தமிழ் முருகனை ஆங்கிலத்தில் வழிபடலாமா?
தமிழ்க் கடவுள் முருகனை ஆங்கிலத்தில் போற்றிப் பாடினால் மகிழ்வானா? Language Independentஆ அந்தத் தமிழ்க் கடவுள்? :-)
முருகனருள் வலைப்பூவில் முதல் ஆங்கிலப் பாட்டு! - அடிக்க வராதீங்க சாமீ!....Lord Muruga, London Muruga
சரி, அப்படிப் பாடினவங்க யாரு? - டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்!
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பார்கள். இவர் தந்தை மெச்சிய தனயன்!
அறுவை சிகிச்சை - உடல் உறுப்பு மாற்று மருத்துவரும் (Transplant Doctor)கூட!
தமிழிசை, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகப் பணிகள் என்று பல முகங்கள் இவருக்கு! சென்னை மயிலாப்பூர் (திருமயிலை) கபாலீஸ்வரர்-கற்பகாம்பிகை கோவிலுக்கு அறங்காவலராகவும் இருந்தார்! தமிழிசை வித்தகர்!
தந்தையைப் போல அவ்வளவு பாடல்கள் பாடாவிட்டாலும், பாடிய வரை அத்தனையும் முத்தான பாடல்கள்! கணீர்க் குரல் தற்காலத்திய சினிமாவுக்குப் பொருந்த வில்லையோ என்னமோ, இவருக்குத் திரை இசையில் அவ்வளவா வாய்ப்புகள் வரவில்லை! ஓடக்கார மாரிமுத்து ஓட்டாவாயி மாரிமுத்து, ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சவுக்கியமா பாடலை, SPBஉடன் இவரும் சேர்ந்து பாடினார்! நினைவிருக்கா? :-)
ஆனால் தமிழ்ச் சொற்களைத் தங்க்ளீஷ் எல்லாம் ஆக்காமல், அப்படியே உச்சரிக்க இவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்! - இப்படி சுத்தமான உச்சரிப்பு தான் திரையிசையில் இவருக்கு ஆகாமல் போய்விட்டதோ என்னவோ? :-)
கர்நாடக இசைக் கச்சேரிகளில் பிற மொழிப் பாடல்கள் பாடும் போதும் கூட உச்சரிப்பில் இவருக்குக் கவனம் அதிகம்!
தாயார் சுலோசனா கோவிந்தராஜனுடன்-சிவசிதம்பரம்
ஒன்று சர்ச்சு ரோடு முருகன் கோவில். இன்னொன்று ஹை கேட் (High Gate - உயர் வாயில்) ஆலயம்.
இதில் எந்த ஆலய விழாவில் சிவசிதம்பரம் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார் என்பதை அறியோம்! ஆனா வரிகள் அத்தனையும் அருமை! மொழியையும் கடந்து முருகனிடம் உருக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இவ்வரிகள்!
In the Chambers of my Heart
A shrine I have for Thee
என்று பாடும் போது
இதயக் குகையில் (chambers of heart) - குகன் அல்லவா குடி கொள்கிறான்!
In Thy light let me walk, O My Lord of my soul, என்று இறுதியில் ஒரு வெஸ்டர்ன் மெலடி போல் பாடலில் உருகும் போது....
தனி வழிக்குத் துணை...வடிவேலும் செங்கோடன் மயூரமுமே என்ற வரிகள் மனதில் தோன்றாமல் இல்லை!
பாடலை ஆங்கிலத்தில் சுவைபட படித்துப் பாருங்கள்!
அற்புதமான காதல் கவிதை - அதை Bryan Adams பாட, John Travolta ஆடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க தண்டபாணி தடை ஏதும் சொல்லப் போவது இல்லை! :-)
பாடலை இங்கே கேட்கவும் - sirkali.org தளம் - Real Player தேவை!
இல்லீன்னா, இங்கே சொடுக்கவும்!
இதே போல் வெல்டன் வெல்டன் வாஷிங்கடன் என்று அமெரிக்காவில், வாஷிங்கடன் முருகன் கோவிலைப் பற்றியும் பாடியுள்ளார்.
In the Chambers of my Heart
A shrine I have for Thee
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.
Lord முருகா London முருகா
Lord முருகா London முருகா
The candles of my love, are burning bright for Thee
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.
The blossom of my Soul, I offer unto Thee
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.
In silent communion I watch and wait for Thee,
Come O Lord, Come O Life,
Come Thou dwell in me.
(In the Chambers of my Heart)
High Gate Azhagan
Two little eyes to look to God,Two little ears to hear His praise,
Two little legs to walk His way,
Two little hands to work His will,
One little heart to love Him still.
One little heart to love Him still.
In Thy love let me live, O My Lord of my heart,
In Thy light let me walk,O My Lord of my soul,
In Thy grace let me bathe, O My Lord of my heart,
In Thy peace let me merge, O My lord of my Soul.
(In the Chambers of my Heart)
Lord முருகா London முருகா
Lord முருகா London முருகா
வலைத்தலங்கள்:
http://www.highgatehillmurugan.org/
http://www.londonsrimurugan.org/
படங்களுக்கு நன்றி: sirkali.org
36 comments:
சிவசிதம்பரம் - ஜோடி படத்தில் கூட
'ஜீவா ஜீவா' பாடலை பாடி இருக்கிறார்.
:)
எனக்கு பிடித்த பாடகர், சிங்கையில் இவரது பாடலிசையை கேட்டு இருக்கிறேன்.
எந்த மொழியாக இருந்தால் என்ன? முருகனுக்கா தெரியாது பக்தனின் மனம்..? அவனது அருள் மனிதனின் எல்லா நிலைகளையும், அனைத்துவித எல்லைகளையும் கடந்தது..
என்னவோ சீர்காழியாரே பாடுவது போல் இருக்கிறது.
KRS,
இந்தப்பாடலை முதலில் பாடியது அவரது தந்தையே....என்னிடம் இதற்கான ஒலி நாடா இருக்கிறது.
மற்றபடி நீங்க சொன்ன இடம் எல்லாம் சரி, நானும் இந்த அருமையான கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன்.
ரியல் பிளேயர் வரை சென்றபின் ஏதோ "அந்னொன் எரர்"ன்னு வருது சாமீயோவ்.
//இந்தப்பாடலை முதலில் பாடியது அவரது தந்தையே.//
அதே.. அதே.. :)
சீர்காழி கோவிந்தராஜனின் ஈழத்துக் கச்சேரிகள் அனைத்திலும் இப்பாடலை அவர் பாடியுள்ளார்.
அவங்க அப்பா ஒரு ஆங்கிலப் பாடல் பாடி இருக்கார் அப்படின்னு சொல்ல வந்தேன். ஆனா அதுவும் இதே பாடல்தான் அப்படின்னு மத்தவங்க எல்லாம் சொல்லிட்டாங்க. அதனால
நன்றி. வணக்கம். :)
//சிவசிதம்பரம் - ஜோடி படத்தில் கூட
'ஜீவா ஜீவா' பாடலை பாடி இருக்கிறார்.
:)//
GK
அதுக்கப்புறம் கலைஞரின் சிலப்பதிகாரம், தொல்காப்பிய இசை நாடகத்துக்கு எல்லாம் பாடியும் உள்ளார்; நடித்தும் உள்ளார்.
இப்ப எல்லாம் நிகழ்ச்சிகளின் துவக்கப் பாடல் (Invocation Song) க்கு மட்டும் தான் இவரைக் கூப்புடறாங்க! :-( கடைசியா செவாலியர் சிலை திறப்பு விழா!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எந்த மொழியாக இருந்தால் என்ன? முருகனுக்கா தெரியாது பக்தனின் மனம்..?//
அதே அதே! ஆயினும் பக்தனும் மனம் அறிந்து நடக்கும் போது ஏற்படும் உறவும் உள்ளச் செழிப்பும் அலாதியானது!
//அவனது அருள் மனிதனின் எல்லா நிலைகளையும், அனைத்துவித எல்லைகளையும் கடந்தது..//
கடந்து நிற்பவன் தானே கடவுள், உண்மைத்தமிழன்!
//வடுவூர் குமார் said...
என்னவோ சீர்காழியாரே பாடுவது போல் இருக்கிறது.//
சீர்காழியாரும் இதைப் பாடியிருக்காருன்னு நினைக்கிறேன் குமார் சார். mp3 தேடிப் பார்க்கிறேன்.
//மதுரையம்பதி said...
KRS,
இந்தப்பாடலை முதலில் பாடியது அவரது தந்தையே....என்னிடம் இதற்கான ஒலி நாடா இருக்கிறது.//
mp3 கிடைச்சா சொல்லுங்க மெளலி...தரவேற்றம் செய்திடலாம்!
//மற்றபடி நீங்க சொன்ன இடம் எல்லாம் சரி, நானும் இந்த அருமையான கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன்//
அந்தப் படத்தில் ராணி பக்கத்துல இருக்குறது நீங்களா? :-)
//மதுரையம்பதி said...
ரியல் பிளேயர் வரை சென்றபின் ஏதோ "அந்னொன் எரர்"ன்னு வருது சாமீயோவ்.//
ஆகா...இனொரு முறை ட்ரை பண்ணுங்க....எனக்குச் சரியா வருதே! இல்லீன்னா இதோ கூல் கூஸ் சுட்டி!
http://music.cooltoad.com/music/song.php?id=311717
//மலைநாடான் said...
//இந்தப்பாடலை முதலில் பாடியது அவரது தந்தையே.//
அதே.. அதே.. :)
சீர்காழி கோவிந்தராஜனின் ஈழத்துக் கச்சேரிகள் அனைத்திலும் இப்பாடலை அவர் பாடியுள்ளார்.//
ஹைகேட் முருகன் மேல் நம்ம யாழ்ப்பாணம் வீரமணி ஐயரும் நிறைய பாட்டு எழுதியிருக்காராம் மலைநாடான் ஐயா!
//இலவசக்கொத்தனார் said...
அவங்க அப்பா ஒரு ஆங்கிலப் பாடல் பாடி இருக்கார் அப்படின்னு சொல்ல வந்தேன். ஆனா அதுவும் இதே பாடல்தான் அப்படின்னு மத்தவங்க எல்லாம் சொல்லிட்டாங்க. அதனால
நன்றி. வணக்கம். :)//
வணக்கம்; நன்றி, கொத்தனாரே!
ரவிசங்கர்!
இது லண்டன் உயர் வாசல் குன்று முருகன் கோவிலில் சீர்காழியார் பாடியது. இக் கச்சேரி அவர் லண்டனில் நடத்திய முதற்கச்சேரி.
இது முருகனுக்காக என்பதை விட லண்டன் வாழும் தமிழறியாச் சிறுவர்களுக்காகப் பாடியது.
ரவி, மிக நல்ல பாட்டூ.
லண்டன் முருகானு ஒரு ஆல்பம்
சீர்காழியின் நிகழ்ச்சியில் பொதிகை சானலில் ஒளிபரப்பாகும்.
அப்பா போலவே மகனின் குரலிலும் அதே தமிழ் உச்சரிப்பும் வெண்கலக்குரலும்!!
படலாம்..
//ILA(a)இளா said...
படலாம்..//
இளா...
என்ன படலாம்? :-)
நேர்ப்-படலாம்
உருப்-படலாம்
ஒழுங்கு-படலாம்
அடாததும் படாததும் நீங்கி விடு-படலாம்!
ஏற்-படலாம்!
செயல்-படலாம்!
பயன்-படலாம்!
சந்தோஷப்-படலாம்! - முருகனை
வழி-படலாம் என்று மனதில் படும் முன்னரே! :-)
ஒரு கோட்டுக்கு இத்தனை ரோடா? ஷ்ஷ்ஷ், இப்பவே கண்ண கட்டுதே!
//அந்தப் படத்தில் ராணி பக்கத்துல இருக்குறது நீங்களா? :-)//
இது நான் இல்லீங்கண்ணா...ஆனா லண்டன் பக்கத்தில் (இடத்தின் பெயர் மறந்துவிட்டது) இருக்கும் ராஜராஜேஸ்வரி கோவில் மண்டலாபிஷேக படங்களில் என்னை பார்க்கலாம் புரோகிதராக.....ஆனா ராணியெல்லாம் வரலங்கண்ணா (அன்னைக்கு ஆள் யாருமில்லைன்னு சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு என்னை கூப்பிட்டுவிட்டார் அந்நாளைய பட்டர்....ஹிஹிஹி)
அருமையான பாடல். இதே முன்பே கேட்டிருக்கிறேன். மீண்டும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
எந்த மொழியா இருந்தா என்ன...கடவுளுக்கு எல்லாம் புரியும். இந்த மொழியில செஞ்சாத்தான் அது சரியாகும்னு சொல்றது தப்பு. அவங்கவங்களு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில கும்பிட்டுக்கலாம். என்ன சொல்றீங்க ரவி?
// ILA(a)இளா said...
ஒரு கோட்டுக்கு இத்தனை ரோடா? ஷ்ஷ்ஷ், இப்பவே கண்ண கட்டுதே! //
வருத்தப்படாதீங்க இளா. இதுக்கெல்லாம் சேத்து வெச்சு கே.ஆர்.எஸ்க்கு இருக்கேய்....
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மதுரையம்பதி said...
ரியல் பிளேயர் வரை சென்றபின் ஏதோ "அந்னொன் எரர்"ன்னு வருது சாமீயோவ்.//
ஆகா...இனொரு முறை ட்ரை பண்ணுங்க....எனக்குச் சரியா வருதே! இல்லீன்னா இதோ கூல் கூஸ் சுட்டி!
http://music.cooltoad.com/music/song.php?id=311717 //
மதுரையம்பதிக்கு மட்டுமில்லை. எனக்கும் எரருதான். வீடியோ பாட்டெல்லாம் ஒழுங்கா வருது.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவிசங்கர்!
இக் கச்சேரி அவர் லண்டனில் நடத்திய முதற்கச்சேரி.//
1979ன்னு cool goose-la பார்த்தேன் யோகன் அண்ணா!
//இது முருகனுக்காக என்பதை விட லண்டன் வாழும் தமிழறியாச் சிறுவர்களுக்காகப் பாடியது//
:-)
நல்ல பணி, பாணியும் கூட!
நம் கலை அறிய வாய்ப்பில்லா நம் குழந்தைகளுக்கு இது போலச் சொன்னா, ஆர்வம் தானா வரும்!
அது என் சொந்த அனுபவமும் கூட யோகன் அண்ணா. இங்கு குழந்தைகளுக்கு அனுமன் கதைகளை ஸ்பைடர் மேன் ஸ்டைலில் சொல்வேன். வாய் பிளந்து கேட்கும். அதுக்கப்புறம் தானாப் போயி, அமர் சித்ர கதா எடுத்துப் படிக்கும்! :-) அவிங்க அம்மா அப்பாவும் ரொம்ப நாளா வீட்டில் தூங்கிக்கிட்டு இருந்த அமர் சித்ர கதா இப்போ அடிக்கடி கிழிந்து போகுதே-ன்னு பைண்டு பண்ணறாங்க. :-))
.
7:55 AM
//வல்லிசிம்ஹன் said...
ரவி, மிக நல்ல பாட்டூ.
லண்டன் முருகானு ஒரு ஆல்பம்
சீர்காழியின் நிகழ்ச்சியில் பொதிகை சானலில் ஒளிபரப்பாகும்/
இங்கே பொதிகை தெரிவதில்லை வல்லியம்மா! எப்பமே சூரியன் ஓடினா சூடாயிடுது! :-)
//அப்பா போலவே மகனின் குரலிலும் அதே தமிழ் உச்சரிப்பும் வெண்கலக்குரலும்!!//
அவங்க ரெண்டு பேரையும், குரலை மட்டும் வச்சி எப்படிக் கண்டு பிடிப்பீங்க? சொல்லுங்க பார்ப்போம்!
//G.Ragavan said...
மதுரையம்பதிக்கு மட்டுமில்லை. எனக்கும் எரருதான். வீடியோ பாட்டெல்லாம் ஒழுங்கா வருது//
ஹூம்...சரி!
Upload செஞ்சிருக்கேன்...இப்ப கேட்டுச் சொல்லுங்க!
மொழிக்கும் இனத்துக்கும் அப்பால் கடந்து இருப்பவன்தான் முருகன்.
ரியல் பிளேயரில் பாட்டு கேட்க என்னால் முடியாது - அதனால் பாட்டை இதுவரை கேட்காமல் இருந்தேன். இப்போது எம்பி3 வந்தவுடன் கேட்டுவிட்டேன் இரவிசங்கர். நன்றி.
மிக நன்றாக இருக்கிறது. பாடலை எழுதியவர் அருமையாக எழுதியிருக்கிறார். ஏற்கனவே ஒன்றிரண்டு முறை கேட்டது போலும் இருக்கிறது.
//தி. ரா. ச.(T.R.C.) said...
மொழிக்கும் இனத்துக்கும் அப்பால் கடந்து இருப்பவன்தான் முருகன்//
கடந்து நிற்பவன் தானே கடம்பன்!
கடந்தவன் தானே கடவுள்!
நன்றி திராச.
//குமரன் (Kumaran) said...
இப்போது எம்பி3 வந்தவுடன் கேட்டுவிட்டேன் இரவிசங்கர். நன்றி.//
ஆமாங்க குமரன். அதனால் தான் கூடுமானவரை real player பாடல்களை இங்கு நான் பதிப்பதில்லை!
//மிக நன்றாக இருக்கிறது. பாடலை எழுதியவர் அருமையாக எழுதியிருக்கிறார். ஏற்கனவே ஒன்றிரண்டு முறை கேட்டது போலும் இருக்கிறது//
நல்ல தேர்ந்த ஆங்கிலச் சொற்களைக் கையாண்டுள்ளார் கவிஞர். பொருளில் உருக்கம் தானாய் வருகிறது! கவிஞர் பெயர் தான் தெரியவில்லை!
ஆங்கிலத்திலே கேட்கவும் நல்லாயிருக்கு.... :)
தங்கள் வலைப் பூவை இன்றுதான் பறித்தேன்.அதில்,highgate முருகனைப் பற்றிய செய்தி கண்டேன். உறங்கிக் கொண்டிருந்த அடுத்த புரவியைத் தட்டி எழுப்பியிருக்கிறீர்.நன்றி.லண்டன் முருகனை போற்றி பாடிய பாமாலையை விரைவில் பார்வைக்கு வைக்கிறேன்
அன்புடன் கோமதி நடராஜன்
i invite you to view my blog valluvam .1993 highgate murugan kaatchi tharukiraar.thank you for inspiring me to add my paamaalai on highgate murugan to my blog
கவிஞர் பெயர் தான் தெரியவில்லை
KRS
I heard this song first as a student. Swami Shanthananda (Swami Sivananda's disciple)gave a lecture in our college assembly(Ethiraj College-'73/'74).He taught us this song & the whole gathering sung along with him.
The Annalakshmi restaurants in Chennai, Kovai, Singapore etc. were started by him.I do not know if he wrote the song, but he taught us :)
Shobha
கவிஞர் பெயர் தான் தெரியவில்லை
KRS
I heard this song first as a student. Swami Shanthananda (Swami Sivananda's disciple)gave a lecture in our college assembly(Ethiraj College-'73/'74).He taught us this song & the whole gathering sung along with him.
The Annalakshmi restaurants in Chennai, Kovai, Singapore etc. were started by him.I do not know if he wrote the song, but he taught us :)
Shobha
Rather useful piece
I can suggest to visit to you a site on which there is a lot of information on a theme interesting you.
Post a Comment