அது என்ன சாமிமலை முருகனைப் பதிவிடும் போது மட்டும் கஜவாகனர் படம்? :)
மயில் வாகனர் கிடையாதா? அஜ வாகனர் கிடையாதா? :)
இனிமையான பாடல்....
பதிவிற்கு நன்றி...
இந்த இடுகையைப் போடும் போது முருகன் படம் தேடினேன் இரவி. கஜவாகனர் கிடைத்தார். அதனை உடனே இட்டேன். நீங்கள் இப்போது கேட்ட பின்னர் தான் தோன்றுகிறது. சுவாமிமலையில் சுவாமிநாதப் பெருமாளுக்கு முன்னர் யானை தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் சென்றது. சரி தானா?
நன்றி அடியாரே.
//சுவாமிமலையில் சுவாமிநாதப் பெருமாளுக்கு முன்னர் யானை தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் சென்றது. சரி தானா?//
சரிதான் குமரன் ஐயா.
என்ன ஆச்சர்யம். இப்பதான் எங்க ஊர் 'ஆறுபடை வீடு' நடன நிகழ்ச்சிக்கு சுவாமி மலைக்கு இந்த பாடலை தேர்ந்தெடுத்தோம். வந்து பார்த்தா, இங்கேயும் அதே!
நன்றி கைலாஷி ஐயா.
நல்ல பாடல் அக்கா. சுவாமிமலையின் கதையையும் இந்தப் பாடல் சொல்கிறதே. நல்ல பாடலைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
ஐயா,
//சங்கரன் செவியினில் சிவபாலன்//
சங்கரன் செவியினில் உமைபாலன் என்று பாடல் வரிகள் உள்ளதே.
திருத்தத்திற்கு நன்றி சந்திரா. திருத்திவிட்டேன்.
Post a Comment