சிங்கார வேலவன் வந்தான்
இன்று கிருத்திகை. முருகனைப் பற்றி நினைக்கவேண்டாமா? அவன் எப்பேற்பட்ட வேலவன். சிங்கார வேலவன். வேலவனா யார் இவன்? என்று கேட்டால் வேரிமலர்ப்பதமும் வேலும் அயிலும் மின்ன வெற்றி மயிலான் நிகர் அற்ற அழகன் இவன் என்றும் கூறலாம்.
முருகன் அருளில் அன்போடு அழைத்தால் எப்படி வருவான் தெரியுமா? படித்தும் கேட்டும்தான் பாருங்களேன்.
ராகம்:- ஆனந்தபைரவி தாளம்:- ஆதிபல்லவி
சிங்கார வேலவன் வந்தான் எந்தனை ஆள
சிங்கார வேலவன் வந்தான் (சிங்கார)
அனுபல்லவி
பொங்காதர வோடு அடங்கா மகிழ்வோடும்
பெருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினியடை
துங்கவடிவினொடு (சிங்கார)
சரணம்
ஸ்கந்தன் பணியும் அன்பர் சொந்தன் கருணை கொள்
முகுந்தன் மருகன் முருகன்
முந்தன் வினை பயந்த பந்தந்தொலைத்து அருளை
இந்தா இந்தா என்று ஏழைகுடி முழுதும் வாழ
அருள்புரிய (சிங்கார)
என்ன ஒரு வார்த்தைஜாலம் பாருங்கள்
ஸ்கந்தன் சொந்தன் முகுந்தன் பந்தம் இந்தா இந்தா
யார் இந்த மாதிரி முருகனை அனுபவிக்க முடியும்?
நம்ப பாபநாசம் சிவன்தான் கொஞ்சு தமிழில் கொஞ்சுகிறார்
திருமதி. சௌமியா அவர்கள் தன் இனிய குரலில் பாடிய இந்தப் பாடலைக் கேட்க<"இங்கே கிளிக் செய்யவும்">
11 comments:
ஆனந்த பைரவி - பெயருக்கு ஏத்தா மாதிரி கேட்கும் போதே சந்தோஷப் பட்டு தாளம் போட வைக்கிற ராகம். அதில் முருகனைப் பத்தி பாடினா கேட்கவா வேணும்.
நல்ல தேர்வுதான் ஐயா!
//மயிலினியடை
துங்கவடிவினொடு //
துங்க எனில் என்ன திராச?
பாடல் வரிகள்தான் எத்தனை அழகு முருகனைப்போலவே!
அருமையான பாடலை இட்டிருக்கிறீர்கள் தி.ரா.ச...
கொத்ஸு சொன்னதைப் போலவே ஆனந்தபைரவின்னாலே ஆனந்தம்தான்...
ஆமாம் கொத்ஸ் மனக்கவலை போக்கி மனதுக்கு ஆனந்தம் அளிக்கும் ராகம்தான் ஆனந்தபைரவி ராகம் .அதுவும் முருகன் பேரில் தமிழ்ப் பாட்டு என்றால் கேட்கவா வேண்டும்
வணக்கம் மருத்துவ்ர் ஐய்யா.
மருத்துவ குணநலன்படியும் ஆனந்தபைரவி ராகத்திற்கு ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் தன்மை உண்டு என்கிறார்கள்.
வணக்கம் ஷைலஜா. மயிலின் இனிய இடையோடு ஒப்புக்கு இணையாக உருவம் கொண்டவன் முருகன். மயிலின் தலையிலிருந்து ஆரம்பித்து அதன் இடைவரை பார்த்தால் ஒரேமதிரி இருக்கும். அதுபோல முருகனின் உருவமும் சீராக ஒல்லியாய் இருக்கும் . போகரின் பழனி ஆண்டவரின் உருவத்தைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா அதுபோல.
அருமையான இராகத்தில் அழகான பாடல். கேட்க கேட்க இனிமை.
கல்லான நெஞ்சையும் உருக்கும் ஆனந்த பைரவி இராகம்
Very nice 👍👌
Thanks
மிகவும் அருமை
Post a Comment