செந்தில்நகராதிபனை சிந்தை செய்வாய் மனமே தினமே.
ராகம்:- ஆரபி தாளம்:-ஆதி
பல்லவி
திருத்தணி முருகன் திருவருள் புரிவான்
திருமால் மகிழும் அருமை மருகன் (திருத்தணி)
அனுபல்லவி
அறுபடை வீட்டின் நாயகனே
குறவஞ்சி வள்ளியின் காவலனே (திருத்தணி)
சரணம்
குறுநகை புரிந்திடும் அருள்முகமும்
பரிவுடன் உதவும் பன்னிருகரமும்
வீருடன் தோன்றும் வெற்றி வடிவேலும்
என்றென்றும் என்னைக் காத்திடுமே (திருத்தணி)
இன்று கிருத்திகை(27/07/08). வழக்கம்போல் பதிவு முருகன் அருளால்.இன்று கேட்கப் போகும் பாடல் திரு. பாபநாசம் சிவன் அவர்களுடையது.இதைப் பாடியிருப்பவர் சிவன் அவர்களுடன் நெடுநாட்கள் வாழ்ந்து அவர்பாடல்களை எழுத்துவடிவில் வெளியிடக் காரணமானவர், அவரின் சிஷ்யருமானவர். அவர்தான் திரு செதலபதி. பாலசுப்ரமணியன்.
அப்பா முருகா உன் சோதனை சுமை விளையாட்டுக்கு இந்தா ஏழைதான் கிடைத்தேனா.உன்னுடைய பாதகமலம் மறவாத என்னுடைய பாதக மலத்தை போக்கமாட்டாயா. பதகமலம் என்ற வார்த்தையில் சொல் விளையாட்டு அபாரம்.என்னுடைய வினை உன்னுடைய அருளைக்காட்டிலும் வலிமை கொண்டதா? இரக்கமேஇல்லயா உனக்கு? வா குமரா, பலா,வேலா வந்து காப்பாய்.
ராகம்:- காபி தாளம்:- ஆதி
பல்லவி
சோதனைச் சுமைக்கிவ் வேழை ஆளா
ஸ¤ப்ரம் மண்ய தாளாச் (சோதனை)
சரணம்
பாத கமலம் மறவாத அடிமை என்பாதக மலம் அகலாதா வாதா (சோதனை)
உனதருளினும் என் வினைவலி பெரிதோ
உனக்கிரக்க மில்லையோ கந்தா வந்தாள் (சோதனை)
காம ஸம்ஹார சிவகுமரா குருபரா
ராமதாஸன் பணியும் பாலா வேலா (சோதனை)
<"திருமதி மும்பை ஜெயச்ரீ குரலில் இங்கே கேளுங்கள்">">
திரு. பாலுவின் குரலில்">
4 comments:
முதல்ல ஒரு பாடல் ஆரபியில் கொடுத்திருக்கீங்களே? அது சென்ற கிருத்திகையின் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டுமா?:)
வரதரு மருகன்-வர தரு முருகன்
அவன் பற்றிலே வரவு வைத்து விடுவோம்!
இந்தப் பதிவு 102! :)
//பாத கமலம் மறவாத அடிமையின்
பாதக மலம் அகலாதா வா தா//
மிகவும் அருமை!
பாத கமலம் சேர்ந்தால்
பாதக மலம் அறுத்து
பாதகம் அலம் பிடுவான்-ஞான
போதகம் சிலம் பிடுவான்!
மிக அருமையான பாடலை அறிமுகம் செய்தீர்கள் தி.ரா.ச. நன்றி.
பாத கமலம் மறவாத அடிமை பாதக மலம் அகலவேண்டும் என்றும் உனது அருளினும் எனது வினையின் வலிமை பெரிதா என்றும் மிக நன்றாக மன்றாடுகிறார் இராமதாஸர்.
நல்ல பாடலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி திராச.
Post a Comment