எனது உயிர் நீ முருகாஏழைக்கருள்
கிருத்திகை முருகனுக்கு உகந்தநாள்.அதுவும் முருகனுக்குரிய செவ்வாயன்று வரும் சிறப்புநாள் முருகனை பணிந்து அவன் பாடலைக் கேட்டு பார்த்து ரசிப்போம். அலுவல் நிமித்தமாக சுற்றுபயணத்தில் இருப்பதால் இருக்கும் வசதியைக் கொண்டு இடப்பட்ட பதிவு.குறை பொறுத்து நிறையை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராகம்:- கல்யாணி தாளம்:- ஆதி
பல்லவி
எனது உயிர் நீ முருகாஏழைக்கருள் செய்ய வா
அனுபல்லவி
இணையடி வேண்டி தினம் தொழும் அடிமை நான்
சரணம்
அழகு வடியும் ஆறுமுகனே
அன்னை உமையவளின் அருமை மகனே
கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்
பழனிமலை மீதமர் கந்தா பரிசோதனை போதும்
இந்தப்பாடல் மறைந்த பாடகர் திரு. கல்யாணராமன் இயற்றி மெட்டமைத்து பாடியது
-
11 comments:
எங்க இருந்தாலும் முருகன் உங்களை எப்படியோ செயல்பட வைத்துவிடுகிறான் பாருங்க.....சக்தி வேலனின் பெருமையே பெருமை....
பாடலை இன்னும் கேட்கலை திரச. கேட்டுட்டு திரும்ப வரேன்.
நண்பர் ஒருவரால் சுப்ரமண்ய புஜங்கம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் :-)
ஒரு பதிவு போடலாம் என்று எண்ணம். யாராவது பாடலாக பாடியிருப்பின் இங்கயே போடலாம்
மௌளி நீங்க சொல்வது சரிதான். ஹோட்டலுக்கு வந்து இரவு 10 மணிக்கு மேல் எழுதியது.வெய்யில் 112 டிகிரி அடிக்கிறது வேலூரில்.சுப்பிரமணிய புஜங்கம் எழுதுங்கள் எனக்கும் அதுபோல் ஆசை உள்ளது.என்னுடைய லேப்டாப்பில் பதிவு செய்து வைத்து இருக்கிறேன். பாட்டையும் கேட்டுவிட்டு/பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
//குறை பொறுத்து நிறையை மட்டும் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்//
குறையா?
முருகன் நிறைய எல்லாமே நிறை தான் திராச!
அடியேன் சொன்ன வண்ணமே, எங்கள் கிருத்திகை காலண்டர் என்றென்றும் நீங்க தான்! :-)
//கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்//
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்!
//நண்பர் ஒருவரால் சுப்ரமண்ய புஜங்கம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் :-)//
ஹிஹி!
உங்க நண்பனைப் பாக்கணும்-னு ஆசையா இருக்கு மெளலி அண்ணா! நீங்க புஜங்கம் படிக்க ஆரம்பிச்சா...எங்களுக்கு எல்லாம் பஞ்சாமிர்த பதிவு கிடைக்கும் அல்லவா? அதான் :-)
மெளலி அண்ணா மற்றும் நம்ம எல்லாரின் மகிழ்ச்சிக்காக...இங்கேயும்!
மயூ ராதி ரூடம், மகா வாக்ய கூடம்!
மனோ காரி தேகம், மகா சித்த கேஹம்!
மகா தேவ தேவம், மகா வேத பாவம்!
மகா தேவ பாலம், பஜே லோக பாலம்!
அருமையாக இருந்தது பாடல் திராச. நன்றி.
நன்றி குமரன்.
கேஆர்ஸ் பாட்டைக் கேட்டு எழுதியது. இருந்தாலும் ஒரு ஊகத்தில் அளிக்கிறேன். பழனி மலையைச் சுற்றி வளமையான தோட்டமும், கழனிகளும் மலர்க்கூட்டமும் நிறைந்த இடம்.அப்படிப் பட்ட சோலையில் காற்று நுழைந்து வரும் போது எழுப்பும் ஒலி ஒம் ஒம் என்று கந்தனுடைய வேதமான பிரணவத்தை கூறுவதுபோல் இருக்கிறது.
//உங்க நண்பனைப் பாக்கணும்-னு ஆசையா இருக்கு மெளலி அண்ணா! நீங்க புஜங்கம் படிக்க ஆரம்பிச்சா...எங்களுக்கு எல்லாம் பஞ்சாமிர்த பதிவு கிடைக்கும் அல்லவா? அதான் //
என் நண்பனை நீங்க போன மாதம் கூட நேர்ல பார்த்து, சென்னையில் முருகம் கோவில், கெண்டகி சிக்கன்னு சுத்தினதெல்லாம் அதுக்குள்ள மறந்துடுச்சா கே.ஆர்.எஸ். :)
//கழனி மலர்காசுல் கந்த மறைஒதும்
//
வெண்பா விதியை பின்பற்றி இயற்றபட்டதோ? ஈற்றடிகள் ஒரே ஓசையில்(செப்பல் or அகவல்) வருகிறதே?
KRS or கொத்ஸ் விளக்கமளிக்க வருவார்களா? :))
வேல் இருக்கும் இடத்தில் எல்லாம் நமக்கு நல்ல நேரம் வரும் வேளை என சொந்த வேலை மறந்து இந்த கந்த வேலை பார்க்க ஓடி வந்தேன். :)
இரும்பு அடிக்கற இடத்தில் ஈக்கு என்ன வேலை?னு யாரேனும் பின்னூட்டம் போட போறாங்க. :p
Post a Comment