019: அசுரர் தம்மை வென்ற வடிவேலன்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்
நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்
மெட்டு: காவடிச்சிந்து
இயற்றியவர்: அண்ணாமலை ரெட்டியார்
பாடியவர்கள்: பம்பாய் சகோதரிகள்
14 comments:
ஏதாகிலும் சொற்பிழையோ எழுத்துப் பிழையோ இருந்தால் சுட்டிக் காட்டுமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.
மிக அருமையான காவடிச் சிந்துப் பாடல், குமரன்!
எ.பி.யோ, சொ.பி.யோ ஒன்றும் இல்லை!
இருப்பினும், கேட்டதற்காகச் சொல்லுகிறேன்!
நீனிலம் என்பதை, நீநிலம் என எழுதலாமோ?
வேண்டாம்!
நீள்=நிலம் என்பது நீனிலம் என்றே வரும்!
நீநிலம் என்றால் குழப்பம் வரலாம்!
:))
முமு
காவடிச் சிந்து சி சரோஜா சி லலிதாவின் குரல்களில் இழைகிறதுமனதை நிறைக்கிறது.
ஷைலஜா
மிகவும் நல்லதொரு காவடிச் சிந்து. இதை இயற்றிய அண்ணாமலை ரெட்டியாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.
அவர் வாழ்ந்த வீடு கழுகுமலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் சிறப்பான பராமரிப்பு இன்றி.
ஆமாம் எஸ்.கே. நீனிலம் என்பதே சரியானது. கேட்டுக் கொண்டதற்காகச் சொன்னதற்கு நன்றிகள். :-)
பம்பாய் சகோதரிகள் என்றே அறிவேன். அவர்கள் பெயர்களை இன்று தெரிந்து கொண்டேன். நன்றி ஷைலஜா.
அண்ணாமலை ரெட்டியார் என்று மனம் சொன்னது. ஆனால் அந்தப் பெயர் நினைவிற்கு வரவில்லை. அருணாச்சல கவிராயரின் பெயர் தான் வந்தது. அப்போது இணையத்தில் தேடிப் பார்க்கவும் நேரமில்லை. அதனால் உறுதிபடுத்திக்கொண்டு சொல்லலாம் என்று விட்டுவிட்டேன் இராகவன். இப்போது அவர் பெயரை பதிவில் இட்டுவிட்டேன்.
பாலன்
வடிவேலன்
உயர்சீலன்
அனுகூலன்
என்று படிக்கும் போதே காவடி நடையாடுகிறது குமரன்!
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து வித்தகர் ஆயிற்றே!!
நன்றி குமரன் சிந்துப் பாடலுக்கு!
குமரா!!
முருகனுக்குப் பிடித்த காவடி- சிந்து; மிக அருமையாக இருந்தது.
யோகன் பாரிஸ்
நன்றி இரவிசங்கர். ஆமாம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள் எல்லாம் அருமையாக இருக்கின்றன.
நன்றி யோகன் ஐயா.
நீணிலம் என்பதே சரி.
இதை அண்ணாமலை ரெட்டியார் இயற்றவில்லை. பெரியசாமி தூரன் இயற்றியது.
இதை அண்ணாமலை ரெட்டியார் இயற்றவில்லை. பெரியசாமி தூரன் இயற்றியது.
Post a Comment