Monday, May 21, 2007

கொஞ்சி கொஞ்சி வா குஹனே....

முருகனை பலவிதமான ரூபங்களில் பார்த்து அனுபவித்துள்ளார்கள் அவனது பக்தர்கள்.அதுவும் குழந்தை வடிவில் பாலமுருகனாக அழகு கொஞ்சும் தமிழில் வர்ணித்தவர் திரு பெரியசாமித் தூரன் அவர்கள்.இந்தப் பாட்டைக் கேட்டாலே முருகன் தவழ்ந்து வருவது போல இருக்கும்.கொஞ்சிக் கொஞ்சி முருகனை அழைத்து நம்மையெல்லாம் அவனிடமே கொண்டு சென்றுவிடுகிறார்.பாடல் நன்றாக இருந்தாலும் அதைப் பாடுபவரும் நன்றாக பாடவேண்டுமே. அந்தக் குறையும் இல்லாமல் நீக்குகிறார் திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ தன்
இனிய குரலில் அருமையாகப் பாடி.பாடலின் வரிகள் கீழே படிக்கவும்.
ராகம்:- கமாஸ் தாளம்:- ஆதி
பல்லவி

கொஞ்சி கொஞ்சி வா குஹனே
முருகனே கொஞ்சி கொஞ்சி வா (கொஞ்சி.. கொஞ்சி..)

அனுபல்லவி

அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல் சதங்கை கொஞ்ச
கஞ்ச பதம் பெயர்ந்து என் நெஞ்சம் மகிழ்திடவே (கொஞ்சி... கொஞ்சி..)

சரணம்

பிஞ்சு மதி அணிந்த செஞ்சடை ஈசனும்
அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும்
கொஞ்சி மகிழ் குமரா முருகா
அஞ்சுடர் வடிவேலா
தஞ்சம் உன்னை அடைந்தேன்
மிஞ்சிய அன்போடு....(கொஞ்சி கொஞ்சி)


பாடலை கேட்க இங்கே "> கிளிக் செய்யவும்

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) May 21, 2007 10:27 PM  

கொஞ்சி கொஞ்சி வா குகனே
கமாஸ் முருகா...
கமான் முருகா...
என்பது போல் இருக்கு திராச.

//அஞ்சல் அஞ்சல் எனவே செஞ்சொல்//
அப்படியே ஜல் ஜல் சதங்கை சப்தம் தான் இங்கு!
தூரனின் அழகான பாடல்! நன்றி திராச.

குமரன் (Kumaran) May 22, 2007 11:14 PM  

பாலமுருகன் மிக அழகாக இருக்கிறான் தி.ரா.ச. அவனைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன்.

இன்னொரு முறை வந்து பாடலைக் கேட்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) May 23, 2007 11:57 AM  

வணக்கம் கேஆர்ஸ்.இந்தப்பாட்டை என்னுடைய நண்பரின் செல் போனில் கேட்டவுடன் அதை தேடி எடுத்து போட வேண்டும் என்று நினைத்தேன். முருகன் அருளால் அதுவும் நிறைவேறியது.மிகவும் இனிமையான பாடல்.

தி. ரா. ச.(T.R.C.) May 23, 2007 11:59 AM  

வாங்க குமரன். கல்யாண பிஸியிலும் முருகன் அருளுக்கு வந்து விட்டீர்களே. மெதுவாக வந்து கேளுங்கள்.சென்னை வருபோது தெரிவியுங்கள்

G.Ragavan May 23, 2007 4:46 PM  

குழந்தை முருகன் என்றால் அழகல்லவா..தமிழல்லவா...அதனால்தான் சொற்கள் பொற்சொல்லாக விழுந்திருக்கின்றன.

அஞ்சல் என்று சொல்வது செஞ்சொல். அதாவது அடைக்கலம் என்று படைக்கலமாக வருவது முருகன் அருள். அப்படிச் சொல்வது செம்மைப் பண்பல்லவா. அந்தச் செஞ்சொல் சொல்லும் கஞ்சமலர்த்தாள். அருமை. அருமை. மிகவும் ரசித்தேன்.

Sethu Subramanian February 21, 2009 5:52 PM  

>>அஞ்சன மணிநீல மஞ்சன உமையாளும்<<
I'd like to know the meaning for this phrase.
anjcanam means either black or collyrium (mai in Tamizh). manjcanam means "ablution" (abhishekham or nIrATTam in Thamzih).
anjcana maNi = black gem
nIla manjcana = ????

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP