என்ன கவி பாடினாலும்........
ராகம்:-சிவரஞ்ஜனி தாளம்:- ஆதி
பல்லவி
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி)
(அனுபல்லவி)
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...)
சரணம்
அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை
பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)
உள்ளம் உருகும் பாடல்களைபாடுவதில்,அதிலும் முருகன் பேரில் பாடுவதில்மறைந்த திரு. மதுரை. சோமசுந்தரத்தை யாரும் மிஞ்சமுடியாது.முருகனோடு பேசிக்கொண்டே சங்கீதத்தை நமக்கு அள்ளித்தருவார்.பாமர ஜனங்களையும் இசையின் பால் ஈர்ப்பதில் வல்லவர். மதுரையில் கச்சேரி இரவு 10 மணிக்கு ஆரம்பித்தால் விடியற்காலை 4 மணிவரை பாடுவார். ஜட்கா வண்டிக்காரர்கள் சவாரியையும் விட்டுவிட்டு விரும்பிக் கேட்பார்கள்.
அவர் பாடிய பாடல்களில் மிகவும் அதிகம் பாடிய பாடல்"என்ன கவி பாடினாலும்" தான்.அதுவும் பல பாடல்களைப் பாடிய பின்பு கடைசியாகத்தான் பாடுவார்.சிவரஞ்ஜனிராகமேஇரக்கத்தைத் பரிமளிக்கும் குணமுடையது மட்டுமல்லாமல் மாற்றான் தோட்டத்து மல்லிகை. ஆம் இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம்.
இதேபாடலை ஓ.ஸ் அருணும் பாடியுள்ளார் அவர் பஜனை சம்பிரதாயத்தில்பாடியுள்ளார். இரண்டையும் கேட்டுப்பாருங்களேன்
மதுரை சோமுவின் குரலில் இங்கே கேட்கவும்! - மேலிருந்து கீழ், ஆறாம் பாடல்
12 comments:
மன்னிக்கவும். மதுரை சோமு சுட்டி சரியாகவேலை செய்யவில்லை
///சங்கீதத்தை நமக்கு அள்ளித்தருவார்.பாமர ஜனங்களையும் இசையின் பால் ஈர்ப்பதில் வல்லவர். மதுரையில் கச்சேரி இரவு 10 மணிக்கு ஆரம்பித்தால் விடியற்காலை 4 மணிவரை பாடுவார். ஜட்கா வண்டிக்காரர்கள் சவாரியையும் விட்டுவிட்டு விரும்பிக் கேட்பார்கள்.///
உண்மை தி.ரா.ச அவர்களே!
ந்ல்ல பாடலை அறியத்தந்தமைக்கு
நன்றி!
கந்தன் அருள் அவன் பக்தர்களுக்கு என்று உண்டு!
எந்தக் கவி பாடுனாலும்
சந்தக் கவி பாடுனாலும்
அதைக்
கந்தக் கவியாப் பாடுனாலே சுகந்தான்
அதுவும் மதுரை சோமு பாடுனா கேக்கனுமா! ஆமா...கேக்கனும். திரும்பத் திரும்பக் கேக்கனும்.
ஆனா அந்தச் சுட்டி முழுப்பாடும் பாடலை. அது என்னன்னு கொஞ்சம் பாருங்களேன் திராச.
மதுரை சோமுவின் குரலுக்கு ஜட்கா வண்டிக்காரர்களும் ஓடி வருவார்கள்! ஜமீன்தார்களும் ஓடி வருவார்கள்!
அதுவும் சோமுவின் முருகன் பாடல்களில் இதுவும் மிகவும் பிரபலம். அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர் எழுதிய இப்பாட்டை சோமு பாடி பிரபலம் ஆக்கினார். இன்று குன்னக்குடி வாசிக்கிறார். அருணா சாய்ராம், ஓ.எஸ் அருண் என்று பலரும் பாடுகிறார்கள்!
உன்னை நான் விடுவதில்லை என்ற கடைசி வரிகள், கந்தன் காலடியைக் கண் முன் அப்படியே கொண்டு வருகிறது!
திராச
வேறு ஒரு சுட்டி கிடைத்தது. அதை உரிமையுடன் உங்களைக் கேட்காமலேயே பதிவில் மாற்றி விட்டேன். மன்னிக்கவும்.
ஜிரா
இப்போது கேட்டுச் சொல்லுங்க!
பாட்டு கேட்க முடியவில்லை
அன்புடன், கி.பாலு
வாங்க சுப்பையா சார்.மதுரை சோமு உங்களையும் அழைத்துக்கொண்டு வந்து விட்டாரே.
ஸொந்தக்கவிதையில் வந்து வாழ்த்தியா ஜீராவே வாழ்க
வாழ்க கே ஆர் ஸ் பாட்டை எழுதியவரை தெரிவித்ததற்கு.
நன்றி சரியான சுட்டியை அளித்ததற்கு ஆனால் ஓ ஸ் அருண் சுட்டி போய்விட்டதே
மடல்காரன் மன்னிக்கவும் சரிசெய்கிறேன்
இப்பாடலின் ராகம் நீலமணி ஐயா
இராகம் நீலமணி சிவரஞ்சனி அல்ல
Post a Comment