Happy Birthday முருகா! - ஆறு முருகன்களின் காட்சி!
வைகாசி பொறந்தாச்சு! மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?
இன்று வைகாசி விசாகம் (May 19, 2008)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு? - சைவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! வைணவக் கொழுந்து பிறந்ததும் இன்று தான்! இப்படி ஒரு இனிய சைவ-வைணவ ஒற்றுமை!
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்! இறைவன் திருவடிகளின் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்! அது மட்டுமா?
விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் இன்னொரு அழகன். அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாருமே அழகா இருப்பாங்களா-ன்னு கேக்கறீங்களா? ஜோதிட விற்பன்னர்கள் யாராச்சும் சொல்லுங்கப்பா!)
இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வு அருள் பெருமாளே!
என்று அருணகிரியும் இவனை "விசாகன்" என்றே கொண்டாடுகிறார்! அவன் தான் விசாகன் என்னும் முருகன்! அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga! :-)
முருகா, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்என்று முருகனுக்கு பிறப்பிறப்புகள் கிடையாது என்று சொல்லுவார்கள்!
பொதுவாகவே கந்தக் கடவுளுக்கு மட்டுமில்லை, எந்தக் கடவுளுக்குமே பிறப்பிறப்புகள் கிடையாது! - இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவது எல்லாம் மனிதனாய் கீழறங்கி வரும் அவதாரங்களுக்கு மட்டுமே! கிறிஸ்துமஸும் அப்படியே! மத்தபடி ஆதியும் அந்தமும் இல்லா இறைவனுக்கு ஏது பிறப்பும் இறப்பும்?
பிறவான்-னு என்ன தான் அருணகிரியார் சொன்னாலும், நாம அன்பா Happy Birthday-ன்னு முருகனுக்குச் சொல்லுறதை அவரும் தடுப்பாரா என்ன?
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! அதனால் பிறந்தநாள் பரிசு வைத்தேன்! :-)
கந்தன் கருணை படத்தில் மிக அழகான ஒரு காட்சி! ஒரு முருகனைப் பார்த்தாலே அழகு கொஞ்சும்! ஒரு சேர, ஆறு முருகன்களைப் பார்த்தால்?
கள்ளமில்லாச் சிரிப்பு சிரிக்கும் ஆறு முருகன்களைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்கும் காட்சி!
ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளே!
என்பது தான் திருப்புகழ்...
அதைத் திரைப்படத்துக்காகச் சற்றே மாற்றி...மிக அழகாக இசை அமைத்திருக்காங்க! சூலமங்கலம் சகோதரிகள், மற்றும் ஜமுனாராணி போன்ற மற்ற பாடகிகள் சேர்ந்து பாடறாங்க!
(கந்த சஷ்டிக் கவசம்-னா சூலமங்கலம் பாடித் தான் கேட்கணும் என்ற அளவுக்கு, சூலமங்கலம் சகோதரிகள் புகழல்லவா!)
பாடலை இங்கு கேளுங்க! வீடியோவில் ஆறு முருகன்களையும் ஒரு சேரப் பார்த்து மகிழுங்க!
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க!
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க!(ஆறுமுகமான)
தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தண் நிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று
பால் மனமும் பூ மனமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று
(ஆறுமுகமான)
படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
19 comments:
ஹேப்பி பர்த்டே முருகா!
ஃபர்ம் சிவமுருகன் :)
அறுவரையும் பார்த்தேன். ஆமாம், நம்மாழ்வாருக்கு பாட்டு / படம் எங்க?
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
சக்தி வேல் முருகனுக்கு அரோஹரா!!!
\\கந்த சஷ்டிக் கவசம்-னா சூலமங்கலம் பாடித் தான் கேட்கணும் என்ற அளவுக்கு, சூலமங்கலம் சகோதரிகள் புகழல்லவா!)\\ ரிப்பீட்டேய்
முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிருங்க என்னோட சார்புல
சூலமங்கலம் சகோதரிகள் கணீர் குரலில் கேட்பதே ஒரு பரவசமான அனுபவம் தான்.
அப்புறம் நான் கூட விசாக நட்சத்திரம் தான் ஹீ ஹீ ஹி
தெரியாம போச்சுங்க இன்னைக்கு என் சூப்பர் ஸ்டார் முருகன் பிறந்த நாள் னு.. இன்று மாலை கோவிலுக்கு போகிறேன்.
கந்தனுக்கு என்னப்பனுக்கு
அரோஹரா.
ஆம் கேஆர்ஸ் முருகன் இறவான் பிறவான் தான். ஆனாலும் நமக்காக பிறந்தது ஒரு திரு முருகன் இங்கு உதித்தது உலகம் உய்ய. பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஆறுமுகங்களையும் ஒருங்கே கண்டு இனிய பாடலுடன் அகம் மகிழத் தந்த ரவிக்கு நன்றிகள். அழகன் முருகனுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
//சிவமுருகன் said...
ஹேப்பி பர்த்டே முருகா!
ஃபர்ம் சிவமுருகன் :)//
ஓ...அந்த முருகனுக்கு இந்த முருகன் சொல்வதும் விசேடம் தான்!
மதுரை மல்லிய எடுங்க சிவா எங்க முருகனுக்கு! :-)
//மதுரையம்பதி said...
அறுவரையும் பார்த்தேன்//
சூப்பர்!
//ஆமாம், நம்மாழ்வாருக்கு பாட்டு / படம் எங்க?//
எனக்கு குழந்தை முருகனுக்குப் பாட்டு போடத் தோனிச்சி அண்ணா!
ஆழ்வாருக்கு மற்ற அன்பர்கள் யாராச்சும் தான் பதிவு போடனும்! போட்டிருக்காங்களா என்ன? :-)
//நம்மாழ்வார் திருவடிகளே சரணம்//
சரணம் சரணம்!
வைகாசி விசாகத்துள் வந்துதித்தான் வாழியே!
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே!
//சக்தி வேல் முருகனுக்கு அரோஹரா!!!//
நான் உங்க பதிவில் சொன்னதை இங்கன என் பதிவில் சொல்லுறீங்களா! சூப்பர்! அரகரோகரா!
//சின்ன அம்மிணி said...
\\கந்த சஷ்டிக் கவசம்-னா சூலமங்கலம் பாடித் தான் கேட்கணும் என்ற அளவுக்கு, சூலமங்கலம் சகோதரிகள் புகழல்லவா!)\\ ரிப்பீட்டேய்//
முருகனுக்கே ரிப்பீட்டா! ஹிஹி!
சரி நானும் ரிப்பீட்டிக்கறேன்!
//முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிருங்க என்னோட சார்புல//
சொல்லிடறேன்-கா!
நீங்களும் நேரடியாவே ஒரு போன் போட்டுச் சொல்லிருங்க! :-)
//கிரி said...
சூலமங்கலம் சகோதரிகள் கணீர் குரலில் கேட்பதே ஒரு பரவசமான அனுபவம் தான்.//
அதே! அதே!
//அப்புறம் நான் கூட விசாக நட்சத்திரம் தான் ஹீ ஹீ ஹி//
ஹைய்யா!
அதான் உங்க ஃப்ரொபைல் படத்துல இருக்கறவங்க கூட "முருகு"-வா இருக்காய்ங்க போல! :-)
//தெரியாம போச்சுங்க இன்னைக்கு என் சூப்பர் ஸ்டார் முருகன் பிறந்த நாள் னு.. இன்று மாலை கோவிலுக்கு போகிறேன்//
சூப்பர்! சூப்பர் ஸ்டார் விசாகத்தானைச் சூப்பராப் பாத்துட்டு வாங்க!
//புதுகைத் தென்றல் said...
கந்தனுக்கு என்னப்பனுக்கு
அரோஹரா.//
சின்ன அம்மிணி அக்கா இஷ்டைலில்...
ரிப்பீட்டே....
:-)
//தி. ரா. ச.(T.R.C.) said...
ஆம் கேஆர்ஸ் முருகன் இறவான் பிறவான் தான். ஆனாலும் நமக்காக பிறந்தது ஒரு திரு முருகன் இங்கு உதித்தது உலகம் உய்ய.//
உண்மை திராச!
உலகம் உய்யத் தானே உதித்தல்/மறைதல் இல்லாத தெய்வம், இராமனாய் கண்ணனாய் உதிக்கின்றது!
அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!
//பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
ரிப்பீட்டே! :-)
//கவிநயா said...
ஆறுமுகங்களையும் ஒருங்கே கண்டு இனிய பாடலுடன் அகம் மகிழத் தந்த ரவிக்கு நன்றிகள்//
ஆறு முகங்களும் கண்டு ஆசையுடன் ரசித்த கவிநயா அக்காவுக்கும் நன்றி பல!
//அழகன் முருகனுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!//
ரிப்பீட்டே! :-)
//பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
ரிப்பீட்டே! :-)
//ஆழ்வாருக்கு மற்ற அன்பர்கள் யாராச்சும் தான் பதிவு போடனும்! போட்டிருக்காங்களா என்ன? :-)//
குமரன் போட்டிருக்காரே கூடல்ல -
http://koodal1.blogspot.com/2008/05/blog-post_19.html
மிக அருமையான பாடல் இரவிசங்கர்.
போன வாரத்தில இருந்து சன் தொலைக்காட்சித் தொடரான 'திருவிளையாடல்' தொடரில் முருகனின் பிறப்பிலிருந்து காட்டுகிறார்கள். இன்றைக்கு குமரன் செய்த குறும்புகள் வந்தன.
நேத்து நான் கந்தன் கருணை படம் பார்த்தேனே! அப்ப இந்த பதிவு நினைவு வந்தது :)
முருகனருள் என்றும்கிடைக்கட்டும்.//சித்ரம்
Post a Comment