66. அபூர்வமான முருகன் பாட்டு
ஒரு அபூர்வமான பாட்டு கேப்போமா இன்னைக்கு? அதுவும் இளையராஜா இசைல?
அதுல என்ன அபூர்வம்? இளையராஜா இசையில முருகன் பாட்டு சினிமாவுல ரெண்டே ரெண்டுதான் எனக்குத் தெரிஞ்சி வந்திருக்கு. கூட இருந்துச்சுன்னா சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன்.
அந்த ரெண்டுல ஒன்னு மகராசன் படத்துல வர்ர "எந்த வேலு வந்தாலும்" அப்படீங்குற பாட்டு.
இன்னொன்னு இந்தப் பாட்டு. ஆனா படம் வேற. இதப் பாடுனவங்களும் இளையராஜா இசையில ரெண்டு பாட்டுதான் பாடியிருக்காங்க. ஒன்னு இது. இன்னொன்னு குணா படத்துல வர்ர "உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்?" தெரிஞ்சதா? எஸ்.வரலட்சுமி. வெள்ளிமலை மன்னவனா, அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தப்பூவினில், ஏடு தந்தானடி தில்லையிலேன்னு நெறைய பாட்டு பாடுன எஸ்.வரலட்சுமிதான் இந்தப் பாட்டைப் பாடியிருக்காங்க.
ஆக...இளையராஜா இசையில ஒரு முருகன் பாட்டு. அதுவும் எஸ்.வரலட்சுமி பாடியது. படம்? கவரிமான்.
சரி. பாட்ட எழுதுனது யாரு? மகாகவி சுப்ரமணிய பாரதியார். அவர்தான் இந்தப் பாட்ட எழுதியது.
இப்ப சொல்லுங்க என்ன பாட்டுன்னு. கண்டுபிடிச்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ
வல்ல வேல்முருகன் தன்னை....
இதோ கேட்டு ரசிங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
(இந்தப் பாடலை மெயிலில் தேடி அனுப்பிய நண்பர் டாலியாவிற்கு நன்றி பல)
16 comments:
பாரதியார் கவிதைகள் படிக்கும் போது பல முறை இந்தப் பாடலைப் படித்திருக்கிறேன் இராகவன். இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். மீண்டும் இங்கெ கேட்க கொடுத்ததற்கு நன்றி.
முழுப்பாடலின் வரிகள் எங்கே?
// குமரன் (Kumaran) said...
பாரதியார் கவிதைகள் படிக்கும் போது பல முறை இந்தப் பாடலைப் படித்திருக்கிறேன் இராகவன். இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். மீண்டும் இங்கெ கேட்க கொடுத்ததற்கு நன்றி.
முழுப்பாடலின் வரிகள் எங்கே? //
எழுதச் சோம்பேறித்தனமா இருந்துச்சு. அதான்........ ஹி ஹி
ஜிரா,
நல்ல அருமையான பாடல். நான் இதுவரை கேட்டதில்லை. ராகமாலிகையாய் அமைந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரை மூன்று ராகங்கள் - சுருட்டி, அடாணா, ஷண்முகப்ரியா (இது இருக்க வேண்டாமா இந்த பாட்டுக்கு). கேஆர்எஸ் அண்ணா, திரசா ஐயா போன்றவர்கள் வந்து சரிதானா எனச் சொல்லலாம்.
பாடலுக்கு நன்றி ஜிரா.
ராகவன்,
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் ...அப்படினு ஒரு பாட்டு தெய்வவாக்குனு(இளைய ராஜாவே பாடி இருப்பார்) ஒரு படத்துல வரும் அதுவும் முருகன் பாட்டு தானே :-))
அடடா, நன்றிங்க ஜி.ரா. கொத்ஸ் உங்க விளக்கமும் அருமை. வாழ்த்துக்கள் உங்க சேவை.
arumaiyaana paaddu, thanks to Ragavan
பாரதியின் அருமையான பாடல்களில் ஒன்றை தந்ததற்கு நன்றி
குமரன் உங்களுக்காக முழுப்பாடலும் இதோ
பல்லவி
சொல்ல வல்லாயோ? - கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?
அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை -இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்
தில்லை யம்பலத்தே - நடனம்
செய்யும் அமரர்பிரான் -அவன்
செல்வத் திருமகனை - இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
அல்லிக் குளத்தருகே - ஒருநாள்
அந்திப் பொழுதினிலே - அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)
பாலை வனத்திடையே - தனைக் கைப்
பற்றி நடக்கையிலே - தன் கை
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)
ஜிரா
பாட்டுக்கு நன்றி! சொல்ல வல்லாயோ கிளியேன்ன்னுட்டு வரிகளைச் சொல்லாமப் போனா எப்படி? :-))
வரி கொடுத்த பராசரானுக்கு நீங்க வரி கட்டணும் ஆமா! :-)
//சுருட்டி, அடாணா, ஷண்முகப்ரியா (இது இருக்க வேண்டாமா இந்த பாட்டுக்கு). கேஆர்எஸ் அண்ணா, திரசா ஐயா போன்றவர்கள் வந்து சரிதானா எனச் சொல்லலாம்.//
//கேஆர்எஸ் அண்ணா//
-கொத்ஸ்...இது என்ன அநியாயம். அண்ணா பொறந்த நாள் அதுவுமா என்னைய அண்ணான்னு கூப்பிடுக்கிட்டு...
தம்பி...
தம்பிக்குத் தம்பி=ததம்பி ன்னு வேணும்னாச் சொல்லுங்க! :-))
அதானே ஷண்முகன் பாட்டுன்னா ஷண்முகப்ரியா இல்லாமலா?
மிக்க நன்றி பராசரன்.
இராகவன்,
முருகப் பெருமான் மீதான பாரதியார் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அருமையான பாடல்.
// இலவசக்கொத்தனார் said...
ஜிரா,
நல்ல அருமையான பாடல். நான் இதுவரை கேட்டதில்லை. ராகமாலிகையாய் அமைந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரை மூன்று ராகங்கள் - சுருட்டி, அடாணா, ஷண்முகப்ரியா (இது இருக்க வேண்டாமா இந்த பாட்டுக்கு). கேஆர்எஸ் அண்ணா, திரசா ஐயா போன்றவர்கள் வந்து சரிதானா எனச் சொல்லலாம். //
ஓ இது ராகமாலிகையா? அது கூடத் தெரியலை. சங்கீதக்காரங்க நீங்க எடுத்துச் சொன்னா எங்களுக்கும் தெரியுது. :)
// பாடலுக்கு நன்றி ஜிரா. //
இதெதுக்கு? :)
// வவ்வால் said...
ராகவன்,
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் ...அப்படினு ஒரு பாட்டு தெய்வவாக்குனு(இளைய ராஜாவே பாடி இருப்பார்) ஒரு படத்துல வரும் அதுவும் முருகன் பாட்டு தானே :-)) //
ஆமா ஆமா :))))) ஒத்துக்கிறேன். அதுவும் முருகன் பாட்டுதான். எனக்குப் பிடிச்ச பாட்டுதான்.
// ILA(a)இளா said...
அடடா, நன்றிங்க ஜி.ரா. கொத்ஸ் உங்க விளக்கமும் அருமை. வாழ்த்துக்கள் உங்க சேவை. //
சேவைன்னு சொல்றீங்களே...அது எலுமிச்சைச் சேவையா? தேங்காய்ச் சேவையா? தெளிவாச் சொல்லீட்டா நல்லது. முருகன் பாட்டு கேக்க வந்தவங்களுக்குப் பிரசாதமாக் குடுத்துறலாம்.
// கானா பிரபா said...
arumaiyaana paaddu, thanks to Ragavan //
நன்றி டாலியாவுக்குத்தான் சொல்லனும். அவங்கதான் பாட்டு அனுப்பிச்சாங்க. :)
//பராசரன் said...
பாரதியின் அருமையான பாடல்களில் ஒன்றை தந்ததற்கு நன்றி
குமரன் உங்களுக்காக முழுப்பாடலும் இதோ //
ஆகா பராசரன், நன்றி. நன்றி. சோம்பேறித்தனத்துல நான் கொடுக்காம விட்டத எடுத்துக் குடுத்துருக்கீங்க. நன்றி நன்றி. உங்களுக்கு வரி கட்டச் சொல்றாரு ரவி. எவ்வளவு கெட்டனும்?
@கொத்ஸ் நீங்கள் சொல்வது மிகவும் சரி. இது ஒரு ராகமாலிகாதான்.சுருட்டி, அடாணா, ஷண்முகப்பிரியா.திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி மிகவும் அருமையாகப் பாடுவார்.மீண்டும் கேட்கும் வாய்ப்புக்கு நன்றி ஜிரா
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
பாட்டுக்கு நன்றி! சொல்ல வல்லாயோ கிளியேன்ன்னுட்டு வரிகளைச் சொல்லாமப் போனா எப்படி? :-))
வரி கொடுத்த பராசரானுக்கு நீங்க வரி கட்டணும் ஆமா! :-) //
ஜனவரியா? பிப்ரவரியா? அதையும் சொல்லீருங்க. ஜன வரி போடுற ஒங்கள என்ன செய்ய?
////கேஆர்எஸ் அண்ணா//
-கொத்ஸ்...இது என்ன அநியாயம். அண்ணா பொறந்த நாள் அதுவுமா என்னைய அண்ணான்னு கூப்பிடுக்கிட்டு...
தம்பி...
தம்பிக்குத் தம்பி=ததம்பி ன்னு வேணும்னாச் சொல்லுங்க! :-))//
இதென்ன கொடுமை. கொத்சுக்குச் சின்ன வயசு. ஒங்கள அண்ணன்னு கூப்புடுறாரு. ரொம்பப் பேசுனீங்கன்னா பெரியப்பான்னு கூப்புடச் சொல்லீருவேன்.
// அதானே ஷண்முகன் பாட்டுன்னா ஷண்முகப்ரியா இல்லாமலா? //
அப்ப எல்லா சண்முகன் பாட்டுலயும்ம் சண்முகப்பிரியா இருக்குமா? இல்ல எல்லாப் பாட்டும் சண்முகனுக்குப் பிரியந்தானா?
// வெற்றி said...
இராகவன்,
முருகப் பெருமான் மீதான பாரதியார் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அருமையான பாடல். //
ஆமாம் வெற்றி. ரொம்ப அருமையான பாடல். ரொம்பவுமே வித்தியாசமான கூட்டணி. இந்த மாதிரி மாணிக்கங்கள் நெறைய இருக்கு. நமக்குத்தான் தெரியலை.
கே.வி.மகாதேவன் இசையில கே.பி.சுந்தராம்பாள் நெறைய முருகன் பாட்டுகள் பாடியிருக்காங்க. ஆனா மெல்லிசை மன்னர் இசையிலையும் பாடியிருக்காங்க. ஞாயிறும் திங்களும் படத்துக்காக. ஆனா படம் வரவேயில்லை. :( பாட்டுகள் வெளிவந்திருக்கு. யாருக்காவது ஞாயிறும் திங்களும் பாட்டுகள் கெடைச்சா குடுங்க.
// தி. ரா. ச.(T.R.C.) said...
@கொத்ஸ் நீங்கள் சொல்வது மிகவும் சரி. இது ஒரு ராகமாலிகாதான்.சுருட்டி, அடாணா, ஷண்முகப்பிரியா.திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி மிகவும் அருமையாகப் பாடுவார்.மீண்டும் கேட்கும் வாய்ப்புக்கு நன்றி ஜிரா //
தி.ரா.ச எனக்கு ஒரு ஐயம். சுருட்டின்னு சொல்றீங்களே..அதுவும் செஞ்சுருட்டியும் ஒன்னா? வெவ்வேறயா? ஒருவேளைச் சுருட்டியையே நல்லாச் சுருட்டுனா அது செஞ்சுருட்டியோ?
Post a Comment